எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 ஆகஸ்ட், 2013

சுதந்திரம் பெற்றோமே.. தன்னிறைவு பெற்றோமா.


ல்லரசு நாடாகும் தகுதி பெற்றிருக்கிறது இந்தியா.. ஆனால் தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டதா. மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படும் தேசம் நம்முடையது.

 “government of the people by the people and for the people,”டெமாக்ரடிக் கண்ட்ரி. அரசை நாம்தான் தேர்வு செய்கின்றோம். ஒவ்வொரு லெஜிஸ்லேடிவ் மெம்பரையும் நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். வாக்குச் சீட்டு என்னும் வலிமையான துருப்புச் சீட்டு நம் கையில் இருக்கு. ஆனால் நமக்கு பொதுவான அரசியல் ஆர்வமோ அறிவோ இல்லை. நமக்கு யார் பணம் கொடுப்பாங்கன்னு ஓட்டுப் போடுறாங்க மக்கள். தற்காலிகமான பலன்களில் மூழ்கி நிரந்தர பலன்களை இழக்கிறார்கள். காமராஜ் மாதிரி, கக்கன் மாதிரி சேவை செய்யும் அரசியல்வாதிகள் நம் இளைஞர்களில் இருந்து வரவேண்டும். 

 
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் நாம் நம் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு முன் அமைந்த சிங்கப்பூர் இன்று தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டது.


நமக்கென்ன என்று எல்லாவற்றிலும் விலகிச் செல்லும் மனப்பான்மைதான் காரணம். நாடென்ன செய்தது நமக்கு அப்பிடின்னு நாம நாடு பத்தி எல்லாம் சிந்திப்பதில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

இடையூறுகள் ஏற்பட்டால் அதைக்களைய முற்படாமல் அதில் வாழ்ந்து விட்டு அதிலிருந்து தப்பித்துச் செல்வது பற்றித்தான் யோசிக்கிறோமே ஒழிய ஆக்கப்பூரவமாய் அதற்கான தீர்வு என்ன என்று யோசிப்பதில்லை.இன்று மதங்கள் சார்ந்து கட்சிகள் இருக்கின்றன. இஸங்கள் சார்ந்து கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கொள்கைகளையும் காலத்துக்கு ஏற்ப வளைத்துக் கொள்கிறார்கள். கட்சி விட்டுக் கட்சி தாவும் அரசியல்வாதிகள். பிடிக்காட்டா இன்னொரு கிளைக் கட்சி ஆரம்பித்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் இவங்களத்தான் பார்க்கிறோம். 

”Unlimited power is apt to corrupt the minds of those who possess it. ”  
  
அப்பிடின்னு சொல்றாரு  வில்லியம் பிட். அதிகாரத்தை அவங்ககிட்ட சமர்ப்பணம் செய்துட்டு நாம அவங்க கிட்ட நியாயத்தை எதிர்பாக்கிறோம். ஆனா அந்த அளவற்ற அதிகாரம் அவங்க மனதை கெடுத்துடுது.
மாணவர்களிடம் அபரிமிதமான இளமைச் சக்தி இருக்கிறது. அதை சினிமா தியேட்டர்களிலும், டிஸ்கோதேக்களிலும், வெற்று கேளிக்கைகளிலும் செலவிடுகிறார்கள். செல்ஃபோனையும் இணையத்தையும் வெறும் கேளிக்கைக்காக மட்டும் உபயோகப்படுத்துகிறார்கள்

வேலையில்லா திண்டாட்டத்தை ஈடுசெய்ய நம் நாட்டிலேயே தனிப்பட்ட தொழில் முனைவோர்கள் அதிகரிக்க வேண்டும். மாதுரி கோஷ் என்ற வங்காளப் பெண்மணி  ஒரு வங்கியே தொடங்கி நடத்துகிறார்

மாணவர்களுக்குத் தம்மால் முடியும் என்ற உந்துதல் இருக்கவேண்டும்.
ஆக்கப்பூர்வமான அரசியலில் மாணவர்கள் ஈடுபடவேண்டும். ஆன்மப் பயிற்சி இருக்க வேண்டும். எம் எஸ் உதயமூர்த்தி அவர்கள் சொன்னது போல (மக்கள் சக்தி இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்திருந்தார் அவர். ) இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு இயக்கம் அமைத்து அரசியலில் ஈடுபடவேண்டும்

