எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 நவம்பர், 2018

பத்மாவதி விவேகானந்தன் உரை :-


பத்மாவதி விவேகானந்தன் :-

கவிதைப் பட்டறையின் ( 2011 ) பத்மாவதி விவேகானந்தனின் பேச்சைக் குறிப்பெடுத்து இருந்தேன். அதைத் தொகுத்திருக்கிறேன். குறிப்பும் சரியாக இணைக்க வரவில்லை. வழக்கம்போல் புரிந்தவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். :) 

பெண்கள் எவ்வாறு கவிதை எழுதுகிறார்கள் ?.

கனிமொழி, சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, அரங்க மல்லிகா, தமிழச்சி, அம்பை, உமா மகேஸ்வரி, ஈழத்து அவ்வை, பூமணி ஆகியோரின் கவிதைகள் சிறப்பானவை.

பெண் மைய கவிதைகளை முறையாக எழுதியவர் கனிமொழி.

“ தாலியற்றவருக்கெல்லாம் இட்லிக்கடை வைப்பதுதானே தாசில்தார் உத்யோகம் “ என்று பிற்போக்கான வசனங்கள் நிறைந்திருந்தது ஒரு காலம்.

பெண் படைப்புகளில் முலைகள் என்ற குட்டி ரேவதியின் கவிதைத் தொகுப்பு விற்றுத் தீர்ந்தது.

ஔவையாரை – கிரேக்கக் கவிஞர் சாப்போவோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.



இன்றைக்கு ஆண்களை நண்பர்களாக சொல்லமுடிகின்றது. ஆனால் 40 வருடத்துக்கு முன்னால் சொல்ல முடியாது.

அம்பேத்கார் சொன்னது ஐந்தாவது வர்ணமாக தாழ்த்தப்பட்டவர்கள் வைக்கப்பட்டது போல ஆறாவது வர்ணமாக பெண்களும் வைக்கப்பட்டார்கள்.

சில பெண் படைப்பாளிகள் “ நான் ஒரு பெண்” என்று சொல்லித்தான் ஆரம்பிக்கிறார்கள். சில ஆண்கள் பெண்ணின் எழுத்தை ஆராதிப்பவர்களாக, நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் போல எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அர்த்தமில்லாமல் எழுதுகிறவர்கள் எளிமையாக எழுதுகிறவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆண்களுக்கான மரபு ரீதியான கோட்பாடுகளையோ கொள்கைகளையோ வைத்துக் கொண்டு திறனாய்வாளர்கள் என யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எப்படி இணையாக இருந்தாலும் ஆண்களுக்குரிய இடம் வேறு, பெண்களுக்குரிய இடம் வேறு.

எலின் சிட்சு. மாதிரியான பெண் திறனாய்வாளர்கள் “ பெண்ணின் உடல் என்பது பன்முகப்பட்டது “ “ ஒரு பெண் தன்னைத் தொட்டுக் கொண்டிருக்கிறாள்” என்கிறார்.

சுயமைதுனம் பற்றிப் பெண்கள் எழுதுகிறார்கள். லெஸ்பியனிஸம் பற்றி – எங்கள் படைப்புலகில் முழுமையாக எழுதுவதற்கு முழுமையாக உரிமை இருக்கு என்கிறார்கள்.

தமிழச்சியின் வனப்பேச்சி சுதந்திரமானவளாக இருக்கிறாள்.

பெண்ணின் பன்முகத்தனம் – ஆணாதிக்கத்தை, அதன் கருத்தியல்களை உடைப்பது.

ஹெலன் சிட்சு.

ஒரு ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் ஒரே பிரதிக்குள் தேடுங்கள்.

பிரதிக்குள் இருக்கிற ஆண் அல்லது பெண்ணைக் கட்டுடைத்துச் சொல்லி விட முடியும்.

ஒரு ஜந்துவாக, பொருளாக இருக்க விருப்பம் இல்லை. எங்கள் போராட்டம் இதுதான்.

