எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

வள்ளுவர் கோட்டத்தில் கலைமாமணி விருது விழாவுக்கு முன்..

வள்ளுவர் கோட்டம் நுழைவாயிலின் முன்..
பெண்களும் நாதஸ்வரம் வாசிக்கிறாங்க..


இளம் கலைஞர்கள் அநேகம்..

மேளக் கலைஞர்களும் வெயிட்டிங்.. கலைஞருக்காக..

கரகம் சுமந்த பச்சைக் கிளிகள்..

திருவிழாக்களிலும் தேரோட்டங்களிலும் ஒற்றை ஆள் ஆடப் பார்த்தது.. இப்போது கண்கள் குளிர பலரும் அழகாய் ஆடினார்கள்..

பொய்க்கால் குதிரை.. குருதையில மருதைக்குப் போகலாம்..:))

இந்தக் பொய்க்கால் குதிரை ஆட்டத்தை டெல்லியில் நேருவின் முன் ஆடி விருது வாங்கிய பெங்களூர் கலைஞர்கள் ( கணவன் மனைவி ) இருக்கிறார்கள். அவர்கள் மன்னார்குடி பாமினி உரமணி ஆலையில் வேலை செய்த பக்கத்து வீட்டு இன்ஜினியர் அங்கிளின் மாமனார் மாமியார். !!!

இது உருமி மேளமா..

அழகாக ஆட்டமிட்ட ரெட்டைக் குதிரைகள்..
சீக்கிரம் போ என் செல்லப் புரவியே.. செல்லக்கிளி காத்திருப்பா..

பாண்ட்..??
அரிதாரம் சுமந்த அர்சுன மகராசா..
மகராசா நடக்கும் போது பின் தொடர்ந்து எடுத்தது..
தெருக்கூத்துக் கலைஞர்கள்..

வேட்டைக்கு வந்து கோட்டைக்குப் போகும் சுடலை மாடசாமி..

தந்தனத்தோம் என்று சொல்லியே..

புலி வருது..புலி வருது..
வெள்ளம் வந்தாலும் தப்பிச்சுருவோம்..
அந்தரத்தில் ஆட்டம்.

எதையும் பற்(று)றிக் கொள்ளாமல் சமாளிக்கிறோம் .. பாருங்க..

புலி மேல புலி..

கிலி வேண்டாம் புலிதான்.. கடிக்காது..
இன்னும் எத்தனை முறை பல்டி அடிச்சா அந்த உயரத்தை எட்டலாம் சொல்லுங்க மக்களே..
அதாரு அங்கே.. இந்த மகராசாவோட மகாராணி நான்தான்..

ALL I WANNA SAY THAT THEY DONT REALLY CARE ABOUT US.. இந்த மைக்கேல் ஜாக்சன் பாட்டின் ம்யூசிக் நம்ம பறைதான்.. மச்சி..

அக்கா நீயும் வர்றியா..
அடுத்த சுற்றிலும் இதே பாண்ட்..
ரெடியா இருங்க.. சங்கமம் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நம்ம பெண்ணுக தஞ்சை சின்னப்பொன்னு குமாரும்., பி. முருகேஸ்வரியும்., எஸ். மாலதியும் இன்னைக்கு கலைமாமணி விருது வாங்குறாங்க.. பார்க்கணுமப்பு..
காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் திருவிழாவில் எப்போதோ பார்த்தது.. கியாஸ் லைட்டில் ., மிட்நைட்டில்.. மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயில் திருவிழாவின் போதும். வாழைப்பழம் வைத்து வாளால் துண்டாக்குதல்.. கரகத்தோடு படுத்தமாதிரி சுற்றிச் சுழலல் என.. எங்கள் கல்லுரியில் மகாராணி என்ற அக்கா இந்த மாதிரி அழகாக கரகம் எடுத்து ஆடுவார்.. ஆடிக்கொண்டே புடவை கட்டிக் காண்பிப்பார். ரூபாய் நோட்டை கண் இமைகளில் எடுத்தல்.. ஊசியை கண் இமைகளில் மடக்கி எடுத்தல் என.. மலரும் நினைவுகள் மலர்ந்து விட்டது விதம் விதமாய் பூத்துக் கிடந்த இவர்களைப் பார்த்து..

