சனி, 21 ஜூன், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், செல்வி சங்கரின் எண்ணச்சிறகுகள் முளைத்த கதை.

 ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்துக்குப் போனபோது சீனா சாரையும் செல்வி மேடத்தையும் சந்தித்தேன். ஒரே ஹோட்டலில் பக்கத்துப் பக்கத்து ரூமில் தங்கி இருந்தோம். ரொம்ப தன்மையானவங்க ரெண்டு பேரும் . அவ்வளவு அன்போடு பேசினாங்க. நிகழ்ச்சிக்கும் தாமோதர் சந்துரு அண்ணா ஏற்பாடு செய்திருந்த காரில் மண்டபத்துக்கு ஒன்றாகப் போனோம். வலைப்பதிவு குறித்தும் பதிவர் சந்திப்பு குறித்தும் உரையாடிக் கொண்டே போனோம்.  

பட்டறிவும் பாடமும், எண்ணச்சிறகுகள்னு இரண்டு வலைப்பதிவு எழுதுறாங்க  இவங்க. அதிலும் பாரதியார், இந்திராகாந்தி அம்மையார், திருக்குறள் பத்தின இடுகைகள் ரொம்பப் பிரமாதம். இதில் இவங்க பெண் பள்ளியில் பேசிப் பரிசு வாங்கினதும் இருக்கு. 2008 ல இவங்களோட பெண்ணோட குரல்ல பதிவு பண்ணி இருக்காங்க. 

இருவருமே பதிவர்கள். அதிலும் ஒரே வீட்டில் ஒரே துறை சார்ந்த இருவர் இருப்பது கடினம். ஆனா இவங்கள எழுத ஊக்குவிச்சதே சீனா சார்தானாம். அவங்ககிட்டயே அதுபத்திக் கேட்டேன். 


/// கணவர் வலைத்தளம் எழுதுறாங்க. ஆனா ஒரே வீட்டில் இருவர் வலைத்தளம் எழுதுவது சொற்பம்தான். எனக்குத் தெரிந்து இல்லை. ஆனால் யாரேனும் இருக்கலாம். உங்க வீட்டில் உங்க கணவர் பேர் பெற்ற ப்லாகரா இருக்கும்போது உங்களுக்கும் அதே துறையில் ஈடுபாடு வந்தது எப்படி. பெண்களுக்கு இது எந்த விதத்தில் உதவுதுன்னு சொல்லுங்க //

அன்பின் தேனம்மை லக்‌ஷ்மணன் 


ஜாலியா கிண்டலா எல்லாம் எழுத முடியாது. ஏன்னா இப்படியே எழுதி வயசாயிடுச்சு இல்லையா ? வயசு ஒண்னுதான் இப்போதைக்கு வாழ்த்துகிற தகுதியத் தந்திருக்கிறது. எழுதறது எப்பொழுதுமே எனக்குப் பிடிக்கும். பிளாக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே எனக்கு எழுத்துப் பயிற்சி உண்டு. எந்த நேரத்துல யார் எதக் கேட்டாலும் அந்த டாபிக்ல கதையோ கவிதையோ நாடகமோ கட்டுரையோ உடனே எழுதிக் கொடுத்துடுவேன். எப்படியும் அது அடுத்தவங்களால பாராட்டப் படுகின்ற தகுதிய கட்டாயம் பெற்றிடும்.,  இதுதான் என் எழுத்துக்கு அடிப்படை.

இதுல என் துணைவர் பெயர் பெற்ற வலைச்சரப் பொறுபாசிரியரா இருப்பதில் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் கூடுதலே ! 

எல்லாருமே வியப்பதுண்டு ! ஒரே வீட்ல ரெண்டு பிளாக்கரான்னு ... இருக்கது ஒரு கணினிதான். கருத்து தான் என்னுது. தட்டச்சிடறது எல்லாமே அவர் தான். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல் என் எழுத்துகளை வெளிக்கோண்டு வந்தது அவர்தான். இதை நான் மகிழ்வாகக் கொள்கிறேன்.  மற்ற  பெண் பதிவர்களின் படைப்புகளோடு என் படைப்புகளும் இடம் பெறுவது இவரது தட்டச்சால் தான். 

