எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

கம்பன், தஸ்தயேவ்ஸ்கி பற்றிய இலக்கியப் பங்களிப்பில் சுசீலாம்மாவும் அம்மா இலக்கிய விருது பெற்ற முனைவர் சிங்கை லெக்ஷ்மி அவர்களும்.

கம்பன் தொட்ட சிகரங்கள் என்ற தலைப்பில் மார்ச் 27 ஆம் தேதியன்று காரைக்குடிக் கம்பன் விழாவில் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அன்னை சுசீலாம்மா அவர்கள் உரையாற்றினார்கள். அது அன்றே விஜயா பதிப்பகத்தாரால் நூலாகவும் பதிப்பிக்கப்பட்டது. அதற்காகவும் தஸ்தயேவ்ஸ்கியின் நூல்களைத் தமிழில் கொணர்ந்ததற்காக ரஷ்யன் கல்சுரல் செண்டரில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய பாராட்டு விழாவுக்காகவும் அம்மாவுக்கும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் பணிவான வணக்கங்களையும் செலுத்துகிறேன். வாழ்க வளமுடன் அம்மா என்னும் தேவதை.  
அத்துடன் தமிழக அரசால் அம்மா இலக்கிய விருது பெற்ற முனைவர் சிங்கை லெக்ஷ்மி அவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரின் தமிழ்ப்பணியும் போற்றுதலுக்குரியது. பல்வேறு ஆய்வு நூல்களும் கட்டுரைத் தொகுப்புகளும் எழுதிய இவர் சென்ற நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கில் செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள் என்ற தலைப்பில் என் படைப்புகள் பற்றியும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். நமது செட்டிநாடு இதழின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும். 


கம்பர் விழா புகைப்படங்கள். 
தமிழ் ஹிந்துவிலிருந்து. 
தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்க் குரல்
மதுரை பாத்திமா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ஏ.சுசீலா, ரஷ்ய இலக்கிய மேதை பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘நிலவறைக் குறிப்புகள்’ ஆகிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ரஷ்யாவுக்குப் பயணம்செய்து, கதை நிகழ்ந்த இடங்களையும் பார்த்துவந்திருக்கிறார். தஸ்தயேவ்ஸ்கியின் உலகப் புகழ்பெற்ற இலக்கிய ஆக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலாவுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், சென்னையில் வருகின்ற ஏப்ரல் 7-ல் ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, தென்னக ரஷ்யக் கலாச்சார நிலைய துணைத் தலைவர் மிகயீல் கார்ப்பட்டோவ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். எம்.ஏ. சுசீலாவின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றி எழுத்தாளர்கள் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ராஜ கோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோர் பேசுகிறார்கள்.

ருஷ்யக்கலாசார மையமும் விஷ்ணுபுர இலக்கிய வட்டமும் இணைந்து தஸ்தயெவ்ஸ்கியின் மொழியாக்கங்களுக்காக சுசீலாம்மாவுக்கு நிகழ்த்திய பாராட்டு விழாவில்.


 யூ ட்யூப் காணொளி

ஏற்புரை அற்புதம் அம்மா !!! வாழ்த்துக்களும் அன்பும். 

4 கருத்துகள்:

 1. எம்.ஏ.சுசீலா அம்மாவிற்கு விருது வழங்கிய விழா பற்றிய சிறப்புத் தொகுப்பு மிகவும் பயனுள்ள தகவல்.

  பதிலளிநீக்கு
 2. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜம்பு சார்

  நன்றி முத்துசாமி சகோ

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...