எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 மார்ச், 2018

நுங்கிலிருந்து விரியும் பனையும் பச்சைப் பாம்படமும்.

1741.பறக்கும் கம்பளமெல்லாம் என்னங்க ஜுஜூபி. முக்கால் மணிநேரம் லேட்டா வந்து பறக்கும் ரயிலின் ஜன்னலோரத்துல உக்கார்ந்து மிதக்குற இன்பத்தை விடவா ..

1742. மத்தாப்பூக் குச்சிகள் போல் விளக்குக் கம்பங்கள். மீன் செதிலாய் நீரில் மின்னும் கட்டிடங்கள். குளிர் சாமரத்தோடு மரங்கள். இருளை அணைத்துப் படுத்திருக்கும் வானம். குட்டிக் குழந்தையாய் ஓடிவரும் நிலா. புறநகரில் கொட்டிக்கிடக்கும் அழகை ரசிக்கவே ரயிலில் பயணம் செய்ய வேண்டும்.

1743. நெகிழ்ந்து கொண்டிருக்கிறது 
கனத்த மேகம்.
இன்னும் சிறிது நேரத்தில்
அழுதுவிடவும் கூடும்.
நித்திலத்தில் செம்புலம் காட்ட
நீர் யாழ் ஸ்வரம் கோர்க்கிறது. 
ராகம் பிடித்து ரசித்துக் கொண்டிருக்கிறது
விசிறும் காற்று.

1744. வறண்ட நிலம் மழையை வரவேற்பது போல, தனிமையையும் அமைதியையும் ஏகாந்தத்தையும் தனக்குள் அனுமதித்தான். 
---- ஹருகி முரகாமியின் "கினோ." ஸ்ரீதர் ரங்கராஜின் மொழிபெயர்ப்பில் அற்புதம் !

1745. கட்டாயங்களை விருப்பங்களாகக் காட்டிக் கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று--விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர் . நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்ப்பில் வியக்க வைத்த இடம்.

1746. நாம் ஒருவர் மீது ஒருவர் நுண்கத்திகளால் எழுதுகிறோம். 
சீனக்கவிஞன் ஒருவன் தூரிகை மற்றும் மசி கொண்டு வரைவது போல்
சிறிது ரத்தம் உடனே உறைகிறது. 
சிறிது வழிந்து,
தொடர்ந்து வழிந்தபடி இருக்கிறது. 
விஷயங்களின் முக்கியத்துவம் வெட்டின் ஆழத்தை வைத்தே அளக்கப்படுகிறது. 
-- மிராஸ்லாவ் ஹோலூப் கவிதைகள். --- தமிழில் பிரம்மராஜன்.

1747.கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விஷயத்தை மறந்துகொண்டிருப்பது என்பது எவ்வளவு சுகானுபவம். துப்பவும் இயலாது விழுங்கவும் இயலாது கண்டத்தில் தங்கி இருந்த விஷத்தின் தடம் கூட இப்போது இல்லை என்றெண்ணும்போது ஆசுவாசமாக உணர்ந்தான்.
-- எழுத நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுகதையிலிருந்து ..

1748.ஏ.. தொரட்டிக் கண்ணு கருவாச்சியே.. நீ தொட்டா அருவா கரும்பாகுதே

1749.உள்ளபடியே நல்லவர்களைச் சந்திக்கும்போதும் முன்னொருதரம் சந்தித்த ஒருவரின் நடவடிக்கைகளோ சாயல்களோ கொண்ட பிம்பமாகத் தோன்றுவதும் அதன் மூலம் பிறப்பெடுக்கும் வெறுப்பும் ஆராய்வதற்குரியது.

1750.ஏதோ ஒன்றில் ஏற்படும் பயம் பல்லாண்டுகளாய் வளர்த்த நம்பிக்கைகளைத் தகர்த்துவிடுகிறது. திரும்பவும் மீள்வதற்குள் பல வருடங்கள் கடந்து விடுகின்றன.

