எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 டிசம்பர், 2018

செலாக்குத்து ஆட்டமும் சலங்கை மனதும்.

2001. வசீகர மாயங்களோடு
அழகாய்த்தானிருக்கிறது
ஒளிந்தோடும் நதி.

2002. ஆடியில் நாம் ரசிக்கும் பிம்பங்கள் தன்னைத் தானே ரசித்துக் கொள்கின்றன 

2003. நம்ம நடிப்புக்கும் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுற எழுத்துக்கும் அர்த்தம் இருக்கான்னு இங்க நிறையப் பெண்கள் நினைக்கலாம். இன்று எனக்கு இருவர் அதன் தாக்கம் நிச்சயமாய் இருக்குன்னு மெய்ப்பிச்சு இருக்காங்க.காலையில் ராஜ்குமார் பார்த்திபன் கௌதமியின் நடிப்பைப் புகழ்ந்து அவர் நட்பைக் கோரியது. இப்போது சாய் இந்துவின் கவிதைகளால் கவரப்பட்டு சேலம் செந்தில் அவர் கவிதைகள் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து எல்லாம் சொல்லித் தேடிட்டு இருக்காரு. பார்க்கவே சந்தோஷமா இருக்கு.

ஆமாம் சாய் இந்து டீ ஆக்டிவேட் பண்ணிருக்காங்களா.

#உலகம்_உங்களைத்_தேடுகிறது_தொடர்ந்து_செயல்படுங்கள்_பெண்மணிகளே.

2004. வீழ்ச்சிதான் பயணமென்றாலும்
தரையிறங்காமல் இருப்பதில்லை
பொங்கித் ததும்பும் அருவி.


2005. கையருகில் நிலா இருப்பதும்
வானவில் எட்டுநிறமாவதும்
மலை கசிந்து மணலாவதும்
பித்தனின்தெய்வீகநிலை.
அறியாமல் தொடர்வதும்
நினைவுகளில் படர்வதும்
சிணுங்கொலியால் இடர்வதுமென
நிகழ்த்திக் கொள் ஞானக்கூத்தை.
செலாக்குத்து ஆட்டத்தில்
இரத்த அடவுகள் பதைபதைக்க
விதிர்விதிர்த்தாடுகின்றது
உதிர்ந்த சலங்கையாய் மனது.
ஒவ்வொன்றாய்க் கலைந்தாலும்
கலையாமலே என்றுமிருக்கிறது
மயிர்கற்றை விலக்கி வரும்
மனம் குமிழும் உன் மானசீக முத்தம்

2006. பிங்கி பிங்கி என்கிறாய்
உன் உடல் பொருள் ஆவி பருகிய
நீலி என்பதறியாமல்.

2007. சிவப்புப் பட்டுப் புடவைக்கு பச்சை ரவிக்கை.
எந்தக் கோமாளிகள் கண்டுபிடிச்ச காம்பினேஷனோ தெர்ல.
கல்யாணப் பொண்ணுங்களப் பார்த்தா பரிதாபமா இருக்கு.

இதவிடக் கொடுமை ஒரே ஒருதரம் மணப்பெண் போடுற இந்த புடவை ப்ளவுசுக்காக மணமகன் வீட்ல 35,000 + 15000 -_ 50000 ரூபாய தண்ட செலவு பண்றது.

2008. நாளை எங்கள் ஃபாத்திமா கல்லூரியில் "தற்காலத் தமிழ் இலக்கியங்களின் நோக்கும் போக்கும் " என்ற தலைப்பில் நடைபெறும்
பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறந்த எழுத்தாளரும், அற்புதமான மொழிபெயர்ப்பாளருமான எங்கள் தமிழம்மா திருமதி எம் ஏ சுசீலா அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள். அவர்கள் உரையைக் கேட்கக் கொடுத்துவைத்த மாணாக்கியருக்கு வாழ்த்துக்கள்.

2009. ரெண்டு நாள் ஃபேஸ்புக், ப்லாக் பார்க்காம இருக்க முடிலயே. நானெல்லாம் பெரிய விஷயங்களை வைராக்கியத்தோட சாதிச்சிரப் போறனா என்ன

20010. மேட்டிமை, மேதமை ரெண்டும் ஒண்ணா..

2011. கொஞ்சநேரம் பராக்கு பார்த்த மாதிரி இருக்கு. ஆனா ஒரு மணி நேரம் ஆச்சு. வேலை இருக்கு .விடு ஜூட் :)

2012. ஒருவாரமா முயற்சிக்கிறேன் இந்த ப்ரதிலிபில ஒரு கதையைப் படிக்க முடில. க்ளிக் பண்ணாலே தொழில்நுட்பக் கோளாறுன்னு ஒரு ஆள் ட்ராக்டர் ஓட்டி தார் ஊத்தி ரோடு போடுறார். அதுவேற நடுவுல நின்னு போயிடுது. திரும்ப நூல் சுத்தி ஓட்டுறார். அப்புறமும் நின்னுடுது. காலால எட்டி ஒதச்சு கரை சேர்க்கிறார். கடுப்பேத்துறார் மைலார்ட். கொஞ்சம் ரீடபிளா வெப் அமைச்சா என்ன

2013. மகாகவி ..

எல்லாரும் என்னன்னவோ பாட்டு, நினைவுகள் பகிர்கின்றார்கள். நமக்கு என்னவோ இந்த பிரிவுதான் இம்சைபடுத்திட்டே இருக்கு. ஃபெமினிஸ்டோ இல்லையோ பெஸிமிஸ்ட் அப்பிடின்னு யாராவது வந்து நாலு கொட்டு கொட்டிட்டு போங்க மக்காஸ் <3 p="">
“தீர்த்தக் கரையினிலே

2014. யாரும் முகநூலில் இல்லை.. எல்லாரும் புலனத்துக்கு புலம் பெயர்ந்துட்டாங்க :)

2015. ஃபேன் ஓடாமலே அந்த ஃபேனை அமத்துங்க என்று சொல்லும் அளவு குளிருதே. !

2016. நின்றது நிற்க விதிர்க்கிறது
எதிர்பாரா விழுத்தாட்டம்
நிறை உறக்கம் தவிர்க்கிறது
உறை குருதிப் படலம்
கல் உப்புச் சுடுதுணியில்
இதமாய் ஒரு ஒத்தடம்
கீறல்கள் தடவி மருந்திட்டு
வருடலாய் சில முத்தடம்.
சிராய்ப்புகளாய்க் கசிகிறது
ஏதுமியலா கண்ணீர்த்தடம்

2017. தனிமையில் நிறைய எழுதலாம். வெறுமையில் எழுத்து மறக்கிறது.

2018. அல்லிசூழ அலையாடும்
தனிமையின் மலர்நீட்டம்
அன்பு தொட்டால் ஒளிந்தாடும்
புனல் இதழாய் வெறுத்தாலும்
அது அண்டத்தனைய உயர்வு.

2019.பகுமானம் செய்யப்படும் பிரியம் திகைத்துப் பிரிகிறது.


2020. ஓ மை கடவுளே.. ஜனவரி ஒண்ணாந்தேதிக்கப்புறமாவது என்னை இந்த ஃபோட்டோமேனியாலேருந்து காப்பாத்து. :P

#டிசம்பர் 31 வரை என் போட்டோ & ப்லாக் இம்சைகள் தொடரும். ஜனவரி ஒன்றிலிருந்து ஒரே ஃபோட்டோ, ஒரு நாளைக்கு ஒரே ஒரு போஸ்ட் :) ப்ராமிஸ் :)
4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...