எனது நூல்கள்.

புதன், 9 பிப்ரவரி, 2011

உடைகள்.. புண்கள் தேவை.. முதல் மரியாதை..(3)

உடைகள்:-
****************
எத்தனையோ நிறங்கள்
கொண்ட உடைகளும்
அவ்வப்போது அணிகின்றன
அழுக்கின் நிறத்தை..


ஒரு முறைதான்
உடுத்தப்பட்ட அவை
என்றும் இழப்பதில்லை
தாம் ஊடுருவியிருந்த
உடலின் மணத்தை..

யார் யாருக்கோ
தானமளிக்கப்பட்டபின்
அவர்கள் அழுக்குகளும் சுமந்து..

எத்தனை வெள்ளாவிகள்..
உலர் சலவைகள் கண்டாலும்
ஒரு போதும் அவை
திரும்புவதேயில்லை..
உற்பத்தியின் புனிதத்துக்கு....

==============================================

புண்கள் தேவை :-
************************
எரிச்சலும் ரத்தமும்
வரும் வரை..
ஏதுமற்ற போதில்
சொறிந்து கொள்ள..
மூக்கு முட்டக் குடித்து
மூத்திரச் சந்தில் நின்று
விரட்டும் மேலதிகாரியையோ.,
மடியாத பெண்ணையோ.,
குரங்குச் சேட்டையாய்
காற்றைத் திட்டி.,
குட்டிச் சுவரை
எட்டி உதைத்து..
சீழ் பிடித்து
ஈக்கள் அமரும் வரை..
அல்லது தடுமாறி விழுந்து
வாந்தி எடுக்கும் வரை..
============================================
முதல் மரியாதை:-
****************************
கருப்பர்..
முனியையா..
பாண்டி முனி..
எனக்கு மட்டும் ஏன்
பழம் பெயர்..
கருக்கருவாள் சுமந்து
கண்கள் உருட்டி
நாக்கை நீட்டி
வெய்யிலில் காய்ந்து
இருத்தப் பட்டிருக்கிறேன்..
வருடம் ஒருமுறை
கண்காட்சி.,
பொருட்காட்சி.,
புத்தகத் திருவிழா போல்
எனைக் காண வருகிறாய்.
சிறிது நேரம் அமர்ந்து பார்
என் அமர்விடத்தில்..
சாராயம்., சுருட்டு.,
மிருக ரத்தம் தெளித்து
கோராமையாக்கி விட்டு
உன் பேர் சொல்லி
பலர் உண்பது அறிவாய்..
விட்டுவிடு என
ஓடி விடக்கூடும் நீ..
யாருக்கு முதல் மரியாதை
என்ற கோபத்தில்
உன் கை அரிவாள்
பிடுங்கி வெட்டப்படும்போது..
டிஸ்கி ..3..:- அன்பு மக்காஸ் உங்க கவிதைகளை தனித்தனியா இணைய பத்திரிக்கைகளுக்கோ அல்லது பத்ரிக்கைகளுக்கோ அனுப்புங்க.. ஒன்றில் வெளிவராவிட்டால் அடுத்ததுக்கு அனுப்பலாம்.. ஆர்வக் கோளாறில் எல்லா கவிதைகளையும் எல்லாவற்றுக்கும் அனுப்பி வைக்க வேண்டாம். பத்ரிக்கைகளுக்கு அனுப்பினால் 2 மாதம் பொறுக்க வேண்டுமாம். இணையம் என்றால் குறைந்தது ஒரு வாரம்.. இல்லாவிட்டால் அடுத்தடுத்து நமது கவிதைகள் வெளியிடுவது குறைந்து விடும்.. மேலும் எல்லாவற்றிலும் நமது ஒரே கவிதைகளை பார்த்து நமக்கே போரடிக்கக் கூடும்.. எல்லாவற்றையும் சுவாரசியமாக கொண்டு செல்வது நமது கவனத்தில்தான் இருக்கிறது..:))

22 கருத்துகள் :

ராமலக்ஷ்மி சொன்னது…

கவிதைகளும் படத் தேர்வும் அருமை.

பலருக்கும் பயனாகும் தகவலைப் பகிர்ந்ததும் நன்று.

