சனி, 31 ஆகஸ்ட், 2013

வலைப்பதிவ சகோதரர்களின் புத்தக வெளியீடும் அகநாழிகை புத்தக உலகமும்.

அகநாழிகை புத்தக உலகம் சைதாப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வலைப்பதிவர் சகோ . தேவன் அதன் ஒவ்வொரு புத்தகத்துக்கும் சிறிய அழகான விமர்சனங்கள் கொடுத்து வருகிறார். அங்கே  வலைப்பதிவர் மாநாட்டுக்கு முதல் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வலைப்பதிவ சகோதர்கள் சதீஷ் சங்கவி மற்றும் வீடு திரும்பல் மோகன் குமாரின் புத்தகங்கள் வெளியிடப்படுகிறது.


 சதீஷ் சங்கவியின் ” இதழில் எழுதிய கவிதைகள் “ என்ற கவிதைத் தொகுப்பை ஈரோடு தாமோதர் சந்துரு அண்ணன் வெளியிட தண்டோரா மணிஜி பெற்றுக் கொள்கிறார். வாழ்த்துரை வால் பையன் அருண்.

மோகன் குமாரின் ” வெற்றிக் கோடு “ என்ற தன்னம்பிக்கைக் கட்டுரைகள் கொண்ட புத்தகத்தை கேபிள் சங்கர் வெளியிட ஜாக்கி சேகர் பெற்றுக் கொள்கிறார். வாழ்த்துரை அன்பிற்கினிய தோழி பத்மஜா நாராயணன்.

புத்தகங்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன. எண்ணம் என்னும் தோட்டத்தில் புதிய விதை இடுகின்றன. நம் மனதை மலரச் செய்கின்றன.

புத்தகங்கள் பலரைச் சென்று அடைந்து பெயர் பெறவும். அகநாழிகை புத்தக உலகம் மனிதர்களின் அகக் கண்ணைத் திறக்கவும்.,  அனைவரும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் சங்கவி

வாழ்த்துக்கள் மோகன் குமார்

வாழ்த்துக்கள் அகநாழிகை பொன் வாசுதேவன்.

அருகே இருந்து வாழ்த்த இயலாவிட்டாலும் பெருமிதமாய் உணரும் உங்கள் அன்புச் சகோதரி தேனம்மை லெக்ஷ்மணன். வாழ்க வளமுடன், நலமுடன். வாழ்க வையகம். !!!

4 கருத்துகள் :

Senthilkumar Nallappan சொன்னது…

Summa summavai paarkka vandhen
Paarththapin thaan unarnthen
Naan niraivana karuththu sumaiyodu
Selluhiren endru.

சே. குமார் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செந்தில்குமார் நல்லப்பன்

நன்றி குமார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...