1121. காத்தியலுக்கு வடிக்கிறது - கார்த்திகை மாதம் சோமவாரங்களில் குன்றக்குடியில் பாட சாலையிலும், வீடுகளில் மற்றும் பூசை வீடுகளில் முருகனுக்காகக் கார்த்திகைப் பூசை செய்து சோறு வடித்து பள்ளயம் போட்டு ஊரோடு அன்னதானம் செய்வது.
1122. எக்கிப்புடும் - கூட்டம் எக்கிப்புடும் என்று சொல்வார்கள். அதிகக் கூட்டமாக இருப்பது. நெருக்கடி மிகுந்த இடம். விசேஷம், திருவிழா போன்றவற்றில் ஆள் பேர் அதிகம் சேர்வது.
1123. கெந்துனாப்புல - காலில், பாதத்தில், பாதத்தின் அடிப்புறம் அடிபட்டிருந்தால் அல்லது முள் போன்றவை குத்தி இருந்தால் கெந்துனாற்போல் நடப்பது. காலை சரியாக ஊன்றாமல் நடப்பது. உடற்குறைபாடு உடையவர்கள் நடந்து வருவது.
1124. கோவில் நாடி - கோவிலை நோக்கி. சாமி கும்பிடச் செல்வதைக் குறிப்பது.
1125. கருதலையோ - ( தம்மை ) நினைக்கவில்லையோ. எண்ணவில்லையோ, ஒரு விஷயத்தைப் பொருட்டாகக் கருதவில்லையோ என்ற பொருளில் வருவது.
1126. வாஞ்சால - பாசம், பரிவு, அன்பு, வாஞ்சாலை, அதீத பாசம். உடல், மனம் சம்பந்தப்பட்ட உறவில் வரும் பாசம் , உறவினர் மேல் கொள்ளும் அன்பு.
1127. தெகட்டுதல் - திகட்டிப் போதல். ஒரு விஷயம் அதீதமாகக் கொடுக்கப்பட்டால் ஏற்படும் உணர்வு. அதீதம். இனிப்பு திகட்டும். அதேபோல் இனிமையான விஷயங்களும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் திகட்டும்.
1128. ஒமட்டுதல் - வாந்தி வரும் உணர்வு. உடலுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உண்டாகும் வாந்தி வரும் உணர்வு. சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளாவிட்டால், உடல் நலமில்லாமல் போனால் அல்லது சூழ்நிலை மனநிலை காரணமாக உடல் நலிவு கொண்டால், ஒமட்டுதல் ஏற்படும். கர்ப்பிணி ஸ்த்ரிகளுக்கும் மசக்கை காரணமாக ஒமட்டுதல் ஏற்படும்.
1129. மேலைக்கி - மேல் வரும் நாட்களில், பின் வரும் நாட்களில், அடுத்து செய்யப்போவது, அடுத்த காரியம்.
1130. முழுகாம நிக்கிறா - மாசமா இருக்குறா, மாதத் தீட்டுக்கு முழுகாமல் இருப்பது தான் முழுகாம நிக்கிறா என்பார்கள். கர்ப்பமடையும் பெண்கள் 99 சதவிகிதம் பத்து மாதங்களும் தீட்டு முழுகாமல் இருப்பார்கள். அதைத்தான் முழுகாம நிக்கிறா அல்லது மாசமா இருக்குறா என்று சொல்வார்கள். திருமணமாகி ஆறேழு மாதமான புதுமணப் பெண்ணைப் பார்த்து இன்னும் முழுகிக்கிட்டுத்தான் இருக்காளா என்று உறவினர்கள் விசாரித்துக் கொள்வார்கள்.
1131. முழுக்கு போச்சு - மெனோபாஸ், தூரம் நின்று போவதைக் குறிப்பது. சுமாராக பத்துப் பதினைந்து வயதில் வயதுக்கு வரும் பெண்ணுக்கு 50 வயதில் இருந்து 55 வயதுக்குள் முழுக்கு நின்று விடும். இதைத்தான் முழுக்குப் போச்சு என்பார்கள்.
1132. செனந்துபோயி - சிவந்து போதல், முகம் சிவத்தல், அல்லது கோபத்தாலோ , வெட்கத்தாலோ முகம் செம்மை அடைதல்,
1133. வெளையாடன - விளையாடுதல், விளையாடிக்கொண்டிருப்பது. அம்மை போன்றவை ஆராட்டும்போது விளையாடுறா ஆத்தா என்றோ இது வெளையாடன எப்பத்தான் சரியா வருமோ என்றும் சொல்வதுண்டு.
1134. கோக்காலி - நான்கு கால் உள்ள மர ஸ்டூல்
1135. முக்காலி - மூன்று கால் உள்ள மர ஸ்டூல்.
1136. பெருவாரியா - பெரும்பகுதி, பெரிய அளவு.ஒரு பொருளை அளவுக்கு அதிகமாகக் கொடுக்கும்போது அவர்கள் பெருவாரியாக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்வதுண்டு.
1137. பெத்தோரம்மா- பெத்தபெருமாள் என்னும் கடவுள். காடேறி அம்பாள் என்பதும் காட்டில் கோயில் கொண்டுள்ள அம்மனைக் குறிப்பது.
1138. பொக்குன்னா - உடனடியாக, சட்டென்று, வேகமாக, மனோவேகம் வாயுவேகம்.
1139. உக்கிப்போதல் - உக்கி உடைந்து கரைந்து போதல், ஒன்றுமில்லாமல் போதல், குறைந்து குன்றிப் போதல். ஒரு விஷயத்தை நினைத்துக் கவலைப்பட்டு உடல் நலம் குன்றுதல்.
1140. ஒளட்டுதல் - நோயின் காரணமாக உளறுதல், வாய் குளறுதல், நோயை அல்லது எதிர்காலத்தை எண்ணிக் கவலையாகப் பேசுதல், திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லுதல்,.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.
34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.
36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.
37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.
38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.
39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.
42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.
43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..
44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.
45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.
46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)
47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )
48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.
49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும்.
50. கோவிலூர் மியூசியம்.
51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-
52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.
53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.
54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.
56. திருப்புகழைப் பாடப் பாட..
57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.
58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.
59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.
60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.
61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.
62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.
63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.
64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.
65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.
66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.
67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்
68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )
69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.
70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.
71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.
72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!
73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.
74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.
76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.
77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.
78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும்.
79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும்.
80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-
81. மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.
82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.
83. காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.
84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.
85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-
86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.
87. இந்த சீர் போதுமா ?!
88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்
89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.
90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .
91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.
92. இனியெல்லாம் பிஸினஸே
93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.
94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.
95. தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.
96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.
99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.
102. பழம்பெரும் வீடுகள்.
104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.
105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.
105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.
இதில் பல சொற்களை நாங்களும் பயன்படுத்துகிறோம் என்பதில் மகிழ்ச்சி...
பதிலளிநீக்குபல சொற்கள் மிக ஃபெமிலியராக இருக்கு...அறிந்து கொள்ளவும் முடிகிறது..நல்ல தொகுப்பு...
பதிலளிநீக்குகீதா: கதை எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பா வட்டார வழக்கில் கதைகள் அமைத்தால்...
செட்டிநாட்டுப் பேச்சு வழக்கு: நான் பேசி வளர்ந்த மொழி.
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
பதிலளிநீக்குநன்றி துளசி & கீத்ஸ்
நன்றி முத்துசாமி சகோ . உங்கள் வேர்ட் ப்ரஸ்ஸில் பின்னூட்டம் அளிக்க முடியவில்லை.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!