எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 நவம்பர், 2017

சந்திப் பிழையும் சிறு பிணக்கும்.

1661. பக்கத்தில்
அமர்ந்திருந்தோம்
உன் செய்தித்தாளில்
கொலை கொள்ளை
கற்பழிப்புகள்.
செய்தித் தூதுவன்போல
செய்தி அறிவிக்கிறாய்.
சார்நிலைக் கருவூலப் பொறுப்பாளனாய்
தள்ள வேண்டியவற்றையும்
கொள்ள வேண்டியவற்றையும்
பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.
இருவரும்
அந்தரத் த்யானத்தில் அமிழ்கிறோம்.
போதிமரமான அறையில்
மௌனம் தனித்திருக்கும்போது
இருவர்மேலும் குளிர்காற்றை
பூவிதழ்களாய்த் தூவிக்கொண்டிருக்கிறது மின் விசிறி.

1662. நான் இதுதான்
இப்படித்தான் என்று சொல்லிவிட்டு
நீ நிம்மதியாக அமர்ந்திருக்கிறாய்
மற்றவர்கள்
கஷ்டப்படத் துவங்குகிறார்கள்
நீ
உன் உண்மைக்காகத்
தலை குனிகிறாயாவென
ஓரக்கண் பார்க்கிறார்கள்.
பெருமரங்களைக் கெல்லிய நீ
புற்களையும் கிள்ளிப்போடத் தொடங்குகிறாய்.

1663. எல்லாருக்கும்
ஒரே மாதிரித் தெரிவது
எனக்கு மட்டும்
வேறொன்றாய்த் தென்படுகிறது
ஒரு மாதிரி எல்லாம்
ஒரே மாதிரியல்ல.

1664. எல்லாருடனும் எனக்குச்
சிறு பிணக்கு இருக்கிறது.
எப்போது ஆரம்பித்தது என்று தெரியாத மாதிரி
எப்போது முடிந்தது என்றும் தெரியாது
எதிர்ப்படும்போதெல்லாம்
எதுவுமில்லாதது போல்
அனைவரும் புன்னகைத்துக் கடக்கிறோம்.


1665. குற்றத்தின்
கைபிடித்துக் கொண்டே
இதை நான் செய்யவில்லை
செய்யவில்லைஎன
வாதிடுகிறாய்
உன் கையிலிருந்து
தப்பும் வழி தெரியாத அது
வாய் பொத்திச்
சிரித்துக் கொண்டிருக்கிறது.

1666. ஒவ்வொரு நூலும் கவிதைத் தொகுதியும் ஒரு தனித்துவமான குழந்தை மாதிரி. அதனுடனே அதை ரசிக்கவேண்டுமே தவிர வெளிநாட்டு நூல்கள், உள்நாட்டு நூல்கள் ஏன் அதே எழுத்தாளரின் வேறு நூல்கள் எழுத்துக்களோடு ஒப்பீடு செய்வது எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை.

1667. தினம் பிறந்து
பறந்து மீள்கிறது
ஒரு பறவை

இரை கொண்டு
இன்புற்றிருந்தாலும்
இரக்கமில்லை அதற்கு

இயல் இயலென்று
இமை மூடக்கூட
இறக்கைகள் ஓய்வதில்லை

இருக்குமிடத்திலே
இரைப்பை நிரம்ப
ஒடுங்க நினைக்கும் பறவைக்கு
இறக்கைகள் சுமைதான்.

1668. சந்திப் பிழைகள்
மலிந்து கிடக்கிறது
பெருநகரம்

அங்காடித் தெருக்களில்
அந்நியர்கள்
தோளோடு தோளுரசி

ஒன்றே போல் வருகிறார்கள்
ஒன்றே போல் கடக்கிறார்கள்
ஒன்றே போல் பிரிகிறது பாதை.

ஹைவேஸிலும் பைபாஸிலும் வந்து
மெட்ரோவில் ஓடுகிறது
(சு)தந்திர வாழ்க்கை.

கடக்கும் வாகனங்களின் புகையில்
மூச்சிறைத்தபடி மேம்பாலப் பொந்தில்
உயிர்வாழ்கின்றன சில புறாக்களும்.

