ஞாயிறு, 1 ஜூன், 2014

நீங்க திரைப்படத் தயாரிப்பாளர் ஆகணுமா..

நீங்க சினிமா தயாரிப்பாளர் ஆகணுமா. அதிகமில்ல ஒரு லட்சம் ( மினிமம் )  போதுமாம்.. டிஸ்கவரி புத்தக நிலையத்தின் வேடியப்பன் சொல்றாரு.டிஸ்கவரி சினிமாஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கும் வேடியப்பன் சொல்றது என்னன்னா

/// சினிமா என்பது சமூக அக்கறையுடன் கூடிய ஒரு வணிகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால் ஒரு லட்சம் முதலீடு செய்து தயாரிப்பாளர் ஆகுங்கள்.இன்றைய வணிக சினிமாவின் வெற்றிகரமான தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்காற்ற உள்ளனர்.

மொத்த முதலீடு ஒரு கோடி ரூபாய். அதிகபட்சமாக 100 பேர் இணைந்து உருவாக்கும் கூட்டுத் திரைப்படத் தயாரிப்புக்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மற்றும் அதற்கும் மேல் பங்களிக்கலாம்.

சமூக அக்கறையுடன் கூடிய பின்னணியில் அமைந்த திரைக்கதை.

ஜூன் 10 ஆம் தேதிக்கு மேல் இன்னும் கூடுதல் விவரங்களோடு முழுமையான திட்டத்தை அறியலாம். //


 ///திறமையான டெக்னீசியன்களை வைத்து, முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு டிஸ்கவரி புக் பேலஸ், முதல் முறையாக சினிமா தயாரிப்பில் இறங்குகிறது///

இயக்குநர் பற்றி! ( சகோ வேடியப்பன் பற்றி :)


பெயர் : வேடியப்பன் 


திரைப்பட அனுபவம் : 6 வருடம்

1. இயக்குநர்கள் என்.லிங்குசாமி அவர்களிடம் ஓராண்டு ரன் படத்தில் உதவியாளர், 


 2. ரன் படத்தின் இணை இயக்குநர் மற்றும் வசனகர்த்தா. திரு.மோநா.பழநிச்சாமியுடன் அஜித் நடித்த ஜனா, பட்டாளம் போன்ற படங்களுக்கு வசன உதவி!


3. இயக்குநர் பிரவின்காந்திடம் உதவியாளராக 5 வருடம். 


4. “வீடு நெடுந்தூரம்” குறுபடம் இயக்கம்,5. 2007-ல் முணுமுணுப்பு என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியீடு: இதில் உள்ள “சின்னவனும்- பெரியவனும்” என்ற கதைதான் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் 2-ம் சீசனில் முதல் பரிசு வாங்கியது. அந்த படத்தை இயக்கியவர்தான், பின்பு தெகிடி படத்தை இயக்கியவர். தனியாக திரைப்படம் இயக்கும் முயற்சியில் இருக்கும்போது திரைப்படம் சார்ந்த ஆட்கள் நிரம்பிய கோடம்பாக்கம், வடபழநி, கேகே நகர் பகுதியில் அவர்கள் படிப்பதற்கும், வாங்குவதற்கும் என்று ஒரு புத்தகக் கடை இல்லாமல் இருந்தது. அப்போது 2009-ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் டிஸ்கவரி புக் பேலஸ். கடந்த 5 – ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான புத்தக நிலையமாக அதை உயர்த்தியது ஒரு வியாபாரம் சார்ந்த அனுபவம்தான்.இயக்கப்போகும் திரைப்படம் பற்றி!


தலைப்பு : காதல் தொடர்கிறது...
நாயகன் - நாயகி புதுமுகங்கள்.மிக பிரம்மாண்டமான சினிமாவுக்குள், சினிமாவை ஒரு தொழிலாக நம்பி, அதற்கான ஆர்வம் உள்ளவர்கள்,குறைந்த முதலீட்டில் உள்ளே நுழைய இது ஒரு எளிதான வழி என்று கூறுகிறார் சகோ வேடியப்பன்.


  ---- வெற்றிகரமான புத்தக நிலைய அதிபராகவும், சிறந்த  எழுத்தாளராகவும் வலைப்பதிவராகவும் நான் அறிந்த சகோ வேடியப்பனின் அடுத்தகட்ட முயற்சி இது. 


புதுமையான முறையில் நல்ல நோக்கம் கொண்ட பலரையும் இணைத்துத் தயாரிப்பாளராக ஆக்கி சமூக சிந்தனையுள்ள சினிமா தர விழையும் வேடியப்பனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். சிறப்பாகச் செய்வார் என எண்ணுகிறேன். விரும்புபவர்கள் அவரோடு கரம் கோர்க்கலாம். வெற்றி பெற வாழ்த்துகள்.

தொடர்புக்கு M.Vediyappan.  9940446650 6 கருத்துகள் :

பால கணேஷ் சொன்னது…

புதிய முயற்சி மட்டுமில்லை... இது வெற்றிபெற்றபின் வரும் நாட்களில் பலருக்குப் பயன்தரும் முயற்சியாகவும் அமையக் கூடியது இது. பிரதர் வேடியப்பனின் வெற்றிக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திரு வேடியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

தனபாலன் சார். தங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. நாளை திண்டுக்கல் வருவதாக திட்டம். வந்தால் சந்திக்கலாமா? உங்களின் தொடர்பு எண்ணை போட்டு வையுங்கள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

திரு வேடியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள். சமீபத்திய சென்னைப் பயணத்தின் போது இது பற்றி நானும் கேள்விப்பட்டேன்.....

Thenammai Lakshmanan சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி கணேஷ் சகோ

நன்றி தனபாலன் சகோ

யார் இந்த அன்நோன்.. வேடியப்பனா.பேர் போட மாட்டீங்களா.

வாழ்த்துக்கு நன்றி வெங்கட்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...