டெஸர்ட் சஃபாரியில் பெல்லி டான்ஸ்
டெஸர்ட் சாண்ட் சஃபாரியில் பாலை மணலில் ஜீப்பில் ஒரு ஸிக்ஸாக் உலா ( அப்படியே குடலை உல்டா பண்ணிவிடும் ), பழக்கமிருந்தால் அங்கேயே டூவிலரிலும் உலாவலாம். இது மதியம் ஆரம்பிக்கும். அழகான சூரியாஸ்தமனத்தோடு பாலைவனச் சோலைபோன்ற ஓரிடத்தில் மாலையில் ஒரு கேம்ப்ஃபையர். அங்கே இரவு விருந்து, அராபிக் காஃபி, பெண்களுக்கு மெஹந்தி அதன் ஒரு அங்கமாக இரவில் பெல்லி டான்ஸுடன் முடிவடைகிறது.
ஆண்களும் பெண்களும் டெஸர்ட் சஃபாரி முடிந்ததும் வருகிறார்கள். துபாய்க்குச் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த டெஸர்ட் சஃபாரியும் பெல்லி டான்ஸும்.
ஒட்டகத்தைக் கட்டிக்கோ. அப்படிக் கட்டிப் பிடித்தால் அல்லது
அதிகம் நெருங்கினால் கடித்துவிடலாம் என்று வாயில் மாஸ்க்
ஒவ்வொரு ஒட்டகத்துக்கும்.
பணம் கட்டினால் இதிலும் சவாரி செய்யலாம். கொள்ளை அழகோடு கட்டுப்பட்டுக் கிடக்குதுல்ல. :)
இரவின் மின்மினி வெளிச்சத்தில் ஆரம்பமாகிவிட்டது இரவு உணவும் பெல்லி டான்ஸும். அமர கம்பளங்கள் விரிக்கப்பட்டு ஹலால் செய்யப்பட்ட பார்ப்பக்யூ உணவுகள் மணம் பரப்புகின்றன.
இடுப்பில் இத்தனை மடிப்பா என்று வியக்கும் அளவு இடுப்பை மடித்து மடித்து சிம்ரன் ஸ்டைலில் ஒரு ஹிப் ஹாப் . ஹிப் டான்ஸ். :)
மெல்லிய ஆரஞ்சு வண்ண உடையில் வெளிநாட்டு நங்கை பெல்லி டான்ஸில் கூட்டத்தினரின் காமிரா கண்களுக்குள் அடைபட்டுக் கொண்டிருக்கிறார்.
சுழன்றாடும் ஆரஞ்சுப் புயல். கேமிராவினால் கேப்சர் பண்ண முடியாத வேகம். துளிக்கூட ஆபாசமில்லாத ஆனால் கவர்ச்சியான, அழகான கலை நயத்தோடு கூடிய நடன வடிவம் என்று இதை சொல்லலாம்.
நெசமாவே என்ன அழகு என்ன அழகு ! மயக்கும் புன்னகை. உற்சாகமான ஒரு அயல்நாட்டுப் பயணியும் ஆட ஆரம்பிக்கிறார். அவரது இடுப்பிலும் என்ன என்னவோ ஜால்ரா ஸ்டைலில் பெல்டிலிருந்து அசைகின்றன.
ஹிந்தி, அராபிக் பாடல் போல் இருக்கு.இந்த ஹாட் அரபிக் பெல்லி டான்ஸைப் பார்த்து இன்னும் சிலர் ஆடத்துவங்க களைகட்டத் துவங்குகிறது இரவு.
மூவரும் கைகோர்த்து ஆடி கலகலப்பாக்குகிறார்கள் சூழ்நிலையை. இனிய கானத்தோடும் இனிய ஆட்டத்தோடும் முடிந்தது டெஸர்ட் சஃபாரி. ஒரு சாம்பிளுக்காக ஏதும் பெல்லி டான்ஸ் வீடியோவை யூ ட்யூப்ல பாருங்க அட்டகாசமாயிருக்கும். :)
துபாய் போயிருந்தாலும் டெசெர்ட் சஃபாரி பார்த்ததில்லை
பதிலளிநீக்குகேள்விப்பட்டதுண்டு...இப்ப உங்க படங்கள் அதைச் சொல்லுது...காணொளியும்...
பதிலளிநீக்குநானும் பார்த்ததில்லை பாலா சார். :)
பதிலளிநீக்குஆம் துளசி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!