தேசிய நதிநீர்ப் பங்கீடும் தேசிய நெடுஞ்சாலைப் பராமரிப்புப் போல சீர் செய்யப்பட வேண்டும். ஆடி 18 இல் தண்ணீர் இல்லாமல் குழாயில் குளித்தது இந்த வருடமாகத்தான் இருக்கும். அது போல தேவையான மின்சாரம், பெட்ரோல் போன்றவற்றுக்காக நாம் மற்ற நாடுகளை எதிர்பார்த்து இருக்க வேண்டி இருக்கு.  இவைகளை நாமே தயாரிக்க என்னென்ன  செய்யலாம்னு இளைஞர்கள்தான்  முயற்சிகள் எடுக்கணும்

spiritual values and moral values கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படணும்.  சுதந்திரம் என்பது தன்னிறைவு பெறுவதற்காக பாடுபட்டுப் பெற்றது. நாம் தன்னிறைவு பெற்றிருக்கிறோமா. என யோசியுங்கள்.

மாணவர்கள் நாட்டு நடப்பில் கவனம் செலுத்தணும். படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல. ராஜ ராஜசோழனின் குடவோலை  முறை, முதல் இன்றைய எலக்ட்ரானிக் வோட்டிங் எலக்‌ஷன் முறை வரை தெரிஞ்சுக்கணும். நாட்டு நடப்பு, அரசியல், எல்லாம் தெரிஞ்சுக்கணும்.
கரிகாலன் கட்டிய கல்லணை. அரசர்கள் செய்த மக்கள் நலத் தொண்டுகள். அக்பர் சாலை தோறும் நிழல்தரும் மரங்கள் வளர்த்தார்னு படிக்கிறோம். இப்ப அரசாங்கம் நம்பர் போட்டு வளர்க்குது. அந்த அளவுக்கு மரத்துக்குக்கூடப் பாதுகாப்பில்லை.

ஓட்டுப் போடப் போகணும். யார் போட்டியிடுறாங்கன்னு பார்த்து சீர் தூக்கி ஓட்டுப் போடணும். தார்மீகக் கடமை ஓட்டுப் போடுதல். யார் வந்தா நல்லது செய்வாங்கன்னு பார்த்து வாக்களிக்கணும். ஓட்டுப் போடப்போறவங்களுக்கு நிரந்தர நன்மை பயப்பது எதுன்னு, அல்லது யார் வந்தா நல்லது செய்வாங்கன்னு அவங்களுக்கு அறிவுறுத்தணும். 

அக்கம் பக்கத்திலுள்ள மக்களின் குறைகள் என்னென்ன, அவற்றை எப்படித்தீர்க்கலாம்னு முதலில் முயற்சிகள் செய்யலாம். மக்களின் சுகாதாரம், அரசு ஆஸ்பத்ரி, ரேஷன் பொருட்கள் , சாலை வசதி, தண்ணீர் வசதி , அடிப்படை வசதிகள், எல்லாம் கிடைக்கிறதான்னு பார்க்கணும்

எல்லாவற்றுக்கும் கையூட்டு கொடுப்பதை முதலில் நிறுத்தணும். ராஜு முருகன் இது பற்றி விகடனில் விலாவாரியாக எழுதி இருந்தார்.
அரசியல் அறிவு பெற்றிருக்கணும். யார் ஆட்சியில் இருக்காங்க. என்னென்ன பதவியில் இருக்காங்கன்னு தெரியணும். தினம் செய்தித்தாளில் மற்றும் தொலைக்காட்சியில் அரசியல் சம்பந்தமான செய்திகள் பார்க்கப்படணும். படிக்கப்படணும். 

