எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 நவம்பர், 2017

வாள்வீரன் வயநாட்டுச் சிங்கம் வீரகேரளவர்மா பழசிராஜா.

வாள்வீரன் வயநாட்டுச் சிங்கம் வீரகேரளவர்மா பழசிராஜா.






வாள்வீரன் வயநாட்டுச் சிங்கம் வீரகேரளவர்மா பழசிராஜா

துப்பாக்கியோ அதிக அளவு துருப்புக்களோ இல்லாமல் 21 வயதிலேயே வயநாட்டின் புரலிமலையிலிருந்து கொரில்லா யுத்த முறைகளால் மைசூர்ப் படையினரையும் ஆங்கிலேயரையும் சிதறடித்தவர் பழசி ராஜா. “ஆயிரம் வீரர்களோடு நாம் போராடவில்லை. பழசிராஜா என்ற ஒரே ஒரு வீரருடன் மட்டுமே நமது போர் .இவரின் முடிவே புரட்சியின் முடிவாக இருக்கும்என்று சொன்னவர் மேஜர் ஜெனரல் வெல்லஸ்லி.

  பதினேழாம் நூற்றாண்டில் பழசி ராஜா கோட்டையத்தின் மலபாரில் புறநாட்டு ஸ்வரூபத்தைச் சேர்ந்த பண்டிஞ்சரே கோவிலகம் என்ற அரசவம்சத்தில் ஜனவரி 3, 1753இல் பிறந்தவர். கோட்டையத்து ராஜா எனவும், கேரளசிம்மம் என்றும் அழைக்கப்பட்டார்

 மலபாரின் மன்னர்கள் கப்பம் கட்டாமையால் ஹைதர் அலியின் படைகள் மலபாரின் மீது படையெடுத்தன. மைசூர் மன்னர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து 1773இல் இருந்து 1782 வரை ஹைதர் அலியின் மைசூர் துருப்புகளுடனும் 1784 முதல் 1793 வரை திப்புசுல்தானின் துருப்புகளுடன் யுத்தம் புரிந்தார்.

  18 ஆம் நூற்றாண்டில் துறைமுகத் தலைநகரான தலைசேரி கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆயுதத் தொழிற்சாலையாகவும் புரட்சியாளர்களின் ஆயுதப் பரிமாற்றத்துக்கும் உதவியது. எனவே அதைப் பிடிக்க விரும்பிய ஹைதர்அலி படையெடுத்தார். பழசி ராஜா 2000 நாயர்களை பிரிட்டிஷாருக்கு உதவ அனுப்பியதால் மைசூர்ப்படை பின்வாங்கியது.

  திப்புசுல்தானின் அரசாட்சிக்காலத்தில் ராஜா ரவிவர்மா வருடத்துக்கு 65,000 வரை வரிகொட சம்மதித்து சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டும் மைசூர் அரசு ஒத்துகொள்ளாததால் அநியாய வரிவிதிப்பை எதிர்த்துத் திரும்பவும் போர் உருவானது. 1500 நாயர்களுடன் பழசி ராஜா போர் துவங்க ஒரு வழியாக  1793இல் வயநாட்டை விட்டு மைசூர்ப்படைகள் வெளியேறின.

 மூன்றாம் ஆங்கில மைசூர்ப்போருக்குப் பின் பிரிட்டிஷ் அரசு திப்புவுடன் கைகோர்த்து மக்களால் கட்டமுடியாத அளவு வரித்தீர்வையை அதிகரிக்க சுதந்திரமாகக் கோட்டயத்தை ஆளவிரும்பிய பழசி ராஜா இதனால் கோபமுற்றார்.

மிளகுக்கொள்முதலிலும் தான் நிர்ணயிக்கும் விலைக்கும் தான் சொல்லும் வியாபாரிகளிடம் மட்டுமே விற்கவேண்டுமெனவும் தன் தந்திரத்தைக் காட்டியது கண்டு வெறுப்புற்றார்.

   1795 இல் கோட்டையத்துக்கு ராஜாவாகத் தாங்கள் விதித்த வரிவிதிப்பை ஏற்றுக் கொண்ட பழசிராஜாவின் மாமா வீரவர்மாவை வரி வசூலிக்க 5 வருடக் குத்தகையை நீட்டிக்கப் பொங்கி எழுந்த வயநாட்டுச் சிங்கம் அநியாய வரிவிதிப்பைத் தடுத்தார்.

