எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
84 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
84 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 நவம்பர், 2017

சந்திப் பிழையும் சிறு பிணக்கும்.

1661. பக்கத்தில்
அமர்ந்திருந்தோம்
உன் செய்தித்தாளில்
கொலை கொள்ளை
கற்பழிப்புகள்.
செய்தித் தூதுவன்போல
செய்தி அறிவிக்கிறாய்.
சார்நிலைக் கருவூலப் பொறுப்பாளனாய்
தள்ள வேண்டியவற்றையும்
கொள்ள வேண்டியவற்றையும்
பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.
இருவரும்
அந்தரத் த்யானத்தில் அமிழ்கிறோம்.
போதிமரமான அறையில்
மௌனம் தனித்திருக்கும்போது
இருவர்மேலும் குளிர்காற்றை
பூவிதழ்களாய்த் தூவிக்கொண்டிருக்கிறது மின் விசிறி.

1662. நான் இதுதான்
இப்படித்தான் என்று சொல்லிவிட்டு
நீ நிம்மதியாக அமர்ந்திருக்கிறாய்
மற்றவர்கள்
கஷ்டப்படத் துவங்குகிறார்கள்
நீ
உன் உண்மைக்காகத்
தலை குனிகிறாயாவென
ஓரக்கண் பார்க்கிறார்கள்.
பெருமரங்களைக் கெல்லிய நீ
புற்களையும் கிள்ளிப்போடத் தொடங்குகிறாய்.

1663. எல்லாருக்கும்
ஒரே மாதிரித் தெரிவது
எனக்கு மட்டும்
வேறொன்றாய்த் தென்படுகிறது
ஒரு மாதிரி எல்லாம்
ஒரே மாதிரியல்ல.

1664. எல்லாருடனும் எனக்குச்
சிறு பிணக்கு இருக்கிறது.
எப்போது ஆரம்பித்தது என்று தெரியாத மாதிரி
எப்போது முடிந்தது என்றும் தெரியாது
எதிர்ப்படும்போதெல்லாம்
எதுவுமில்லாதது போல்
அனைவரும் புன்னகைத்துக் கடக்கிறோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...