எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 19 டிசம்பர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.

1141. வேதபாடசாலை – ரிக் வேதம் பயிற்றுவிக்கும் பாடசாலை. பாடசாலை கட்டுவித்து அதில் கனபாடிகள் ஒருவர் வேதத்தை மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பிப்பார். இதற்கு என இறையிலி நிலங்கள் மூதாதையரால் எழுதப்பட்டு அவற்றில் இருந்து கிடைக்கும் பயன்கள் ( நெல், தானியம் காய்கறி ) இந்தப் பாடசாலையில் பயில்வோருக்கு உணவாக வழங்கப்படும். பாடசாலை நிர்வாகச் செலவுக்கும் பயன்படும்.

1142. பசுமடம் – கோசாலை, தினப்படி பூஜைக்கு கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பால் வழங்கும் பசுக்களைப் போஷித்துப் பராமரிக்கும் இடம். நகரத்தார் பரிபாலனம் செய்யும் ஒவ்வொரு கோவிலுக்கும் அநேகமாக பசுமடம் இருக்கும். இப்பசுமடத்தில் முதிர்ந்த மாடுகளையும் பராமரிப்பார்கள்.

1143. சம்போ (பூஜை) – காசியில் சிவனுக்கு செய்யப்படும் பூஜை சம்போ பூஜை.  காசி விஸ்வநாதர் கோயிலில் ஆறுகாலமும் நடக்கும் பூஜை நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திலிருந்து கூடைகூடையாய்ப் பூக்கள், அபிஷேகதிரவியங்கள் ஆகியன கொண்டு செல்லப்பட்டு நடத்தப்படும். சத்திரத்திலிருந்து ஆறு காலமும் மேள தாளத்துடன் தலைமேல் பித்தளைப் பூக்குடலைகளையும் அபிஷேகப் பொருட்களையும் சுமந்து பணியாளர்கள் முன்னே செல்ல அவர்களுடன் சத்திரத்தில் தங்கி இருக்கும் நகரத்தார் மக்கள் கோவிலுக்குச் சென்று அபிஷேகத்தையும் அலங்காரத்தையும் தீபாராதனையையும் கருவறையின் படியில் அமர்ந்து தரிசிக்கலாம். இந்தப் பூஜை ஊர்வலத்த்தும் பூஜைக்கும் சம்போ பூஜை என்று பெயர்.  

1144. மகேஸ்வர பூஜை – சிவனுக்கு செய்யும் பூஜை. திருமண சமயங்களில் வேண்டிக்கொண்டவர்கள் இப்பூஜையைச் செய்வார்கள். ஏழு பானைகளில் பொங்கலிட்டுப் படைப்பார்கள். மிக விமரிசையான பூஜை இது.

1145. கார்த்திகை வேல் பூஜை:- கார்த்திகை மாதத்துக்காரர்கள் ( விரதமிருப்பவர்கள் ) கார்த்திகை மாதம் ஒவ்வொரு சோமவாரமும் முருகனின் தெண்டாயுதம் வேலுக்கு அபிஷேகம் செய்து மாவிளக்கு வைத்து அர்ச்சனை செய்து ஏழுவகைக்காய்கறிகளுடன் சர்க்கரைப் பொங்கல் அன்னம் படைத்து பூஜித்து ஊரோடு உணவிட்டு உண்பார்கள். சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம், அறுபடைக் கவசம், ஸ்கந்த குரு கவசம், காவடிப் பாடல்கள், வேல் மாறல், வேல் வகுப்பு,  பாமாலைப் பாடல்கள் படிப்பார்கள். இதற்கு கார்த்திகை வேல் பூஜை என்று பெயர்.1146. வகுப்பு:- நகரத்தாரின் ஒன்பது கோயில்கள் உண்டு. அதில் உள்ள பிரிவுகள் வகுப்பு எனப்படும். வைரவன் கோவிலில் தெய்யனார் வகுப்பு என ஒரு பிரிவு உண்டு. இது போல் சிலவற்றில் வரும் பிரிவை வகுப்பு என்பார்கள்.

