எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 டிசம்பர், 2018

துபாய் அட்லாண்டிஸ் அக்வாவென்சர் - THE LOST CHAMBERS.

துபாய் அட்லாண்டிஸ் அக்வாவென்சர் - THE LOST CHAMBERS.

.


































துபாய் அட்லாண்டிஸ் அக்வாவென்சர் - THE LOST CHAMBERS.


 சிங்கப்பூர் செந்தோசா பீச்சில் உள்ள அண்டர்வாட்டர் வேர்ல்டைப் பார்க்குமுன் இந்த துபாய் அட்லாண்டிஸில் உள்ள பாம் ஜுமைராவின் அக்வாவென்சரை/ அக்வேரியத்தைப் பார்த்துப் பிரமித்திருந்தோம். இன்னும் துபாய் மாலில் உள்ள அக்வேரியம் ரொம்பபபப பெரிசு . உயரம் இரண்டு மாடி பெரிசு. அதிலும் நீளமும் நூறு அடிக்கும் மேலிருக்கும். யானை பற்றி ஒரு  குழந்தை எந்த டோனில் சொல்லுமோ அப்படி படித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதுவரை துபாய் மாலில் உள்ள அக்வேரியம் அளவு உலகில் எங்குமே பார்க்கவுல்லை.


ஆனால் துபாய் அட்லாண்டிஸிலும் மிக உயரமான மீன் தொட்டிகள். பல்வேறு உயரங்களில் பல்வேறு அளவுகளில் விதம் விதமான தொட்டிகளில் கிட்டத்தட்ட 65000 வகையான நீர்வாழ் உயிரினங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றனவாம்மூழ்கிய நகரங்கள் போன்ற கட்டமைப்பில் மீன்கள் உலாவரும் பிரம்மாண்டத் தொட்டிகள் எங்கெங்கும். சீ அர்ச்சின்ஸ், சீ குக்கும்பர், சீ ஹார்ஸ், ஆகியனவும் காணக் கிடைத்தன.

துபாய் அட்லாண்டிஸில் உள்ள பாம் ( பனைமர வடிவ கட்டிடங்கள் ) ஜுமைராக்குச் சென்றோம் ஒரு விடுமுறை தினம். அட்லாண்டிஸில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் கொள்ளை அழகு. இந்த அக்வேரியம் உள்ள கட்டிடமும் துபாயின் இண்டர்நேஷனல் கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டு.

இங்கேதான் நான் ஹம்மர் மீனையும் பார்த்தேன். அது ஒரு பொன் மாலைப் பொழுது.

கடற்கரையை ஒட்டி இருப்பதால் டாக்ஸி அல்லது காரில் செல்லலாம். ஆனால் மெட்ரோவில் செல்வது மிக அழகான இயற்கை & செயற்கை அழகுகளைக் கண்டு களிக்க உதவும்.

இதுவந்தாச்சு லாஸ்ட் சேம்பர்ஸ். எங்கு பார்த்தாலும் தங்க மினுமினுப்பு. இதோ ஒரு மீன் தொட்டி. தொட்டி என்பதை விட கடல் என்று சொல்லலாம். எவ்ளோ மீன்கள்.

அந்த பிரம்மாண்டத் தொட்டி வட்டவடிவமானது. அதனுள் சுற்றி வரும் ஆயிரக்கணக்கான மீன்களை நாமும் சுற்றி வந்து பார்க்கலாம். மீனோவியம்.

நோபு எனப்படும் ரெஸ்டாரெண்ட் இங்கே பிரசித்தம். ஆனால் எல்லாம் ஆனைவிலை குதிரை விலை. எனவே ஒன்றும் சாப்பிடலை. வீட்ல போய் சாப்டுக்கலாம். :)

வெள்ளிச் செதில்களும் வண்ண விளக்குகளும். நீல()ச் சுறாக்கள். இது ஹம்மர் இல்லை. அது ஒருமாதிரி ஆரஞ்சு கலரில் வாயைக் குவித்துக் கொண்டிருக்கும். வாய் நல்ல ரப்பர் மாதிரி ரவுண்டாக திக்காக இருக்கும். அதை மூடி மூடித் திறப்பதே முத்தமிடுவதுபோல் அழகாக இருக்கும்.

மேல்மாடம் தாண்டிச் செல்லும் உயரத் தொட்டி. மீன்/டால்ஃபின் சாண்ட்லியர் :) இதுதான் அந்த மீன்களின் கனவுலகம்.

இதைச் சுற்றிலும் மூன்று பக்கம்  கடல், ஒரு பக்கம் வீடுகள், பீச்சுகள், தனித்தனி காட்டேஜுகள், ஹோட்டல் ரூம்கள் , அண்டர்வாட்டர் ரூம்கள் இருக்கின்றன. பனை மரங்கள்தான் எங்கெங்கும். துபாய் போனா மெட்ரோவில் அட்லாண்டிஸ் போய், க்ரெஸண்ட் ரோட்டில் இருக்கும் இந்த பாம் ஜுமைராவின் அக்வாவென்சரை காணத்தவறாதீங்க. வித்யாசமான அனுபவமா இருக்கும்.

2 கருத்துகள்:

  1. //பனைமர வடிவ கட்டிடங்கள்//

    ஹா.. ஹா.. பேரீட்சை மரம் வடிவத்தை நம்மூர் பாணியில் மாற்றியதை ரசித்தேன் சகோ.

    பதிலளிநீக்கு
  2. ஹாஹா நன்றி சகோ :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...