செவ்வாய், 3 ஜூன், 2014

பூக்குட்டி வைத்த புதுப் பொங்கல்.

தமிழர்களுக்கே உள்ள ஒரு திருவிழா என்றால் அது பொங்கல்தான். ஒவ்வொரு வருடமும் தை மாதம் அறுவடை முடிந்த முதல் விளைச்சல் நெல்லிலிருந்து எடுத்த பச்சரிசியில் வெல்லமிட்டுப் பொங்கல் வைத்து விளைச்சலுக்கு வெப்பம்தந்து வெள்ளாமையைச் செழிப்பமாக்கிய சூரியனுக்கு நன்றி சொல்லிப் படைக்கும் திருநாளே பொங்கல். அதற்கு அடுத்த நாட்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த மாடு கன்னு ஆகியவற்றையும் பூசிக்கும் தினங்களாகக் கொண்டாடப்படுகின்றன.

என்னுடைய ”ங்கா” கவிதைத் தொகுதியின் நாயகியான ஆராதனாவின் முதல் பொங்கலுக்கு தாமோதர் சந்துரு அண்ணன் ஈரோடுக்கு  அழைத்திருந்தார்கள். ஆனால் போக இயலவில்லை.அந்த பூக்குடி வைத்த புதுப்பொங்கல்  நிகழ்வுகளை இங்கே பகிர்வதில் பெருமையடைகிறேன்.

தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி.தைப் பொங்கலன்று வீட்டில் பிறந்த முதல் பெண் குழந்தை முதல் பொங்கலிட அனைத்தும் செழிக்கும் என்று கொங்கு நாட்டில் பெண்மகவினைக் கொண்டாடுகிறார்கள். 


முளைப்பாரி கொட்டல், முதல் பொங்கல், நிலாச்சோறு ஆகியன சின்னஞ்சிறு தேவதைகளுக்கு நம் பாரம்பரியத்தையும் இயற்கை, வாழ்க்கை ஆகியவற்றின் சிறப்பையும் எடுத்துக்காட்டும் வண்ணம் இது அமைகின்றது.

இந்த நிகழ்வில் அண்ணனின்  இனிய நண்பர் நாஞ்சில் நாடன் அவர்கள் முதல் நாளே வந்திருந்து நாஞ்சில் நாட்டு சமையலை மேற்பார்வையிட்டு ஆராதனாவை வாழ்த்தியிருக்கிறார். இன்னும் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் மற்றும் வலையுலக, ஈரோடு பிரபலங்களும் சொந்தங்களும் வந்திருந்து வாழ்த்தியிருக்கிறார்கள். 


வீட்டில் புதுப்பானை வைத்து தாமோதர் சந்துரு அண்ணனின் அம்மா அவர்களும் பேத்தி ஆராதனாவும் அடுப்பைப் பற்றவைத்து ( டிசைன் செங்கல்லின் மேல் வைக்கப்பட்ட)  பானையில் பொங்கல் செய்கிறார்கள். அடுத்து ஆராதனா பழம் தேங்காய் வைத்த தட்டை அனைவரிடமும் கொடுத்து ஆசி வாங்கிக் கொள்கிறாள்.

வீட்டில் ஒரு முறை தீபதூபம் காட்டியபின்பு ( மூன்று கரும்புகளைக் கட்டி அதன் கீழ் வாழையிலை போட்டு விளக்கேற்றிப் படைக்கிறார்கள் . ) அதன் பின் மண்டபத்திலும் தீபதூபம் காட்டி அனைவருக்கும் விருந்தளித்திருக்கிறார்கள். மண்டப உள் அலங்காரம் மிக அருமையாக இருக்கிறது. அங்கேயும் முளைப்பாரித் தட்டுகளும், பானையும் வைத்து கரும்பும் கும்பமும் வைத்து அழகாகப் படைத்திருந்தார்கள். 

பெண்ணென்று பிறந்தாலும் ஆராட்டிச் சீராட்டி வளர்க்கும் கொங்குநாட்டில் பிறக்கவேண்டும் அதுவும் தாமோதர் சந்துரு அண்ணனின் குடும்பத்தில் பிறக்கவேண்டும். அப்படிப் பெருமைமிகு பேத்தியாய்ப் பிறந்த ஆராதனா அனைத்துக்கும் கொடுத்து வைத்தவள்தான். 

பொங்கலிட்ட பூக்குட்டிக்குப் பொங்குக மங்கலம் ! வாழ்வில் தங்குக பெருநலம் !!. திருநிறைச்செல்வி வாழ்க வளமுடன் !!!.

9 கருத்துகள் :

Rathnavel Natarajan சொன்னது…

மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

பால கணேஷ் சொன்னது…

உங்களின் கவிதைக் குழந்தைகளுக்கு உயிர் தந்த குழந்தைக் கவிதை வைத்த பொங்கல் செமை அழகு. வீட்டில் எல்லாருக்கும் செல்லம் அவள் என்பதில் வியப்பேதும் இல்லை... பார்த்ததுமே எங்கள் மனசையே பறிச்சுக்க அவளால முடியுதே...

தாமோதர் சந்துரு சொன்னது…

நன்றி பாலா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சந்துரு - வாழ்க வளமுடன் - செல்லப் பேத்தி ஆராதனா பொங்கல் வைத்து அனைவரையும் கவர்ந்தது அருமையான நிகழ்வு - க்லந்து கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை - பூக்குட்டி வைத்த புதுப் பொங்கல் - அன்பின் சந்துருவின் அருமைப் பேத்தி செல்லக் குட்டி ஆராதனா வைத்த பொங்கல் - கலந்து கொண்ட அனைவரும்வாழ்த்தி மகிழ்ந்த பொங்கல்- மிக்க மகிழ்ச்சி - க்லந்து கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை - பூக்குட்டி வைத்த புதுப் பொங்கல் - அன்பின் சந்துருவின் அருமைப் பேத்தி செல்லக் குட்டி ஆராதனா வைத்த பொங்கல் - கலந்து கொண்ட அனைவரும்வாழ்த்தி மகிழ்ந்த பொங்கல்- மிக்க மகிழ்ச்சி - க்லந்து கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை - பூக்குட்டி வைத்த புதுப் பொங்கல் - அன்பின் சந்துருவின் அருமைப் பேத்தி செல்லக் குட்டி ஆராதனா வைத்த பொங்கல் - கலந்து கொண்ட அனைவரும்வாழ்த்தி மகிழ்ந்த பொங்கல்- மிக்க மகிழ்ச்சி - க்லந்து கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Thenammai Lakshmanan சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி ரத்னவேல் சார்

மிக அருமையான வார்த்தைகளால் வாழ்த்தியமைக்கு நன்றி கணேஷ்

நன்றி தாமோதர் சந்துரு அண்ணா

அழகான வாழ்த்துக்கு நன்றி சீனா சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...