Chitra சொன்னது…

அக்கா, வாழ்த்துக்கள்.
அருமையான குறிப்புகள் தந்து இருப்பதற்கு நன்றிகள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>எத்தனை வெள்ளாவிகள்..
உலர் சலவைகள் கண்டாலும்
ஒரு போதும் அவை
திரும்புவதேயில்லை..
உற்பத்தியின் புனிதத்துக்கு....

toching line madam

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

one post one rhyme is good i think.

தினேஷ்குமார் சொன்னது…

வணக்கம் அக்கா
நெடுநாள் கடந்து வந்து சந்திக்கிறேன் தங்கள் கவிதைகளை மூன்று கவிதைகளும் நல்ல வரிகளை தாங்கிப்பிடித்துள்ளன முனியப்பனின் கருக்கருவாள் பிடிப்போல

Unknown சொன்னது…

ஒரு போதும் அவை
திரும்புவதேயில்லை..
உற்பத்தியின் புனிதத்துக்கு...//

அருமையான வரிகள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஒரு போதும் அவை
திரும்புவதேயில்லை..
உற்பத்தியின் புனிதத்துக்கு....//


அருமை அருமை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//உன் பேர் சொல்லி
பலர் உண்பது அறிவாய்..
விட்டுவிடு என
ஓடி விடக்கூடும் நீ..//

பாவம் அய்யனார்.....

அம்பிகா சொன்னது…

அருமையான கவிதைகள். படங்களும் அருமை.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//எல்லாவற்றையும் சுவாரசியமாக கொண்டு செல்வது நமது கவனத்தில்தான் இருக்கிறது..:))//


இது சூப்பர் அட்வைஸ்....

வினோ சொன்னது…

முதலா கவிதை எனக்கு பிடித்திருக்கிறது :)

ஹேமா சொன்னது…

நான் உங்கள் கவிதைகளை உடனுக்குடன் அந்தந்தப் பக்கங்களில் படித்துவிடுகிறேன் எப்போதும் !

கோமதி அரசு சொன்னது…

//எல்லாவற்றையும் சுவாரசியமாக கொண்டு செல்வது நமது கவனத்தில்தான் இருக்கிறது..:))//

தேவையான குறிப்பு.

அருமையான கவிதை தேனம்மை மூன்றும்.

சசிகுமார் சொன்னது…

அருமை

சுந்தரா சொன்னது…

முதல் கவிதை மிகவும் பிடித்திருந்தது. வார்த்தைகள் அசரவைத்தன.

வாழ்த்துக்கள் தேனம்மை!

சக்தி கல்வி மையம் சொன்னது…

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

மிக அருமையான சிந்தனை..
///////

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதைகள் அருமை...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அழுத்தமான கவிதைகள் அக்கா.

rajasundararajan சொன்னது…

'உடைகள்' ஒரு சிறந்த கவிதை.

//எத்தனையோ நிறங்கள்
கொண்ட..// என்னும் தொடக்கமே பன்முகத் தன்மைக்குள் இட்டுச்சென்று விடுகிறது.

உடைகள் என்பது 'உடல்கள்' என்று உள்ளுறை கொண்டு என் முதல் வாசிப்பை நிகழ்த்தினேன். ஆனால் எல்லாவற்றிற்கும், எ.டு. கவிதை, கதை என இவற்றிற்கும் கூட இது குறியீடாவதைக் கண்டேன். (இக் கருத்தில், //வெள்ளாவிகள்..
உலர் சலவைகள்..// தன்னிலை விளக்கங்கள் ஆகின்றன.)

//ஒரு போதும் அவை
திரும்புவதேயில்லை..
உற்பத்தியின் புனிதத்துக்கு....//

ஆகவே, no more reconciliation fantasies, please! என்றும் உணர்த்துகிறது. வாழ்க!

பழமைக்கு வரிந்துகட்டுவோர் இதைப் பதிவேற்றியதான குறிப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. அவர்களும் வாழ்க!

magudapathy சொன்னது…

உற்பத்தியின் புனிதம் ...நல்ல வார்த்தை பிரயோகம் அக்கா......கவிதை நலம் நீங்கள் நலமா ..?

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி., சித்து., செந்தில்., தினேஷ்., கே ஆர் விஜயன்., மனோ., அம்பிகா., வினோ., ஹேமா., கோமதி., சசி., சுந்தரா., கருன்., குமார்., அக்பர்., ராஜசுந்தர் ராஜன்., மகி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...