எனது பட்டறிவும் பாடமும் எண்ணச் சிறகுகளும் நான் மிகவும் இரசித்துச் சுவைத்து என் எண்ணங்களை எழுத்தாக்கிய பதிவுகள் . அவை எதுவும் கற்பனையே அல்ல - ஒவ்வொன்றும் நான் என் நாட்களில் கண் கூடாகக் கண்டவற்றைக் கவிதைகளாக எழுதுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. 

இரண்டொரு நாட்களுக்கு முன் செய்தித்தாளில் படித்தேன்.  தமிழ் இன்றும் உலவுகின்றதென்றால் அது வலை உலகத்தால் தான் என்ற செய்தி படித்தேன். ஏனென்றால் யாருமே இப்பொழுது தமிழைத் தெரிந்ததாகவோ அதனை பயனுள்ளதாகவோ ஆக்கிக் கொள்ள பொது வாழ்வில் தயங்குகிறார்கள்,. 

உங்களுடைய படைப்புகள் கவிதைகள் ஆகியவற்றை என் கணவர் படிக்கின்ற போதெல்லாம் நானும் அவற்றைப் படித்திருக்கின்றேன். இலக்கிய நடையும் சமூகப் பார்வை நடையும் நடைமுறைக் கருத்துகளோடு தங்கள் பதிவுகளில் தென்படும். பங்குச் சந்தை பற்றித் தாங்கள் எழுதிய பதிவு தங்களின் அனுபவத்தை அனவருக்கும் எழுத்தால் விளக்கிய தெளிவு என்னை மிகவும் கவர்ந்தது. நல்ல படைப்பகளுக்கு நான் என்றுமே அடிமை.   

எனது பட்டறிவும் பாடமும் என்ற தளத்தில் - வள்ளுவம் வாழ்வின் வழிகாட்டி  


இமயப்பூவே இந்திரா :

அறம் பாட வந்த அறிஞன்

http://pattarivumpaadamum.blogspot.in/2008/07/blog-post_19.html

--- மிக்க நன்றி செல்வி மேம். கேட்டவுடனேயே மடை திறந்த வெள்ளம்போல உங்க கருத்துக்களைப் பகிர்ந்துகிட்டதோட இல்லாம என்னோட ஷேர்மார்க்கெட் இடுகை பத்தியும் ஞாபகம் வச்சுப் பாராட்டி இருக்கீங்க. உங்க பெண்ணோட குரல்ல உங்க வார்த்தைகள் இன்னும் வலிமையாவும் அழகாவும் நெகிழ்வாவும் இருக்கு.

கணவர் உதவியோட பதிவு எழுதக் கத்துக்கிட்டாலும் இப்ப நீங்களே கலக்குறீங்க.  பதிவு மட்டுமில்ல சிறப்பு,  அதை வீடியோவாவும் இணைச்சு இருப்பதற்கு ஸ்பெஷல் வாழ்த்து. நன்றி செல்விமேம்  சாட்டர்டே ஜாலி கார்னர்ல நம்ம வலை உலகத்தாலதான் தமிழ் இன்னும் வாழுதுன்னு சொன்னதுக்கும். :)


13 கருத்துகள் :

சே. குமார் சொன்னது…

மிகவும் எதார்த்தமாய் கருத்துச் சொல்லியிருக்காங்க அம்மா...
அம்மா எங்கள் இல்ல புதுமனை புகுவிழாவுக்கு வந்து வாழ்த்தினார்கள். இந்த முறை சந்திக்க நினைத்து முடியவில்லை...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சும்மாத் 'தேன்' துளிபோன்ற சிறிய திருமதி தேனம்மை அவர்களின் கேள்விக்கு ’தேனடை’போன்ற இனிப்பான விரிவான பதில்கள். அருமையாய் உள்ளது இந்தப்பதிவு.