1147. திருப்பணிகள்:- கோவில் திருப்பணிகள் செய்வது. கோவில்கள் கட்டுவது, புனருத்தராதாரணம் செய்வது, சத்திரங்கள் அமைப்பது, ஊரணிகளை சீர்படுத்துவது , திருவிழாக்கள்,புரவி எடுப்பு, தேரோட்டம், தெப்பம் , பூசைகள், யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றுக்குப் பொருளுதவி செய்வது போன்ற பணிகளை தம் வருவாயின் குறிப்பிட்ட சதவிகிதத்தை தருமப் பணிகளுக்காகச் செலவிடுவது, திருப்பணிகள் எனப்படும்.

1148.ருத்ராட்சம், கவுடு :- ருத்ராக்‌ஷம் பற்றித் தனிப்பதிவே எழுதி உள்ளேன். இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணிவார்கள். சிவப்புக் கயிறு அல்லது கறுப்புக் கயிறிலோ அல்லது தங்கம் வெள்ளி பிடித்து நகையில் கோர்த்தோ அணிவார்கள். கண்டத்தில் படும்படி அணிவதால் குளிக்கும்போது இதில் படும் நீர் உடலில் படும்போது அது குழந்தையின் உடல் நலம் கொடுக்கும் ஔஷதமாகும் இது.

1149. உபதேசம், சிவதீட்சை:- 16 வயதிலிருந்து எந்த வயதினர் வேண்டுமானாலும் உபதேசம், சிவதீட்சை பெற்றுக் கொள்ளலாம். பஞ்சாட்சர உபதேசத்தை ஆதீனங்கள் உபதேசித்து சிவ தீட்சை அளித்து விபூதி தரிக்கும் நியமங்களைக் கற்றுத் தருவார்கள். உபதேசம் கேட்டால் தினமும் காலையில் நீராடி ஒரு முறை நியம நிஷ்டைப்படி விபூதி தரித்து சிவனை தியானித்துப் பஞ்சாட்சரத்தை 108 முறை ஓத வேண்டும்.

1150. பாதரக்குடி ஆதீனம் :- இவர்கள் ஆண்களுக்கு தீட்சை அளிப்பார்கள். சிதம்பரத்திலிருந்து வந்த நகரத்தார் இளைஞர்களின் குரு இவர் என்பதால் இதன் தலைமை குரு தீட்சை அளிப்பார்.  

1151. துலாவூர் ஆதீனம் :- சிதம்பரத்திலிருந்து வந்த நகரத்தார் இளைஞர்களுக்குப் பெண் கொடுத்தவர்கள் பிள்ளைமார் என்பதால் இவர்களுக்கு தீட்சையை துலாவூர் ஆதீனத்தின் தலைமை குரு வழங்குவார்.

1152. கோவிலூர் ஆதீனம்.:- காரைக்குடிக்கருகில் உள்ள கோவிலூரில் சிவன் கோவில் மற்றும் இசைக்கல்லூரி, மடங்கள் உள்ளன. இதை கோவிலூர் மடாலயம் நிர்வகித்து வருகிறது. அக்கோவிலூரின் ஆதீனங்கள் இக்கோவிலுக்கும் சமூகத்துக்கும் தங்கள் சொத்துக்களை அர்ப்பணித்துச் சேவை செய்துள்ளார்கள்.

1153. குன்னக்குடி மடம் :- குன்றக்குடியில் சத்திரங்களும், மடங்கள் அதிகம் உள்ளன. சத்திரங்கள் பொதுமக்கள் தங்கிப் போகும் இடங்கள் என்றால், மடங்கள் தினப்படி வேதபாராயணத்தோடு பூசை நடக்கும் இடங்கள். வேத பாடசாலைகளும் மடங்களும் நிரம்பியது குன்றக்குடி.

