எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆராதனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆராதனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 5 ஜூன், 2020
வியாழன், 5 மார்ச், 2015
அவள் விகடனில் ஆராதனாவும் ”ங்கா”வும்.
அவள் விகடனில் ஆராதனாவும் ”ங்கா”வும்.
” ஒரு ஊர்ல ஒரு தாத்தா.. ஒரு பேத்தி “ என்ற தலைப்பில் அவள் விகடனில் என் ”ங்கா” கவிதைத் தொகுதியின் நாயகி ஆராதனா பற்றியும் அவளது தாத்தா தாமோதர் சந்துரு அண்ணன் பற்றியும் வெளியாகி உள்ளது. அதில் அண்ணன் ”ங்கா” பற்றியும் ஆராதனா பற்றியும் அழகாகப் பகிர்ந்துள்ளார்கள் படித்துப் பாருங்கள்.

வியாழன், 13 நவம்பர், 2014
ஒற்றைச்சூரியனாய்...
1.ஒற்றைச்சூரியனாய்
நீ பிறந்தாய்.
சந்தோஷ மழையில்
வீடே வானவில்லானது.
2. முத்துக்களைப் போல
உருள்கிறது உன் புன்னகை
பார்வையால் கோர்த்து
ரசிக்கிறேன் நான்.
3. என்னைத்தவிர நீ
யாருக்கும் கொடுப்பதில்லை
உன் எச்சிலிட்ட முத்தம்.
4. சாமானைப் பரப்பி
ஜலதரங்கம் செய்வாய்
கூசும் காதுகளோடு ரசிப்பேன் நான்.
5. கடவுள் நம்பிக்கை
இல்லாதிருந்தேன்
மகளெனும் தேவதையைப்
பார்க்கும்வரை.
நீ பிறந்தாய்.
சந்தோஷ மழையில்
வீடே வானவில்லானது.
2. முத்துக்களைப் போல
உருள்கிறது உன் புன்னகை
பார்வையால் கோர்த்து
ரசிக்கிறேன் நான்.
3. என்னைத்தவிர நீ
யாருக்கும் கொடுப்பதில்லை
உன் எச்சிலிட்ட முத்தம்.
4. சாமானைப் பரப்பி
ஜலதரங்கம் செய்வாய்
கூசும் காதுகளோடு ரசிப்பேன் நான்.
5. கடவுள் நம்பிக்கை
இல்லாதிருந்தேன்
மகளெனும் தேவதையைப்
பார்க்கும்வரை.
வியாழன், 12 ஜூன், 2014
நிலவு படைத்த நிலாச்சோறு.
நிலா என்றதும் சித்திரா பௌர்ணமியும் நிலாசோறும் கதைகளும் மலரும் நினைவுகளாக வருவதுண்டு. இருளும் நிலவும் அதன் பால் ஒளியும் இன்னும் கவிஞர்களுக்கு மயக்கம்தரும் பாடற்பொருட்கள்தாம். சித்ரா பௌர்ணமிக்காக பகலில் பூஜை செய்வார்கள். இங்கே இரவில் நிலவுக்குப் பூஜை செய்திருக்கிறார்கள்.
நமது பண்பாடு, கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக நிலாச்சோறு கொண் டாடும் நிகழ்வுகள், இன்று கிராமங்களிலும் மறந்து போன நிலையில், ஈரோட்டில் தாமோதர் அண்ணன் அவர்கள் வீட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அவர்கள் பேத்தி ஆராதனா ( என் ”ங்கா”வின் நாயகி ) என்ற நிலவு படைத்த நிலாச்சோறு நிகழ்வைப் பற்றி முகநூலில் படித்தேன். காரைக்குடிப் பக்கம் சித்திரா பௌர்ணமி விழா உண்டு. இந்த நிகழ்வில் தைமாதப் பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. வித்யாசமாக இருந்ததால் இதை என் வலைத்தளத்தில் பகிர்கிறேன்.
தாமோதர் சந்துரு அண்ணன் முகநூலில் பகிர்ந்ததை இங்கே பகிர்கிறேன். இது போன வருடம் நிகழ்ந்தது.

செவ்வாய், 3 ஜூன், 2014
பூக்குட்டி வைத்த புதுப் பொங்கல்.
தமிழர்களுக்கே உள்ள ஒரு திருவிழா என்றால் அது பொங்கல்தான். ஒவ்வொரு வருடமும் தை மாதம் அறுவடை முடிந்த முதல் விளைச்சல் நெல்லிலிருந்து எடுத்த பச்சரிசியில் வெல்லமிட்டுப் பொங்கல் வைத்து விளைச்சலுக்கு வெப்பம்தந்து வெள்ளாமையைச் செழிப்பமாக்கிய சூரியனுக்கு நன்றி சொல்லிப் படைக்கும் திருநாளே பொங்கல். அதற்கு அடுத்த நாட்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த மாடு கன்னு ஆகியவற்றையும் பூசிக்கும் தினங்களாகக் கொண்டாடப்படுகின்றன.
என்னுடைய ”ங்கா” கவிதைத் தொகுதியின் நாயகியான ஆராதனாவின் முதல் பொங்கலுக்கு தாமோதர் சந்துரு அண்ணன் ஈரோடுக்கு அழைத்திருந்தார்கள். ஆனால் போக இயலவில்லை.அந்த பூக்குடி வைத்த புதுப்பொங்கல் நிகழ்வுகளை இங்கே பகிர்வதில் பெருமையடைகிறேன்.
தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி.தைப் பொங்கலன்று வீட்டில் பிறந்த முதல் பெண் குழந்தை முதல் பொங்கலிட அனைத்தும் செழிக்கும் என்று கொங்கு நாட்டில் பெண்மகவினைக் கொண்டாடுகிறார்கள்.

திங்கள், 25 ஜூன், 2012
சனி, 18 பிப்ரவரி, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)