எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 டிசம்பர், 2018

அழகப்பா பல்கலையில் எனது கவிதை சூலும் சூலமும்.

மகிழ்வுடன் பகிர்கிறேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் எனது கவிதை ஒன்றும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. :)

சூலும் சூலமும் என்ற தலைப்பில் அன்னபட்சி கவிதைத் தொகுதியில் வெளியான அக்கவிதை அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வியின் முதலாமாண்டு முதல்பருவப் பாடத்திட்டத்தில் இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் ( 2018 - 2019 )  இடம் பெற்றுள்ளது.பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், மீரா, மேத்தா, இளம்பிறை, வெண்ணிலா, சீராளன்  ஜெயந்தன், பிருந்தா சாரதி, தங்கம் மூர்த்தி, இரா. மோகன், வ.சுப. மாணிக்கனார் - ( கம்பர் ), அய்க்கண், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், பிரபஞ்சன், வண்ணதாசன், பாரதிபாலன், அகிலன் கண்ணன், அம்பை, எஸ். இராமகிருஷ்ணன், சு.தமிழ்ச்செல்வி ஆகியோரது படைப்புகளுடன் என் கவிதையும் இடம் பெற்றுள்ளது பெரும் பேறு. நன்றி அழகப்பா பல்கலைக்கழகம் & தமிழ்த்துறை உயராய்வு மையத் தலைவர் திருமதி செந்தமிழ்ப்பாவை அம்மா.

இக்கவிதை அன்ன பட்சி கவிதைத் தொகுதியில் 32 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அன்ன பட்சி நூலை வெளியிட்ட அகநாழிகை பதிப்பகத்துக்கும் திரு. பொன்வாசுதேவனுக்கும் நன்றிகள். 

6 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. மாணவர்களின் தளமானது பரந்த தளம். அதில் இடம் பெற்றமையறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 3. அருமை உடன்பிறப்பே. வாழ்த்துகளும் வணக்கங்களும்.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் Still miles to go எங்கோ போகிறீர்கள்

  பதிலளிநீக்கு
 5. நன்றி சிவப்ரகாசம்

  நன்றி ஜம்பு சார்

  நன்றி ப்ரசன்னா சார்

  நன்றி பாலா சார் !

  நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...