1751. ஆழ்ந்த உறவுகள் பற்றியும் அதே நேரம் அவ்வுறவுகளின் நிலையில்லாத்தன்மை பற்றியும் விளக்க ஹருகி முரகாமியாலேயே முடியும். டாக்டர் தோகாய் பற்றிப் படித்துவிட்டு செயலற்று அமர்ந்திருக்கிறேன்.

1752.ஒருவரைப் பிரதிபலிக்கும் பெயர் என்பது குறியீடு மட்டுமே. அதை மட்டுமே கொண்டு நாம் ஏற்படுத்திக் கொள்ளும் நம்பிக்கைகள் அபத்தமானவை.

1753.Spies.. Spices... Everywhere. ;p

1754. கிராமத்தைச் சுமந்து திரியும் நகரத்து மனசில் ஒரு நுங்கில் இருந்து விரிந்து விடுகிறது பனை.

1755. வனப்பு குன்றிய தேவதையாய்
வெய்யிலில் உரிந்து கொண்டிருக்கிறது
வனம் விழுங்கிய நகரம்.

1756.காலத்தின் துலாக்கோல்தரையிறங்குகிறது
இலையுதிர்காலத்துக்கு.
வஸந்தகாலத்தின் 
ஞாபகத்தில் இன்னும்
பற்றியபடி இருக்கின்றன 
சில இலைகள். 
தராசுத்தட்டுகளைச் சமன்படுத்த
துளிர்களை ஒளித்துத்
தலை கவிழ்ந்திருக்கிறது 
சாலையோர மரம்.

1757.நீர்க்காசுகளைச் சுண்டுகிறது
நேரந்தப்பிய மழை.
நிலவுடமையான கலங்கலில்
தன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது நிலா.

1758.பாம்படத்தை ரசிக்கலாம். ஆனா முகத்தில் முகம் பார்க்க விரும்பும் பச்சைப் பாம்படத்தை ரசிக்க முடியுமா

1759.என் பயத்தின் வேர் நீயல்ல
பாம்படம் காட்டும் பாம்பாட்டி
தப்பியோடத் தோதாய்
தோட்டத்துப் பசுமையில் 
ஒளிந்திருக்கும் புடலங்காய்.
முகமும் அகமும் மறைத்து
சட்டையுரித்து சகவாசமற்று
நெளிந்தோடும் நீ
எவ்வாடியில் உன் முகம் பார்ப்பாய்

1760.எவ்வளவு கரைச்சாலும் காரைக்குடியில் கரையாத காசு சென்னையில் கடலில் கரைச்ச பெருங்காயமாயிடுது. தினம் சில ஆயிரங்கள் .
டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்







5 கருத்துகள்:

 1. முக்கால் மணிநேரம் லேட்டா வந்து பறக்கும் ரயிலின் ஜன்னலோரத்துல உக்கார்ந்து மிதக்குற இன்பத்தை விடவா ..//

  அதானே!!! அப்படிச் சொல்லுங்க

  கீதா

  பதிலளிநீக்கு
 2. மத்தாப்பூக் குச்சிகள் போல் விளக்குக் கம்பங்கள். மீன் செதிலாய் நீரில் மின்னும் கட்டிடங்கள். //

  அருமையான வர்ணனை...

  //எவ்வளவு கரைச்சாலும் காரைக்குடியில் கரையாத காசு சென்னையில் கடலில் கரைச்ச பெருங்காயமாயிடுது. தினம் சில ஆயிரங்கள் .//

  எஸ்ஸு....

  அனைத்தும் ரசித்தோம் இடையில் உங்கள் கவிதைகள் உட்பட...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. உங்களின் சிறுகதையை விரைவில் படிக்க வேண்டும் போலுள்ளது...

  பதிலளிநீக்கு
 4. நுங்கில் விரிகிறது பனைமரம்..ஆஹா

  பதிலளிநீக்கு
 5. அஹா அனைத்தும் பிடித்ததா .. நன்றி கீத்ஸ். :)

  நன்றி டிடி சகோ.விரைவில் எழுதிவிடுகிறேன்

  நன்றி புதியமாதவி சங்கரன் :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...