எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 நவம்பர், 2018

ஷெங்க் னுவும் ஷெங்க்னானும்.


ஷெங்க் னுவும் ஷெங்க்னானும். .


இருமணம் இணையும் திருமணங்களில் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சீனாவும் எதிர்கொள்கிறது. சீனாவிலும் தாமதத் திருமணங்கள் நிகழ்கின்றன. ஷாங்காயிலும் பெய்ஜிங்கிலும் ஐந்து லட்சம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து ( விடப்பட்டு )  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு 20 வயதுக்கும் மேல் பலவருடங்கள் திருமணம் ஆகாமல் தனித்து வாழும் பெண்களை ”ஷெங்க் னு”  என்று அழைக்கிறார்கள். சிறு கிராமங்களில் அதிகம் சம்பாத்தியம்/வருமானம் இல்லாமல்  அதன் காரணமாகத்  திருமணமாகாமல் தனித்து வாழும் ஆண்களை ”ஷெங்க்னான்” என்று அழைக்கிறார்கள். இது ஒரு சமூகப் பிரச்சனை ஆகிவருகிறது.

இந்த தாமதத் திருமணங்களுக்கான காரணங்கள் சீனாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஏன் உலக அளவிலும் ஒன்றுதான். சீனாவிலும் மணமகன்கள்  மணப்பெண்களை விட வயதில் சிறிதாவது மூத்தவர்களாக, நல்ல உயரம், நிறம், பர்சனாலிட்டியுடன் உயர் கல்வித்தகுதியும் , கைநிறைந்த சம்பாத்தியமும் இருப்பவராக இருத்தல் இன்றியமையாத விஷயமாகும்.    


இதில் எல்லாத் தகுதியும் நிரம்பப் பெற்ற ஏ க்ரேட் ஆண்கள்  தங்களைவிட அனைத்திலும் குறைந்த பி க்ரேட் பெண்களை மணந்து கொள்கிறார்கள். அதேபோல் பி க்ரேட் ஆண்கள் சி க்ரேட் பெண்களையும் சி க்ரேட் ஆண்கள் டி க்ரேட் பெண்களையும் மணக்கிறார்கள். ஆனால் இந்த கல்வி, பதவி, சம்பாத்தியம், உயரம் வயது ஆகியவற்றில் உயர்ந்த ஏ க்ரேட் பெண்களுக்கும் எல்லாவற்றிலும் சுமாராக இருக்கும் டி க்ரேட் ஆண்களுக்கும் திருமணம் என்பது எட்டாக் கனியாக இருக்கிறது.

மாட்ச் மேக்கிங் ஈவண்ட்ஸ் எனப்படும் நிகழ்வுகள் நடத்தப்படும்போதெல்லாம் இவ்வாறான ஏ க்ரேட் பெண்களும் டி க்ரேட் ஆண்களும் திருமண இணை கிட்டாமல் துன்புறுகிறார்கள்.  

இதுபோல் இரண்டு லட்சம் தனித்து வாழும் ஆண்களும் பெண்களும் நிரம்பியதாய் இருக்கிறது ஷாங்காய் & பெய்ஜிங் நகரங்கள். ஆண் பெண் விகிதாச்சாரம் கூட அதிகம் இல்லை. 103 ஆணுக்கு 107 பெண் இருக்கக்கூடுமாம் 2020 இல். ஆண் பெண் இருவரும் இன்று சுதந்திரமானவர்களாய் இருக்க விரும்புவதும் தாமதத் திருமணங்களுக்கும் தனித்து வாழ்வதற்கும் காரணமாய் இருக்கிறது.

35 வயதுவரை திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் எல்லாம் தாங்கள் சராசரியாக இல்லையோ என்ற பயம் போட்டுத் தாக்குவதாகக் கூறி இருக்கிறார்கள். மேலும் தன் வயதில் இருக்கும் சிலருக்குத் திருமணம் ஆகி அவர்கள் தாத்தா பாட்டி ஆகும் நேரம்தான் தனக்குத் திருமணம் ஆகுவது குறித்த கவலையிலும் எப்போது வாழ்க்கையில் செட்டில் ஆவோமோ என்ற குழப்பத்திலும் மூழ்குகிறார்கள்.

உயர் கல்வி, கை நிறைந்த சம்பாத்தியம் ஆகியவற்றில் தன்னிறைவு பெற்று திருமண வாழ்வு மட்டும் கிட்டாதவர்களில் சிலர் மட்டுமே சமூக அழுத்தங்களுக்குள் உட்படாமல், வயதையோ இன்னபிறவற்றையோ சுட்டாமல்,  இன்னும் தனக்கு எல்லாவிதத்திலும் ஏற்ற துணை கிட்டும்வரை காத்திருக்கப்போவதாக தைரியமாக அறிவித்து இருக்கிறார்கள்.  

லூசி வாங்க் என்ற 32 வயது ஸ்கூல் டீச்சர் இவ்வாறு நடத்தப்படும் பல்வேறு திருமண இணை நிகழ்வுகளில் பங்கேற்ற அனுபவத்தின் காரணமாக இவ்வாறு கூறியுள்ளார். “எல்லா ஆண்களும் ப்ளேபாய் டைப்பில் இருக்கிறார்கள். அல்லது அம்மாக் கோண்டுகளாக இருக்கிறார்கள்.  அதனாலேயே அவர்களைப் பெண்களுக்குப் பிடிப்பதில்லை. “ கேட்கிறதா இந்தக் குரல் ? பெண்களின் மனோபாவங்களைப் புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே.

4 கருத்துகள்:

  1. வியப்பாகவும் இருக்கிறது
    வேதனையாகவும் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. துளசிதரன்: வியப்பாக இருக்கிறது நம்மூரைப் போலவே என்ற விஷயங்களை கேட்க

    கீதா: சீனாவிலும் நம்மூரைப் போலத்தான். அங்கும் பையனின் அம்மா பெண் தேடும் படலம் நம்மூரைப் போலத்ததான்....இது பற்றி ஒரு படமே கூட வந்தது...அங்கும் இன்டெர் கல்சுரல் கல்யாணங்களைப் பற்றிய அம்மாக்களின் புகார்கள் உண்டு....

    பதிலளிநீக்கு
  3. இந்தியாவும் சீனாவும் அநேக விஷயங்களில் ஒத்திருப்பதைக்காணலாம்

    பதிலளிநீக்கு
  4. ஆம் ஜெயக்குமார் சகோ

    ஆம் துளசி சகோ . அப்படியா கீத்ஸ். படம் பேர் என்னப்பா

    ஆம் பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...