1669. அமைதி உறைந்திருக்கிறது என்னில்
புலியைப் போல
இன்னொரு உண(ர்)வைக் கொன்று
இரையெடுக்கும் வரை

1670. ஒரு குற்றம்
உனை இறுக்குகிறது
கட்டிப்போட்டதுபோல் உணர்கிறாய்
எவ்வாறேனும் வெளியேறத் தவிக்கிறாய்
யாருக்கும் உன் அவஸ்தை புரிவதில்லை.
கடந்து செல்லும் அனைவருக்கும்
உன் கட்டுகளின் நிர்வாணம் தெரிவதாய் அச்சமுறுகிறாய்
இன்னும் இன்னும் இறுக்கி
விடுபடத் தவித்து
உன்னையே கட்டிக் கொண்டிருக்கிறாய்
ஏதுமறியாத உன் குற்றம்
உன்னைச் சீண்டாமலே
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
மண்டியிட்டமர்ந்து
உன் குற்றத்தின் முன்
உன்னை ஒப்புக் கொடுக்கிறாய்.
எந்த சுவாரசியமுமில்லாமல்
உன்னை விட்டு
வெளியேறிச் செல்கிறது அது.

1671. துணிபோனால் பிணி போச்சு
என்று என் கைக்குட்டை தவறியதற்கு
காரணம் கற்பித்தாள் தோழி
அறைக்குத் திரும்பினோம்
சில நாட்களில்
வந்து சென்ற தோழிகளின் கைக்குட்டைகளால்
நிரம்பிக் கிடந்தது அறை.

1672. திருவிழாக்களிலோ
திருமணங்களிலோ
தொலைய ஆசைப்பட்டும்
தொலைந்து விடுவதில்லை
பெண் மனம்,

1673. கடக்கும் ஒவ்வொரு இறப்பையும் பார்த்து
என் முறை எப்போது எப்படி எதனால்
என்ற ஆவலோடு
எதிர்பாக்கிறது மனம்
பாவத்தின் சம்பளம் அல்லவா.

1674. பிரகதியின் ( பிரதீபா ) மறைவு தந்த நிம்மதியின்மை. வெற்றிடம். சில மணி நேரங்களாக நீடிக்கும் வெறுப்பு கசப்பு தனிமை. இதை எப்படி நீக்குவது..

1675. ஏதாவது செய்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.

1676. நடிப்பவர்களைப் பிடிப்பதில்லை

1677. எண்ணம் நல்லாயிருந்தா எல்லாம் நல்லா இருக்கும்.

1678. கருநீல ஓடையைப் போலிருக்கிறது ஞாயிறின் இரவுப் பாதை.

1679. வாவ்.. நானா மாறியது நானா.. வந்த ரெக்வெஸ்டை எல்லாம் இன்வெஸ்ட் பண்ணிட்டேன் :) என் ப்லாக் போஸ்ட் படிக்க இன்னும் நூறு பேர் கிடைச்சிட்டாங்க. ஹாஹா.

1680. பழைய மெட்ராஸ் படம். முதல் கோயில் என்னன்னு தெரியல. தெரிஞ்சவங்க சொல்லுங்க. பதினோரு நிலை கோபுரம் உள்ள கோயில் எது. சௌடாம்பிகை கோயில் மாதிரி இருக்கு எழுத்து.

மிச்சதெல்லாம்.
க 1.
உ 2. PERIYAMETH DARKA, SYDENHAMS ROAD, MADRAS. 3
ங 3. SANTHOME CHURCH , MADRAS – 4
ச. 4. JAIN TEMPLE, G.N.CHETTY ROAD, MADRAS – 17.
ரு 5. MADRAS KALIBARI, UMAPATHY STREET EXTENSION, MADRAS – 33.
சா. 6. SIKH TEMPLE, G.N. CHETTY ROAD, MADRAS – 17

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்




4 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை. எண்ணம் நல்லாயிருந்தா அனைத்தும் நல்லாயிருக்கும்...அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே ரசித்தோம்.....இவை செம... 1665, 1666, 1668, 72, 79...

    அப்புறம் அந்தக் கோயில் மயிலை மாதிரி இருக்கு மயிலையாத்தான் இருக்கணும் பழைய மெட்ராஸ் நா மயிலைதான் ரொம்பவே ஃபேமஸ் இப்பவும் தான்....

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    நன்றி பாலா சார்

    நன்றி கீதா :) இருக்கலாம் கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...