எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 9 மே, 2026

முதலாம் அத்யாயம் மூன்றாம் ஸ்லோகம்

 முதலாம் அத்யாயம் மூன்றாம் ஸ்லோகம்

 

    தத் அஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி

லோகானாம் ஹிதகாம்யயா l

    யேன விக்ஞாத மாத்ரேண

ஸர்வ ஞானத்வம் ப்ரபத்யதே ll

 

பொருள்:-

தத் அஹம் = நான் சுயமாக இதைப்பற்றி

ஸம்ப்ரவக்ஷ்யாமி = முழுமையாக விவரிக்கிறேன்.

லோகானாம் = உலக மக்கள்

ஹிதகாம்யயா = நற்கதி பெற வேண்டி ( க்ஷேமத்துக்காக, நன்மைக்காக )

யேன = இதன்படி

விக்ஞாத மாத்ரேண = அரசியலின் இரகசிய தந்திரங்களைத் தெரிந்துகொண்டால் மட்டுமே

ஸர்வ ஞானத்வம் = சகல ஞானமும்

த்வம் ப்ரபத்யதே = தானே கைவரப்பெறும்/தானே ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.

 

விளக்கம்:- உலக மக்கள் நன்மை பெற வேண்டி அரசியலின் இரகசிய தந்திரங்களை நான் முழுமையாக விவரிக்கிறேன். இதன்படி இந்த இரகசிய தந்திரங்களைப் பற்றிய முழுமையான அறிவு பெற்றாலே போதும், அவர்களுக்குச் சகல ஞானமும் தானே கைவரப் பெற்று ஒளிவிட்டுப் பிரகாசிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...