எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 நவம்பர், 2017

மூலையோரமாய் ஒரு சீதை.

ஏமாந்த சிங்கம்
பிடித்ததோ
பசுத்தோல் போர்த்திய
சிங்கம்.

கிணற்று நீரைக்
கலங்க அடிக்கும்
பூனையின் ஊளை.

கபடத்தைப் பாதுகாக்க,
காடுவருவதைத்
தடுக்கும் இராமன்கள்.


காலண்டராய்
அவ்வப்போது
கிழித்துக் கசக்கப்படும்
மனசு.

யாருக்காக,
எதற்காகத்
தவம் இருக்கிறோம் ?
இருக்கவேண்டும்
என்பது புரியாமல்
மூலையோரமாய்
ஒரு சீதை.

*  ~    *  ~  *  ~  *  ~  *  ~ *  ~  *  ~  *  ~  *  ~  *  ~  *  ~  *

அழகான முள்ளே!
வேண்டாம், போ !
இங்கிருந்து..

நான் பயப்படுவதாக
நீ
நினைத்துக் கொண்டிருக்கிறாய்
உண்மை
அது உன்னை
உடைத்து விடுவேனோவென்ற
பயம்தான்.

உன்
கூர்மைக் கோபத்தைக்
குரூரமாக்கி விடுவேனோ ?

உன்
குத்துக்கள்
எனக்கு நீ இடும்
இரத்தப் பொட்டுக்கள்.

அழகான முள்ளே !
சிதைபடுவதற்குள்
சீக்கிரம் விலகு,
இங்கிருந்து.

-- 1983 ஆம் வருட டைரி. 

2 கருத்துகள்:

 1. மூலையைல் சீதை அருமை....முள்ளும் அட போட வைக்கிறது....//காலண்டராய்
  அவ்வப்போது
  கிழித்துக் கசக்கப்படும்
  மனசு.// சூப்பர்!

  பதிலளிநீக்கு
 2. நன்றி சகோ & கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...