பேட்டி எடுத்த தங்கமும், பேட்டியளித்த வைரமும் நான் பிறந்த செட்டிநாட்டைச்சேர்ந்தவர்கள் என்பதில் மேலும் எனக்கோர் தனி மகிழ்ச்சி.

தங்கத்தினை இதுவரை நான் நேரில் பார்க்க சந்தர்ப்பம் அமையாவிட்டாலும் வைரத்தினை நேரில் சந்தித்துள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

அந்த இனிய சந்திப்பின் புகைப்படங்கள் இதோ:

http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html

பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் கோபு [VGK]

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அன்பின் திரு. சீனா ஐயா தம்பதியினர் பற்றிய மேலும் சில அற்புதமான படங்கள் + தகவல்கள் இதோ இத்தப்பதிவினிலும் உள்ளன:

http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html

குறிப்பாக அவர்கள் இருவரின் முழு நீள பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ;)))))))))))))))))

அன்புடன் கோபு

ADHI VENKAT சொன்னது…

சிறப்பான பகிர்வு. சீனா ஐயா தம்பதிகள் சில மாதங்களுக்கு முன்னர் திருச்சியில் எங்கள் இல்லத்துக்கும் வந்திருந்தனர். அன்பான தம்பதிகள்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிகச் சிறந்த பதிவு தேன். இந்தத் தம்பதியினரின் அன்பு தெளிவாகத் தெரியும் வண்ணம் செல்வி அவர்களின் பேச்சு அமைந்திருக்கிறது. வலைச்சரம் இவர்களின் மகுடம். அதைச் சிறப்புற நடத்திச் செல்வதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.மேலும் நலம் பெறவும் வாழ்த்துகள். நன்றி தேன்.

நானானி சொன்னது…

really they are blessed couple. soft, friendly, so kind and i remember the day they visited me in adyar and breakfast with us. and for your information in our family five of us are bloggers !!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான தம்பதிகள்...

Jeevalingam Kasirajalingam சொன்னது…

சிறந்த பகிர்வு
சிந்திக்க வைக்கின்றன

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார். கிரகப் ப்ரவேசத்துக்கு வந்தாங்களா அருமை. :)

Thenammai Lakshmanan சொன்னது…

சும்மாத் 'தேன்' துளிபோன்ற சிறிய திருமதி தேனம்மை அவர்களின் கேள்விக்கு ’தேனடை’போன்ற இனிப்பான விரிவான பதில்கள். அருமையாய் உள்ளது இந்தப்பதிவு.

பேட்டி எடுத்த தங்கமும், பேட்டியளித்த வைரமும் நான் பிறந்த செட்டிநாட்டைச்சேர்ந்தவர்கள் என்பதில் மேலும் எனக்கோர் தனி மகிழ்ச்சி.

தங்கத்தினை இதுவரை நான் நேரில் பார்க்க சந்தர்ப்பம் அமையாவிட்டாலும் வைரத்தினை நேரில் சந்தித்துள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.//


மிக அருமை கோபால்சார். பாசமிக்க உங்கள் வாயால் பாராட்டுக் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Thenammai Lakshmanan சொன்னது…

அன்பின் திரு. சீனா ஐயா தம்பதியினர் பற்றிய மேலும் சில அற்புதமான படங்கள் + தகவல்கள் இதோ இத்தப்பதிவினிலும் உள்ளன:

http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html

குறிப்பாக அவர்கள் இருவரின் முழு நீள பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ;)))))))))))))))))
/// எல்லாப் பதிவுகளையும் படித்து மகிழ்ந்தேன் கோபால் சார் :)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஆதி

நன்றி வல்லிம்மா

நன்றி நானானிம்மா . உங்ககிட்ட இது பத்தி கேக்கணும் ஒரு நாள் வர்றேன் உங்க பக்கத்துக்கு :)

நன்றி தனபால் சகோ

நன்றி ஜீவா சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...