வியாழன், 22 ஆகஸ்ட், 2013

நூலிழைகள்...

நூலிழைகள்;-
**********************
கழட்டிய உடைகளின் மேல்
நிர்வாணமாய் மிதந்தேன்..
நைந்த உடையை
உருவிச் சென்றார்கள்,
நீரில் துவைப்பதற்கு,
பின் நெருப்பில் எரிப்பதற்கு.
மூன்றுநாள் நீரிலும்
மூன்றுநாள் மண்ணிலும்
மூன்றுநாள் விண்ணிலும்
உலாத்தினேன்.
தலைப்பிரட்டையாய்..
இன்னொரு உடலில்
நூலிழையாய்ப் புக.

டிஸ்கி :- இந்தக் கவிதை ஜூன் 15 - 30 , 2013 அதீதத்தில் வெளியானது.


6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...!

சே. குமார் சொன்னது…

கவிதை அருமை...
வாழ்த்துக்கள் அக்கா.

K.T.ILANGO சொன்னது…

அருகில் காதறுந்த ஊசியொன்று....

K.T.ILANGO சொன்னது…

அருகில் காதறுந்த ஊசியொன்று....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்

நன்றி குமார்

நன்றி இளங்கோ .. ஆம்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...