 இரண்டு வருடத்து வரிபாக்கியை வசூல் செய்ய மும்பையிலிருந்து ஆணை வர  1796 இல் பழசிராஜாவைக் கைது செய்யும்படி ஆங்கில அரசு உத்தரவிட்டது. லெஃப்டினெண்ட் ஜேம்ஸ் கோர்டான் தலைமையில் தலைச்சேரிக்கு அவரைக் கைது செய்ய வர கொட்டியூரை அடுத்த மன்னாட்டனா என்ற பகுதிக்கு தப்பிச் சென்றார்.

  கொரில்லாப் போர்முறைகள் மூலம் தப்பித்த பழசிராஜா மலையகப் பகுதிகளில் தஞ்சமடைந்தார். ஜேம்ஸ் தலைமையிலான படை பழசி ராஜாவின் அரண்மனையில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்துச் சென்றது. பழயம்விடன் சந்து என்ற இவரது தளபதியும் குரும்பர்நாடு ராஜாவின் கைக்கூலியாகிவிட கோபமுற்ற ராஜா வயநாட்டுக்கும் மலபாருக்கும் உள்ள தொடர்பு வழியைத் துண்டித்தார்.

  மேஜர் கேமரூன், லெஃப்டினெண்ட் நியுஜெண்ட், லெஃப்டினெண்ட் மாட்ஜ், லெஃப்டினெண்ட் ரூடர்மென் ஆகியோரைக் கொன்று குவித்தது ராஜாவின் படை.

  இவர் திப்புவுடன் சேர்ந்துவிடக்கூடும் என அஞ்சி மும்பையின் கமாண்டர் இன் சீஃப், லெஃப்டினெண்ட் ஜெனரல் ஸ்டூவர்ட் மற்றும் கவர்னர் ஜோனாதன் டங்கன் மூலம்  1797இல் கிழக்கிந்தியக் கம்பெனி சமரச உடன்படிக்கை செய்து கொண்டது . ஆனால் அதன்பின் மேஜர் ஜெனரல் வெல்லஸ்லியின் வஞ்சகச் சூழ்ச்சியில் அகப்படக்கூடாது என்று 1800இல் வயநாட்டிலிருந்து திரும்பக் கானகத்துக்குத் தப்பியோடினார்.

  பழசி ராஜாவுக்குப் பக்கபலமாயிருந்த தலக்கால் சந்து, பெருவாயல் நம்பியார், கன்னவத்து சங்கரன் நம்பியார் மற்றும் அவரது மகனைத் தூக்கிலிட்டுக் கொடூரமாக நடந்துகொண்டது ஆங்கில அரசு. தன் நண்பனான கேமரூனைக் கொன்றதற்குப் பழிவாங்க தாமஸ் ஹார்வே பேபர் என்ற சப் கலெக்டரும் ராஜாவுக்கு எதிராக செயலாற்றினார். சிரக்காலில் நடைபெற்ற பெருயுத்தத்திற்குப் பின் பழசிவர்மாவின் தலைக்கு 3000 பகோடா நாணயங்கள் பரிசு என அறிவித்தது ஆங்கில அரசு

  1793இல் இருந்து தன் இறப்புவரையிலான காலகட்டம் வரை அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போரிட்டார் பழசிராஜா. 1793இல் இருந்து 1797 வரை கோட்டயத்தின் நிர்வாக உரிமைக்காகவும், 1800இலிருந்து 1805 வரை வயநாட்டின் அரசுரிமைக்காவும் போரிட்டார். அதனால் வீர என்ற அடைமொழி அவர் பெயருடன் சேர்ந்தது

 நவம்பர் 30, 1805இல் மாவில தோடு என்ற கேரளகர்நாடக பார்டரில் உள்ள ஒரு ஊரில் பேபர் தலைமையில் ஆங்கிலேயப் படைகளால் சுற்றி வளைத்து சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

  வாள்வீச்சில் வல்லவரான கேரளவர்மா பழசிராஜாவின் நினைவாகப்பழசி குடீரம்என்ற நினைவு மண்டபம் கேரள வயநாட்டின் மனந்தவாடியில் எழுப்பப்பட்டுள்ளது.  

**1805  நவம்பர் 30 பழசிராஜா வீரமரணம் அடைந்த நாள்.


  

3 கருத்துகள்:

  1. சின்னச் சின்ன ராஜாக்களின்கதைகள் பெரும்பாலும் தெரிவதில்லை

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி பாலா சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...