பெண்களும் அரசியலில் ஈடுபடணும். இந்திரா காந்தி அன்னையும், ஜெயலலிதா அம்மாவும்., மார்க்கரெட் தாட்சரும் திடீர்னு வந்துடல. முயற்சியாலும், பயிற்சியாலுமே ஜெயிக்க முடியும். தங்களுக்கான உரிமைகள் என்னென்னன்னு ஒவ்வொரு பெண்ணும் தெரிஞ்சிருக்கணும். 33 சதவிகிதம் இன்னும் கிடைக்கலை. கிடைக்கலைன்னு ஓய்ந்து போயிடாம தொடர்ந்து போராடணும். பெண்கள் அரசியல்ல ஈடுபாடு காட்டணும். OBSERVE  பண்ணனும். ஆக்கபூர்வமா க்ரிட்டிஸைஸ் பண்ணனும் .

நாகரீகமான அரசியல்னா என்னன்னு மக்களுக்கு நம்  செயல்கள் மூலம் தெரியவரலாம். நம்ம நாடு செகுலார் கண்ட்ரி.  பெரும்பான்மை இந்துக்களாக இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரர்கள். பல பாஷை பேசும் மக்கள் இருக்காங்க. இந்த அளவு பலமத, மொழி, இனம் கலந்த நாடு உலகத்திலேயே வேற ஏதும் கிடையாது

முதலில் எல்லா மொழிகளையும் மொழிகளாகப் பாருங்கள். நம்மைச் சுற்றி அகழிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். எல்லா மொழிகளையும் முடிந்தால் கற்றுக் கொள்ளுங்கள். மொழி என்பது கம்யூனிகேஷனுக்கு மட்டுமே. காழ்ப்புணர்வு கொள்ள அல்ல.

மயில்சாமி அண்ணாத்துரை . சந்திராயன் என்ற விண்கோளை ஏவக் காரணமானவர். இதுபோல நீங்க கண்டுபிடிக்கும் புதிய கண்டுபிடிப்புக்கள் நாட்டை உயர்த்தும்

சின்னக் கிராமத்தில் பிறந்தேன். சின்னப் பள்ளிக்கூடத்தில் படிச்சேன் .” இதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. நீங்கள் எவ்வளவு முயற்சி எடுக்கின்றீர்களோ அவ்வளவு உயரம் கிடைக்கும். அதுவும் அரசியல் என்றால் என்னவோ , ஏதோ நம் வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாதது என்று ஒதுங்க வேண்டாம்.

நல்ல குடிமகனாக நீங்கள் ஆற்றும் ஒவ்வொரு தொண்டும் தேச சேவைக்கு ஈடானதே.

கார்கில் குளிரில், வாகா பார்டரில் நம்மைக் காக்கும் எல்லைத் தெய்வங்கள் இருப்பதால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடிகிறது. அங்கே பணி செய்யும் ஒவ்வொரு வீரருக்கும்  ஒரு ராயல் சல்யூட்

பொருளாதாரத் தன்னிறைவு பெற்றிருக்கிறோமா எனப் பார்த்தால் தண்ணீரிலிருந்து எல்லாவற்றையும் விலைக்கு வாங்குகிறோம். காற்றைத்தான் வாங்கலை. முடிஞ்ச அளவு அதையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் உடையவர்களாக இருக்கணும். எரிபொருளுக்கு மாற்று ஜட்ரோப்பா கார்க்கஸ், சோலார் பவர், விண்ட் மில். தற்போது கல்லை உடைத்து வீடு கட்ட செயற்கை மணல் தயாரிப்பது பற்றி அரசுத் தரப்பில்  முயற்சிகள் எடுத்து வர்றாங்க. செயற்கை மணல் பயன்பாடு ஆற்றில் மணல் குவாரிகள் செயல்படுவதையும் ஆற்றை மலடாக்குவதையும் தடுக்கும்

ஒவ்வொர்வரும்  spiritual aa தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆன்மப் பயிற்சி முக்கியம். எந்தச் சூழ்நிலைக்கும் கைதியாகாமல் இருக்கணும். ஊழல், லஞ்ச லாவண்யங்களுக்குத் துணை போகக்கூடாது.சுரண்டலைத் தடுக்கணும். நேர்மை ஒன்றே ஜெயிக்கும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு இதுதான் நம்ம தாரக மந்திரமாக இருக்கணும்.

