திங்கள், 30 ஜூன், 2014

பென்னிங்க்டன் லைப்ரரியில் அன்ன பட்சி.

ஸ்ரீவில்லிப் புத்தூரில் பென்னிங்க்டன் லைப்ரரி இருக்கிறது. அங்கே என் நூல் அன்ன பட்சி இருக்கிறது. நான் வட மாநிலங்களில் ஒன்றில் இருக்க என் நூலைப் படிப்பதற்காக என் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு ரத்னவேல் ஐயா அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

அவர்கள் அதைப் படித்ததோடு மட்டுமல்ல. இன்னும் சிலருக்கும் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் பென்னிங்க்டன் லைப்ரரிக்கும் என் பெயர் போட்டுக் கடிதம் எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து என் பெயர் போட்டு ஒரு கடிதத்தின் நகலும் அதைப் பெற்றுக் கொண்டதற்கான கடிதமும். ஒரு பாராட்டுப் பத்திரமும் வந்தது.

தான் படித்ததோடு மட்டுமல்லாமல் அதை நூலகத்துக்கும் வழங்கி அன்னபட்சியைச் சிறப்பித்து இருக்கிறார் ரத்னவேல் ஐயா. மேலும் பென்னிங்க்டன் லைப்ரரிக்காரர்களும் அதை வாங்கி முத்திரையிட்டு எனக்குக் கடிதமும் ( என் சார்பாக ஐயா எழுதிக் கொடுத்ததற்குப் பதில் கடிதம் ) கொடுத்து பாராட்டுப் பத்திரமும் போஸ்ட் மூலமாக அனுப்பி இருந்தார்கள்.நாம் நமக்காக லைப்ரரி பள்ளி கல்லூரி சென்றால் வெறுமனே கொடுத்துவிட்டு வருவோம். அவர்களும் வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் இங்கே இவர்கள் அதை அத்தாட்சியோடு செய்து அங்கீகாரமளித்தது சிறப்பு. நமக்காக இன்னொருவர் செயல்பட்டு இதை முனைந்து செய்திருக்கிறார் என்றால் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்.

இப்படி அங்கங்கே அங்கீகாரம் பெறுவதுதான் நாம் எழுதிக் கொண்டிருப்பதை ஊக்குவிப்பதாக அமைகிறது. நன்றி நல்ல உள்ளத்துக்கு. 

உண்மையிலேயே நான் கொடுத்து வைத்தவள்தான் ரத்னவேல் ஐயா. எனக்காக தினமும் என் கவிதைகளைப் படித்து முகநூலில் விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் பெருமுயற்சியோடு பலரும் பயன்பெறும் வண்ணம் நூலகத்துக்கு வழங்கியமைக்கு அன்பும் நன்றிகளும். பென்னிங்க்டன் நூலகத்துக்கும் என் அன்பும் நன்றிகளும் வாழ்த்தும்.

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com
என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 

4 கருத்துகள் :

Rathnavel Natarajan சொன்னது…

நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

Jeevalingam Kasirajalingam சொன்னது…

வாழ்த்துகள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரத்னவேல் ஐயா

நன்றி ஜீவலிங்கம் சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...