வியாழன், 26 ஜூன், 2014

சிகரம் ஸ்கிரிப்ட் 2.

சிகரம். ஸ்க்ரிப்ட்.:-
**************************


இதுதான் செலக்ட் செய்யப்பட்டது.

சீன் :- 1
**************

காரெக்டர்ஸ் :-
************************

1. பெண்ணின் அப்பா

2. அவரின் நண்பர்.


லொகேஷன்-
***********************

ஒரு வீட்டின் ஹால். அங்கு சோஃபாவில் இருவரும் கம்யூட்டரில் திருமணப் புகைப்படங்களைப் பார்க்கிறார்கள்.  அதில் மாப்பிள்ளை பெண்ணுக்குத் தாலி கட்டும் போது அனைவரும் சந்தோஷமாக அட்சதை தூவும் நிகழ்ச்சி. .

காமிரா அதிலிருந்து மீண்டு பெண்ணின் அப்பாவின் நண்பர் முகத்துக்கு க்ளோசப்பாக வருகிறது.
அவர் திரும்பி பெண்ணின் அப்பாவிடம் சிரித்தபடி கேட்கிறார்..

நண்பர்.:- டேய் உன் பொண்ணு கல்யாணத்துக்கே  நீயும் விருந்தாளி மாதிரி வந்தே., ! கலந்துகிட்டே,.!   சந்தோஷமா முடிச்சே .!! . எப்பிடிடா.. ?

பெண்ணின் அப்பா:- டேய் .. சிகரம் மேட்ரிமோனியல் மூலமா பொருத்தமான மாப்பிள்ளை பார்த்தேன்.!
( அப்போது கம்ப்யூட்டரில் சிகரம் மாட்ரிமோனியல் வெப்சைட்டில் மாப்பிள்ளைகள் ஃபோட்டோக்களைக் காட்ட வேண்டும்)

 சிகரம் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸில்  மொத்தமா இந்தியாவுக்கு டிக்கட் புக் செய்தேன். !!

( ஒரு சந்தோஷமான உறவினர் நண்பர்கள் கூட்டம் மார்டன் உடைகளில் அணைத்தபடியும் சிரித்தபடியும் ஃப்ளைட்டிலிருந்து இறங்கும் ஃபோட்டோவைக் காண்பிக்க வேண்டும்)

என் மகளுக்குப் பிடிச்ச நகை  அத்தனையையும் சிகரம் ஆன்லைன் ஷாப்பிங்கல வாங்கினேன்.!!

( ஒரு பெரிய நகைக்கடையில் பெண்ணின் அம்மா பெண் கழுத்தில் நெக்லஸ் வைத்து கணவரைப் பார்க்க வேண்டும். பெண் நாணத்தோடு அமர்ந்திருக்க வேண்டும்.  அப்பா புன்முறுவலோடு இருக்க வேண்டும். மூவரும் இருக்கும் இந்த போட்டோவைக் காண்பிக்க வேண்டும்)
பின் காமிரா அப்பா முகத்துக்கு க்ளோசப்பாக வர வேண்டும். அப்போது அவர்.,

 'முக்கியமா. எனக்குப் பணத்தேவை ஏற்பட்ட போதெல்லாம் சிகரம் மணிசேஞ்சர் மூலமா அடுத்த செகண்ட் கிடைச்சது.!! சிகரத்தோட  சேவையின் சிறப்பு என்னன்னா.. உலகத்தில எங்கே இருந்தாலும் எந்த நேரத்திலும் தேவை ஏற்பட்ட  அடுத்த நிமிஷம் நம்ம பணத்தை சிகரம் மணி சேஞ்சர் மூலமா பரிமாற்றம் செய்துக்கலாம் .
'
(என்று சொல்லும்போது மணி கவுண்ட் செய்யும் மெஷினைக் காண்பிக்க வேண்டும். சந்தோஷமாகக் கை நிறைய அப்பா பணத்தை வாங்கும் காட்சி காண்பிக்கப் படவேண்டும். இது ஃபோட்டோவிலோ அல்லது நேரிலோ இருக்கலாம். )

  சிகரத்தோட கையில என்னைக் கொடுத்தேன். சிகரத்தோட சேவையால சந்தோஷமா  இருக்கேன். .!!'

( இப்போது சிகரம் வெப்சைட்டைக் காண்பிக்க வேண்டும்.)

  உன் பொண்ணு கல்யாணத்துக்கும் சிகரத்தைத் தேர்ந்தெடு. நீயும் சந்தோஷமா இரு..:))

கான்செப்ட் கண்க்ளூஷன்.:-
இருவரும் சந்தோஷமாக தம்ப்ஸ் அப் செய்தபடி...

சிகரம் இப்போ நம்ம கையில. சிகரத்தோட சேவைக்கு www.sikaram.com க்கு விசிட் செய்ங்க. சிகரத்தோட சேவையில சந்தோஷமா இருங்க

நான் ஸ்கிரிப்ட் எழுதிய முதல் விளம்பரம்.. ஸ்விஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் வெளிநாட்டு தமிழ் தொலைக்காட்சிகளி்லும் வருவதாக ஸ்க்ரிப்ட் இயக்குனர் நண்பர் அருண்குமார் தெரிவித்தார்..:)

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...