எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 பிப்ரவரி, 2011

தகிதா புத்தக வெளியீடும் .. டிஸ்கவரி இலக்கிய சந்திப்பும்..






முகப்புத்தக நண்பர்., புதிய “ழ” கவிதை இதழ் நடத்துபவர்., தகிதா புத்தகங்கள் பதிப்பாளர்., ( திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார்.) பேராசிரியர்., மணிவண்ணன் நேற்று டிஸ்கவரி புக் பேலசில் ஒரு இலக்கிய கூட்டத்துக்கு அழைத்திருந்தார்.

எங்கள் முகப் புத்தக நண்பர்கள் ., கயல்., அன்பு., வசு., செல்வா., ஜேபி., பாகி ( கிருஷ்ணன்.. டெக்கான் க்ரானிக்கிள்) ., விஜய் மகேந்திரன்., ஜெயவேல் ., ஈழவாணி ஜெய் தீபன்., பாரதி கிருஷ்ண குமார்., அந்தோணி அர்னால்ட்., மணிவண்ணின் மாணாக்கர்கள் பாபு., குழந்தை வேலப்பன்., வேடியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

மணிவண்ணன் வரவேற்புரை அளிக்க., யுகமாயினி சித்தன் தலைமை தாங்க.,பேராசிரியர் இராம குருநாதன் முன்னிலை வகிக்க., வெளி ரங்கராராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்க ., பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்றினார்..

தகிதா பதிப்பகத்தின் இரண்டு புது நூல்கள் வெளியிடப்பட்டன. கங்கை மகனின்,” ஆத்மாலயத்”தை யுகமாயினி சித்தன் வெளியிட வெளி ரங்கராஜன் பெற்றுக் கொண்டார்.. இருவரின் பணியும் போற்றற்குரியது. யுகமாயினி இதழை சித்தன் சிறப்பாக நடத்தி வருகிறார். வெளி ரங்கராஜன் அடுத்து ரோட்காவின் ஸ்பானிஷ் நாவலை (பெண் விடுதலை குறித்தானது.. 1936 இல் வெளிவந்தது ) நாடகமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார். வரும் ஏப்ரலில் நாடகம் மேடைக்கு வரும் என கூறினார்.

இளைய கவிஞர் வைரசின் ,” நிறைய அமுதம். ஒரு துளி விஷம் “ என்ற புத்தகத்தை சித்தன் வெளியிட இராம குருநாதன் பெற்றுக் கொண்டார். ராமகுருநாதன் சாகித்ய அகாதமி., கன்னிமரா., வாசிப்பாளர்கள் சங்கம்., தமிழ் ஆலோசனைக் குழு போன்றவற்றில் தனது பங்கை சிறப்பாக ஆற்றிக்கொண்டிருக்கிறார்.

கவிஞர் ஈழவாணியின் புத்தகம் ., “ தலைப்பு இழந்தவை”யும் ( அவர் முதல் வெளியீட்டில் கலந்து கொள்ள இயலாததால் ) மறுபடியும் சித்தன் அவர்களால் வெளியிடப்பட்டது.. விஜய் பெற்றுக் கொண்டார்.

பாரதி கிருஷ்ண குமார் .,” ராமையாவின் குடிசை “ என்ற ஆவணப் பட இயக்குனர். கும்பகோணம்., வெண்மணி., ஆகியவற்றை ஆவணப் படமாக பதிவு செய்தவர். தற்போது கல்வி குறித்தான ஒரு குறும் படமும் இயக்கி வருவதாக கூறினார்..

அனைவரும் மிகச் சிறப்பாக பேசினார்கள். ஈழவாணி தன் படைப்பு குறித்தும் அது எப்படி செதுக்கி சிறப்பாக வந்தது என்பது பற்றியும் பேசினார். குழந்தை வேலப்பன் ( இவர் மணிவண்ணணின் மாணாக்கர்.. ஆண்மை தவறேல் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.. இது வெளியீட்டுக்காக காத்திருக்கிறது .. இவரும் ) தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்..