அரசு அதிகாரிங்க, அரசியல் தொடர்புடையவங்க, போன்றவர்களில் பிள்ளைகள் ஏன் ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபட்டு முன்னோடிகளா திகழக் கூடாது. தினம் ஒரு முறையாவது ந்யூஸ் பார்க்கணும். செய்தித்தாள்களைப் படிக்கணும். அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துகிட்டு இருக்குன்னு தெரிஞ்சுக்கணும். துக்ளக்., ஹிந்து, போன்றவையும் எண்டிடிவி, டைம்ஸ் நவ் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் பாருங்க. 

மாணவர்கள் தங்கள் கல்லூரிக்குன்னு ஒரு எஃப் ஒலிபரப்பு முயற்சி செய்யலாம். 

வேலைகளை ப்ளான் பண்ணனும். சுயவிமர்சனம், சுய பார்வை முக்கியம், செல்ஃப் அனலைசிஸ் ஒவ்வொரு கட்டத்திலும் அவசியம்.ஒவ்வொரு முயற்சியையும் தொடர்ந்து செய்யுங்கள். 

விவேகானந்தர் இளைஞர்களுக்குச் சொன்னது (யூத் எனர்ஜி. ) விழித்திரு, ( ARISE AWAKE AND STOP NOT TILL THE GOAL IS REACHED).

ஐயப்பன் கோயிலுக்குப் போறவங்களப் பாத்தீங்கன்னா முன்ன போறவங்கள பார்க்க மாட்டாங்க. பின்ன போறவங்கள பார்க்க மாட்டாங்க. தலையில் இருமுடி கட்டு வேற இருக்கும். மலைப் பகுதி வேற. ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைப்பாங்க. அடுத்த ஸ்டெப்புலதான் அவங்க கவனம் இருக்கும். அந்த ஒவ்வொரு அடியும் அவங்கள உச்சத்துக்குக் கொண்டு செல்லும். எனவே உங்கள் அடுத்த அடியில் கவனமா இருங்க.. அடுத்த ஸ்டெப்பை அழுத்தமாக வைச்சு நடந்தா.. அடுத்த அடுத்த ஸ்டெப்புகளே உச்சியில் சேர்க்கும். 

அரிஸ்டாட்டில், ப்ளேட்டோ, சாக்ரட்டீஸ் போன்றவர்களின் அரசியல் கொள்கைகளைப் படிக்கணும். நம்முடைய சட்டங்கள் எப்படி அமல்படுத்தப்படுதுன்னு தெரிஞ்சுக்கணும். ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் அறிவை வளர்த்துக்கணும். 

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, கௌன் பனேகா கரோர்பதி, ஆயிரத்தில் ஒருவன், ஜாக்பாட், சொல்வதெல்லாம் உண்மை, டிவி சீரியல்கள் உறவுச் சிக்கல்களை வளர்க்கின்றன. ஆபாச டிவி விளம்பரங்களைப் புறக்கணியுங்கள். 

கர்னல் துர்காபாய், பிரிகேடியர் முத்துலெட்சுமி போன்ற ராணுவப் பணிபுரிந்த செவிலியர் தங்கள் வாழ்வையே , தங்கள் வாழ்வையே நாட்டுக்காக அர்பணிப்பு செய்திருக்காங்க. அன்னா ஹசாரே ஊழல் ஒழிக்க உண்ணாவிரதப் போராட்டம் செய்திருக்கிறார். இந்தச் சிறுவயதில் எதற்காகவும் ஒடிந்து போகாதீர்கள்.  Remember that there is nothing stable in human affairs; therefore avoid undue elation in prosperity, or undue depression in adversity.

கல்வியில் , உத்யோகத்தில், தொழிலில் சாதிக்க முடியும் என நினைத்தால் அரசியலிலும் நிச்சயம் நேர்மையாக சாதிக்கலாம். நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்.

3 கருத்துகள்:

  1. உழைப்பையும் , உழைப்பர்களையும் நம்பாத எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை .நம் நாட்டில் உழைப்பதற்க்கு பெரும்பாலானனோர் தயாராக இல்லை .எந்த மூலதனமும் இல்லாத சிங்கை இந்த அளவிற்கு முன்னேறி இருப்பது உழைப்பினால் தான் .

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...