சமூக கலாச்சார மொழி போன்ற வலைப்பின்னல்கள் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே இருக்கிறது.

ஒரு வீட்டில் ஒரு ஆண் ஒன்றைச் சொல்வதற்கும் ஒரு பெண் ஒன்றைச் சொல்வதற்கும் வித்யாசம் இருக்கிறது.

அதிகார மையத்தை உடைத்தல். உடைத்து வரலாற்றை மீள எழுதுதல். அதுதான் முக்கியம்.


எங்கள் முதுகில் பட்ட பிரம்படி உங்கள் முதுகில் படும் நாள் வரும்.

‘உன்னையே நீ எழுது’ சிட்சூ சொல்கிறார். நிலவுடமை சமூகத்தில் பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டது பற்றி ( ROSSIL MILES ).ரோஸில் மைல்ஸ் என்ற சிறந்த சிந்தனையாளர் விரிவாகச் சொல்கிறார்.

மலடி என்ற பெயர் பெண்களுக்கு உண்டு இந்த வார்த்தை ஆணுக்கு இல்லை. ஏனெனில் உருவாக்கியவர்கள் ஆண்களே.


பெண்கள் ( திலகபாமா, வைகை செல்வி ) பெண்ணியக் கவிஞர்களுக்கு எதிரானதை ஒத்துக் கொள்ளவில்லை.

ஒரு ஆண் பிறக்கிறான். ஒரு பெண் உருவாக்கப்படுகிறாள்.

“உங்கள் தாய்ப்பாலை உங்கள் மைக்கூடுகளில் நனைத்து எழுதுங்கள். ( ஹெலன் சிட்சூ ).

மல்லார்மே, ஜூலியார் கிறிஸ்வா – மரபுகளை மீற வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். பிரெஞ்ச் பெண்ணியலாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள், இதற்கு ஆண்கள் திருப்பி செய்ய வேண்டியதில்லை.

கவிதை வடிவே சிறந்த சாதனம். படைப்பிலக்கியத்தில் உச்சக்கட்டத்தை எய்து நிற்கும்.

எழுத வந்த காரணம் :- இரு பால் பாலியல் பண்புடையவளாக என்னை அறிந்துகொண்ட பேறு  என் எழுத்திலும் பெண்ணுக்கான எழுத்து என கடக்க விரும்புகிறேன். ஹெலன் சிட்சூ. 

‘அ’ வுக்குள் ‘அ’ அப்பா கூறும் இருப்பதால் OTHERS  என்பவற்றை மற்றவற்றைப் பற்றி பேசுவதற்கான கூறு இருக்கிறது.

விளிம்பு நிலை மக்கள் – பெண்கள்.

செய்வது ஆபாசமில்லை. சொல்வது ஆபாசமா. ?

‘எங்கோ பெருகிய வன்மமாய்
என் மீது நீளும் ஆண்குறி “

பெரியார் – கற்பு என்பது போக்கிரித்தனம் என சாடுகிறார். நவீன பெண்ணியம் பேசியவர். – சமூக சிந்தனையாளர். கற்பழித்தல் என்பது வண்கலவி, கற்பு என்ற சொல் எதிலும் கிடையாது என்று கட்டுடைத்துச் சொல்கிறார்.

இது மூடப்பட்ட கதவொன்றைத் திறக்கும் முயற்சி.  

இனி மிகச் சிறந்த கவிதைகள் பெண்கள்தான் எழுதுவார்கள் என தமிழன்பன் கூறுகிறார்.

எல்லாவற்றையும் எதிர்த்துக் கேள்விக்குள்ளாக்குவது ஒரு பிரதியின் தன்மையாக இருக்க வேண்டும். அறிந்தும் செலுத்தக்கூடிய தந்தை வழி சமூகத்தின் தடைகளை தகர்த்தெறியுங்கள்.

பெண் கவிஞர்களின் பயணம் என்பது விடுதலை நோக்கியது. சமத்துவம் நோக்கியது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...