1154. விலாசம்:- ஒவ்வொரு தனி மனிதரும் அவரது அப்பா, ஐயா, பாட்டையா ஆகியோருடைய பெயருடன் குறிப்பிடப்படுவார். பனழானா வீயன்றானா பெனாரீனா அனாரூனா என்று எங்கள் ஐயாவின் விலாசம். பழ.வீர.பெரி.அருணாசலம் என்பது அவர்கள் பெயர்.

1155. வீட்டுப் பெயர்:- வீட்டுக்குக் கூடப் பேர் உண்டு. ஆவுடையான் செட்டியார் வீடு, வேகுப்பட்டியார் வீடு, மல்லாம்பட்டியார் வீடு, காடத்தாம்பட்டி ராமன் செட்டியார் வீடு, ஆவிச்சி வீடு, லட்டு வீடு, ஆக்காட்டா வீடு, மோட்டா வீடு, தேவகோட்டையார் வீடு என்று. அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் அல்லது வலசை வந்த ஊர் மற்றும் சில நிகழ்வுகளைக் காரணம் கொண்டு அழைக்கப்படுகிறது.

1156. நகரத்தார் சங்கம் :- ஒவ்வொரு ஊரிலும் உள்ள நகரத்தார்கள் சேர்ந்து அமைத்திருப்பது. இதன் மூலம் பிள்ளையார் நோன்பு போன்ற பண்டிகைகள் சேர்ந்து கொண்டாடப்படுகின்றன. பிள்ளையார் நோன்பு, கார்த்திகை பூசை, திருவிளக்கு பூசை, நாமக்கல் ஆஞ்சநேயர் அபிஷேகம் போன்றவற்றில் ஏலம் நடத்தி அந்த வருமானத்தைக் கொண்டு மக்களுக்கு அன்னதானமும் சத்திரப் பராமரிப்பும் செய்து தருகிறார்கள். பழனி, காளஹஸ்தி, காசி போன்ற ஊர்களில் இந்த நகரத்தார் சங்கங்கள் வழிப்போக்கர்கள், பக்தர்கள் தங்க இடம் வாங்கி சத்திரம் அமைத்து சேவை செய்து வருகின்றன.

1157. மகுட- தன வைசியர் -  மன்னனுக்குமுடி சூட்டும் மரபினர், தன வைசியர் - பொருள்கொடுத்துப் பலிடை( வட்டி )  வாங்குபவர்.  

1158. பூமி பாலர் -  மன்னர் பின்னோர்

1159. வேள்வணிகர் – சாத்து எனப்படும் கொண்டு விக்கப் போய்வரும் வணிகள் வேள்வணிகர். இவர்கள் பயணத்துக்காகக் குதிரை, காவற்படை, மேழிக்கொடி எல்லாம் வைத்திருந்தவர்கள்.

1160. வேளார் – குலதெய்வக் கோயில்களில் ( கருப்பர், ஐயனார், முனிஸ்வரர், காளியம்மா,போன்ற உக்கிர தெய்வங்களுக்கு ) குலதெய்வங்களுக்கு அபிசேகம், ஆராதனை , படையல் ,பூசை செய்யும் அதிகாரம் பெற்றவர். இப்பூசாரியை வேளார் ஐயா என்று அழைப்பார்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.

106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

  

3 கருத்துகள்:

 1. உங்கள் பகுதி சொற்கள் அவற்றின் விளக்கங்களின் தொகுப்பிற்கு நன்றி. நல்ல தொகுப்பு. விலாசம் என்பது எல்லோரும் சொல்லும் ஒன்றுதான் என்றாலும் அதில் உங்கள் ஐயாவின் பெயர் எப்படி அழைக்கபப்டுகிறது என்பது வித்தியாசம்...

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 2. நன்றி வெங்கட்சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...