சீக்கிரம் ரெடியாகுங்க.. கலைமாமணி விருது வாங்கப் போற நம்ம மக்கள் க. கருப்பண்ணன்., மு. இளங்கோவன்., கே.ஏ. பாண்டியன்., எம். திருச்செல்வம்., சிவகங்கை வி. நாகு., டி. சேகர்., செ. முத்துராமலிங்கம்., எல். ஜான்பாலா .. இவங்க எல்லாரையும் வரவேற்கணும்.. சபையேறிய மக்களுக்கு நம்ம சார்புல ஒரு வந்தனம் வந்தனம் வந்தனம்.. !!!
டிஸ்கி:- மக்களே .. அரங்கத்துக்குள்ள காமிராவை கொண்டு செல்ல விடலை.. எனவே என் தம்பியை ( தூங்கிக்கொண்டிருந்தவரை தொந்தரவு செய்து மாலை 3. 45 க்கு ) வரச் சொல்லி காமிராவை கொடுத்தனுப்ப வேண்டியதாகிவிட்டது.. நம்ம காமிரா இல்லாட்டி அப்புறம் அப்பிடி நாம் போற இடத்துல இருக்குற சிலை., கலை ., செய்யிற சமையல் எல்லாத்தையும் பகிர்றது.. :)) ஏற்கனவே அதை தரையில் போட்டு ரிப்பேர் பார்த்து ஒரு சைஸா ஏதோ சமாளிக்குது.. எனவே கண் போல அதை பாதுகாப்பா வைக்க வேண்டியதா போச்சு..:)) ஆனா அரங்கத்துக்குள்ள மக்கள் செல்போனில் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.. நாம அந்நியன் மாதிரி நேர்மையா எடுக்காம வந்துட்டோம்..:))

17 கருத்துகள்:

 1. அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.

  கலைகள் வாழ்க!

  காட்சிப்படுத்தி எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி தேனம்மை.

  பதிலளிநீக்கு
 2. நிறைவான தொகுப்பு !
  வரும் காலங்களில் தேனக்காவிற்கு கலை-மா-மணி பட்டம் பெற இது ஒரு முத்தாய்ப்பு என்றே தோன்றுகின்றது...
  வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 3. உங்க வர்ணிப்புக்கு முன்னால சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, மக்கள் தொலைகாட்சி [தமிழ்ல எழுதலைன்னா மருத்துவர் அடிச்சிருவார்] ராஜ் டிவி, விஜய் டிவி தோற்று போச்சு போங்க.....
  படங்கள் அருமையா கலக்கலா இருக்கு....

  பதிலளிநீக்கு
 4. அழகாக படம் பிடித்து அருமையாக கமெண்ட் செய்து அசத்திட்டீங்க தேனம்மை.

  பதிலளிநீக்கு
 5. படங்கள் பருவால்லை ஆனா அதுக்கு நீங்க கொடுத்த ஒவ்வொரு கமெண்டும் ஒரு கலைமாமணி பட்டத்துக்கு நிகர். அதாவது வெளங்கலை சாமிகளோவ்......

  பதிலளிநீக்கு
 6. அக்கா மிக அருமையாக படங்களை வரிசை படுத்திட்டீங்க!. இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்த பாக்கும்போதும், கேமரா உள்ள எடுத்துப் போக அனுமதி இல்லை என்று சொல்லும் போதும் ஒரு விசயம் ரொம்ப லேட்டா புரிய வருது. நமீதாவுக்கும், ஆர்யா போன்ற இரண்டாம் கட்ட கோமாளிகளுக்கு கலைமாமணி பட்டம் கொடுத்து , அரசாங்க செலவுல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போட்டு ஒரு வேலை கலைஞர் டி.வி ல ஒளிபரப்பி காசு பாத்திடுவாங்களோ?

  பதிலளிநீக்கு
 7. ம‌ற்ற‌வை க‌லைஞ‌ர் டீவியில் காண்க‌.
  அதுக்குத்தானே அனுஷ்கா, த‌ம‌ன்னாவுக்கு எல்லாம் க‌லைமாம‌ணி அவார்டு கொடுத்தார் க‌லைஞ‌ர்.

  பதிலளிநீக்கு
 8. திருவிழாவில் கூட இப்படி
  பார்க்கமுடியாது,
  தெரு விழாபோல் இருந்தாலும்
  திருமதி தந்த திரு விழா
  அருமை தோழி...

  பதிலளிநீக்கு
 9. அருமையான தொகுப்பு. படங்களும், கமெண்ட்களும் கலக்கல்.

  பதிலளிநீக்கு
 10. அருமையான தொகுப்பு. படங்களும், கமெண்ட்களும் கலக்கல்.

  பதிலளிநீக்கு
 11. நன்றி ராமலெக்ஷ்மி., யுவா., மனோ., ஸாதிகா., பெயரில்லா., குமார்., வேடியப்பன்., வாசன்., சந்தான சங்கர்., ஜலீலா., அம்பிகா.

  பதிலளிநீக்கு
 12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 13. ஒரு திருவிழாவை கண்முன் நிறுத்திய படங்கள் அபாரம்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...