மிகச் சிறந்த கலந்துரையாடல் போல இருந்தது அது.. கவிதை மற்றும் இலக்கியம் குறித்தும்., தற்காலத்தில் அவற்றின் நிலை குறித்தும் ., தமிழ் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு நன்கு வாழும் எனவும்., ஆக்கபூர்வமான கருத்துக்களும் ., தர்க்கங்களும் எடுத்து வைக்கப் பட்டன.. அதை அனைவரும் ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்கள்..

புதிய “ழ” வில் என்னுடைய கவிதைகள் வெளி வந்திருக்கின்றன. நாணற்காடனின் நாவல் குறித்தும் ., தகிதாவின் பணி குறித்தும் நானும் பேச அழைக்கப் பட்டேன்.. என்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டேன். ஒரு புத்தகம் கூட வெளியிடாமல் தமிழின் மிகப் பெரிய இலக்கியவாதிகளுடன் சரிசமமாக அமர்ந்து தேநீருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது தமிழ் தந்த வரம். வலைத்தளமும்., முகப் புத்தகமும் தந்த முகம்.

தகிதாவின் மற்ற நூல்களும் ( மொத்தம் 14 ) மறு அறிமுகம் செய்து வைக்கப் பட்டன.. என் கையில் நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில் வந்தது..!!!

புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்களுக்கு உங்கள் படைப்புக்கள் நிறைய பேரை சென்றடைந்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.. தகிதாவும்., டிஸ்கவரியும் தமிழ் மொழி போல் தழைத்து வளர வாழ்த்துக்கள்..

17 கருத்துகள்:

 1. அக்கா நேத்து அங்க இருந்தீங்களா ?? நான் வந்து கேபிள் சங்கர் புத்தகம் வாங்கினப்ப கூட்டம் நடந்துக் கொண்டு இருந்தது

  பதிலளிநீக்கு
 2. மிக்க மகிழ்ச்சி அக்கா. உண்மையில் ஒரு சிறு அளவான திருவிழாபோல நிகழ்வு அமைந்தது.

  பதிலளிநீக்கு
 3. நன்றி எல் கே. உங்கள் ஆதரவு தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
 4. அன்பின் தோழி தேனம்மைக்கு வணக்கம்.'சும்மா' என்ற உங்கள் வலைப்பூவில் தகிதா வெளியீடுகள் குறித்த இந்த கட்டுரை காலத்தின் பதிவாக இருக்கும்.மிக அருமையான பதிவாக இருந்தது. உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். விழாவை கூர்மையாக கவனித்து காகிதங்களில் குறிப்பெடுத்துக் கொள்ளாமல் மனதில் உள்வாங்கிக்கொண்டு அதை அப்படியே அழகாக பதியனிட்ட உங்கள் எழுத்துக்களுக்கு என் வணக்கங்கள்.உங்களின் விமர்சனக் கலையை தொடருங்கள் .தமிழ் மின்னட்டும்.நன்றி

  பதிலளிநீக்கு
 5. அக்கா.... படங்களும் தகவலும் காணும் போது, நான் மிஸ் பண்ணிட்டேனே என்று இருந்தது.... அக்கா, உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
  சூப்பர், அக்கா!

  பதிலளிநீக்கு
 6. புகைப்படங்களோடு செய்திவெளியிட்டு அசத்திட்டீங்கக்கா வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

  பதிலளிநீக்கு
 7. enakkum mikka magizhchi akka, oru nalla ilakkiya sandhippu adhu, adhil pangu kondathil naan migavum perumai padugiren

  kayalvizhi

  பதிலளிநீக்கு
 8. நல்லதொரு இலக்கிய நிகழ்வை அறியத் தந்தமைக்கு நன்றி தேனம்மை.

  பதிலளிநீக்கு
 9. ஆமாம் கார்த்திக்., வேடியப்பன்., மணி.,சித்து., மலிக்கா.,கயல்., சரவணக்குமார்.

  பதிலளிநீக்கு
 10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 11. //வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்//

  ஜே ஜே

  பதிலளிநீக்கு
 12. உங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அக்கா

  பதிலளிநீக்கு
 13. பகிர்வுக்கு நன்றி தேனக்கா.//
  weldone post

  பதிலளிநீக்கு
 14. நன்றி ராமலெக்ஷ்மி., ஆயிஷா., ஜலீலா., சசி., குமார்., சதீஷ்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...