எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தொழில் தெய்வம்..

வியாபார யுத்தத்தில்
வாள் வீசும்
போர்வீரா..
வெற்றி பெறும் ஆவேசத்தில்
வீறு கொண்டு
வார்த்தை வீசி
உன்னையே துண்டாக்கி..

நாணயம் காக்காமல்
நூல்கண்டுச் சிக்கலுக்குள்
கழுத்து இறுகிக் கிடக்கின்றாய்..

அதிகப் பற்று வைத்ததனால்
அதிகப் பத்தாகி.,
அடகுக் கடையே
அனுபவப் பாத்யதையாய்..

வங்கி இருப்பும்.,
தங்க இருப்பும்.,
மங்கிய இருப்பாகி..

கடன் முளைத்து மரமாகி
உனை நீராய் உறிஞ்சுவதற்குள்
விட்டுவிட்டு வெளியேறு..
வேறுகளம் புகுந்துவிடு..

இட்ட கடன் முடித்திடுக..
திட்டமிட்டு தொழில் செய்க..

தொழில் விட்டு தொழில் மாறல்
தோல்வியல்ல..
தோற்று(ம்) வழி..

தொழில் தெய்வம்
என்றுணர்ந்தால் தோன்றும்
எங்கும் வெற்றியதே..

21 கருத்துகள்:

 1. கவிதை நன்று தேனம்மை. பொருத்தமான படமும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. //தொழில் விட்டு தொழில் மாறல்
  தோல்வியல்ல..
  தோற்று(ம்) வழி..

  தொழில் தெய்வம்
  என்றுணர்ந்தால் தோன்றும்
  எங்கும் வெற்றியதே..//

  very nice...

  பதிலளிநீக்கு
 3. //இட்ட கடன் முடித்திடுக..
  திட்டமிட்டு தொழில் செய்க..//

  அருமையா இருக்கு.....

  பதிலளிநீக்கு
 4. கடன் முளைத்து மரமாகி
  உனை நீராய் உறிஞ்சுவதற்குள்
  விட்டுவிட்டு வெளியேறு..
  வேறுகளம் புகுந்துவிடு..


  .....நல்ல அறிவுரை, அக்கா!

  பதிலளிநீக்கு
 5. தொழில் தெய்வம், நீங்கள் கவிதை எழுதாத விஷயமே என்றால் மிகையில்லை.

  பதிலளிநீக்கு
 6. தொழில் தெய்வம்
  என்றுணர்ந்தால் தோன்றும்
  எங்கும் வெற்றியதே.//

  செய்யும் தொழில் தான் தெயவம், அதில் காட்டும் திறமைதான் வெற்றி.

  அதை வலியூறுத்தும் கவிதை அருமை தேனம்மை.

  பதிலளிநீக்கு
 7. தேற்றும் வழி

  வாழ்த்துக்கள் அக்கா

  விஜய்

  பதிலளிநீக்கு
 8. தேனக்கா....எதைத் தொட்டாலும் கவிதையாகிறது உங்கள் எண்ணங்களில் !

  பதிலளிநீக்கு
 9. படம் சூப்பர்..எங்கிருந்து தான் இப்படி படம் கிடைக்குதோ? தேனம்மையின் கவிதைக்கு சொல்ல வேண்டுமா என்ன?
  அதன் சிறப்பை அந்தந்த வைர வரிகளே
  தம்மை பறை சாற்றிக் கொள்ளும்!

  பதிலளிநீக்கு
 10. உங்களிடம் இருந்து இப்படி ஒரு கவிதை எதிர்பாராதது...

  பதிலளிநீக்கு
 11. நன்றி கருன்., கார்த்திக்., ராமலெக்ஷ்மி., மாணவன்., மனோ., சித்து., ரமேஷ்., வேலு.,கோமதி., ஆயிஷா., விஜய்., ஹேமா., ஆர் ஆர் ஆர் ., பிரபா., சங்கவி., ஜெயந்த்., குமார்., பிரணவம் ரவிக்குமார்.

  பதிலளிநீக்கு
 12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...