எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 நவம்பர், 2017

ஸரிகமதபத நீ. !

எனக்குத் தேவையில்லை
இந்த யதார்த்தங்கள்

பாறைகளுக்குள்ளே நடந்து
தூரத்துச் சொர்க்கங்களுக்குச் செல்ல
நான் கல் இல்லை
என்னுள் நிகழும்
வேதிவினைக்கு
நானே வினையூக்கியாய்
நானே இரசாயனமாய்

மூட்டை நெல்லாய்
என்னைக் கட்டிப்போடாதே !
இப்போதே உமி நீக்கி
உலைநீரில் கொட்டி
உணவாக்கி உண்.


கண்ணாடி பிம்பங்கள்
என் நிழலை உண்ணும்
நானே நிழலாவதற்குள்
சீக்ரம் வா
ஸ்வப்னபுரி செல்வோம்.

நான் உன்
இறக்கையாய் உருமாறிக் கொள்ள
விரைவாய்,
மேலே பற..

* ~ *  ~  *  ~  *  ~  *  ~  *  ~  *  ~  *  ~   *  ~  * ~  *  ~  *

வண்ணக் குழப்பம் ..

ஸ - ஸரிந்து வீழும் நீர்வீழ்ச்சி.

ரி - வரிசையாய்ப் பச்சை வயல்கள்

க - கண்ணனே ! கனவு பிரிக்காதே.

ம - மறுக்காமல் மனப்பூவைக் காணிக்கையாக்கிக் கொள்.

ப - பதிலாய் உன் பார்வையைப் பட்டயம் எழுதிக் கொடு.

த - தராமல் விடுவேனா ? எனக்கு வேண்டும்

நி - நீ... நீ... நீ.... !. 

2 கருத்துகள்:

 1. வாவ்! நான் உன்
  இறக்கையாய் உருமாறிக் கொள்ள
  விரைவாய்,
  மேலே பற..// ஸரிகமபத நி...நீ நீ நீ என்று பாடிக்கொண்டே!!!!!! அருமை இரண்டும்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நன்றி கீத்ஸ். !!!

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...