எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 மார்ச், 2018

மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.

1721. பைபாஸ், ஹைவேஸ் ரோடெல்லாம் சூப்பர். பட் கொதிக்கிற வெய்யில்ல கண்ணு எரிஞ்சிரும்போல. அசோகர் மாதிரி சாலை ஓரங்களில் நிழல்தரும் மரங்களை எப்போ நடப்போறீங்க ?

1722. ஆட்டு மந்தைகள் மேயுற, பச்சைப் பசேல்னு இருக்குற எந்த எடத்தைப் பார்த்தாலும் ஸ்டெப்பி புல்வெளி மாதிரியே தோணுதே # எட்டாங்கிளாஸ் பாடம் இன்னும் மறக்கல ;)

1723. ஊருடன் ஒத்துவாழ்ங்கிறது பழைய மொழி. ஊரோடு ஒட்டாமல் போங்குறது பைபாஸ் ரோட் மொழி.. ;)

1724. கார்ப்பரேட் சாமியார் மடங்களால் நிரம்பி வழிகிறது கிரிவலப் பாதை. #திருவண்ணாமலை அட்ராசிட்டீஸ்

1725. சித்தர்கள் 18 பேர்தான். ஆனால் சாமியார்களோ 18,000 பேர். #திருவண்ணாமலை கிரிவலப் பாதை .

1726. அர்த்த ராத்திரியிலும் ராசிக்கல், ஜவுளி, லாலிபாப் விற்பனை. நல்லாவே கல்லா கட்டுறாங்க. #ட்ரேட் சென்டர், திருவண்ணாமலை.


1727. ///It is seen that you have not filed the IT Returns for AY 2016-17 and AY- 2017-18.Please file IT Returns at the earliest. Kindly ignore if already filed//// அவ்ளோ இன்கம் இருந்தா ஃபைல் பண்ணமாட்டனா..என்ன ;) அரசாங்கத்தை ஏமாத்துற எண்ணமெல்லாம் துளிக்கூட இல்ல. டெய்லி எனக்கேன் இப்பிடி ஒரு மெசேஜ் :)

1728. தக்காளியைக் கூட சாம்பார்ல காய் மாதிரி காட்ட ஹோட்டல்காரர்களாலேயே முடியும். தக்காளி வெங்காயம் ஏன் தேங்காய் கூட இல்லாம சப்பாத்திக்கு தொட்டுக்க ஒண்ணு தர்றாங்க.. குருமாவாம் ;).

1729. சில தலையணைகள் தூக்கத்தை விதைச்சு வைச்சிருக்கு போல. படுத்ததும் நம்மேல் தூக்கம் வேர்விட்டுக் கிளைவிட்டுப் பரவி இலைவிட்டு மூடிடுதே.

1730. மனோஜ் குரூரும் கே வி ஜெயஸ்ரீயும் சங்கத்தமிழ் சித்திரம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். குறிஞ்சியில் மொட்டுவிட்டு முல்லையில் போதவிழ்ந்து மருதத்தில் பூத்த பூக்கள் நெய்தலில் நாணி பாலையிலும் பக்குவப்பட்டு மணக்கின்றன. ஐவகையும் கைகளுக்குள் நிரம்ப நெகிழ்ந்து அமர்ந்திருக்கிறேன். #இன்று நிலம் பூத்து மலர்ந்த நாள்.

1731. ராத்திரியானா எல்லா டிவி சேனலும் மீன் சந்தையாயிடுதே.. மிச்சம் மீதாரி இருந்தா ஒரே குழாயடி சண்டை. ;) தப்பிப் பொழைச்சதுல போன ஜென்மத்துலேருந்து எடைவிடாம ஓடிட்டு இருக்குற நாதாரி சீரியல். ஃபேஸ்புக் அக்கப்போர்களே அற்புதமா தெரியுதே.. !!

1732. சிற்றலைகளுக்குள்
தவழும் நத்தை
பாசம் விலக்கிப் போகிறது
ஊர்ந்து ஏறப்போவது
மடுவல்ல மலையுச்சி.

1733. அக்டோபரிலேயே
எதிர்பார்க்கப்பட்டது
தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பருவம் தப்பிப் போதல்
மழைக்கு மட்டுமல்ல.
திசை அறியவிடாமல்
கவசமாய்ச் சூழ்ந்திருக்கும்
முதுபனிக்கும்தான்.

1734. ஆண்கள் புன்னகைக்காமல் புகைப்படம் போட்டால் கம்பீரமென்கிறார்கள். பெண்கள் புன்னகைக்காமல் புகைப்படம் போட்டால் கோபமா என்கிறார்கள்.. ஓ மை கடவுளே.

1735. மெலடிகளில் இருந்து மீள்வது எப்படி..?.. ஹிஹிஹி உருப்படியான யோசனை கொடுப்பவர்களுக்கு புக் ஃபேரில் ஒரு புக் ஃப்ரீ.

1736. வாழ்க வளமுடன் செல்லம். கோலங்கள் அனைத்தும் அழகு. கலக்கிட்டீங்க.  சுந்தரி :) அதே சமயம் என்னை பதினைந்து வயசுப் பெண்ணா ஆக்கிட்டீங்க. லவ்ஸ்யூ. பரங்கிப்பூவையும் கோயில் லவுட் ஸ்பீக்கர் பாடல்களையும் டிசம்பர் பூவையும் கூடவே தேடுது மனசு.

1737. விஷயஞானம் உள்ளவர்களை இழக்க மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை.

1738. புனித பிம்பங்களைச் சிதைப்பதைப் பல ஆங்கிலப் படங்கள் செய்கின்றன. நீங்களுமா வைரமுத்து ?

1739. வெட்ட வேண்டியது கிளைகளை அல்ல. வேரை.

1740. ஒற்றைப் பார்வையால்
உள்ளங்கவர் கள்வனே
அற்றைத் திங்கள்
ஆவி புகுந்தாய்
உன் நெற்றிச் சுடரொளி
நெஞ்சில் ஒளிர்கிறது
பார்வைச் சுடரொளியோ
நெஞ்சை எரிக்கிறது.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

3 கருத்துகள்:

 1. சும்மா சொல்லக்கூடாது.. நீங்கள் பதிவுகளுக்கு வைக்கும் தலைப்புகள் எல்லாம் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஜிவி சார்

  நன்றி துளசி சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...