எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 நவம்பர், 2018

இபுன் பதூதா மால். IBN BATTUTA MALL.

இபுன் பதூதா மால். IBN BATTUTA MALL.











































இபுன் பதூதா மால். IBN BATTUTA MALL.


 துபாய் ஷார்ஜா சென்றிருந்தபோது பல்வேறு மால்களுக்குப் படையெடுத்துப் பொருட்களாக வாங்கிக் குவித்தோம்ஆனால் இந்த இபுன் பதூதா மால் & புர்ஜ் அல் அராப் ஆகிய மால்களில் விண்டோ ஷாப்பிங் மட்டுமே. உள்ளே சென்று சுற்றிப் பார்த்து வந்தோம். வெளிநாட்டுக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய விலையில் இருந்தன பொருட்கள். கூட்டமும் கிடையாது. ஆனால் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதைக் கட்டாயம் காணவேண்டும். பரப்பளவு அதிகம் என்பதாலும் கடைகள் தள்ளித்தள்ளி அமைக்கப்பட்டிருப்பதாலும் பேட்டரி வண்டிகள் உலாவருகின்றன. அவற்றில் ஏறியும் சுற்றி வரலாம்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் உலகம் முழுதும் சுற்றி வந்த மொரோக்கோ பயணியான இபுன் பதூதா என்பவர் பெயரில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த மால். அதைக் கோடு காட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் இங்கே அழகு.

கிட்டத்தட்ட மூன்று லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாலில் 400 கடைகள், 50உணவகங்கள், 21 சினிமா தியேட்டர்கள் உள்ளன.

இபுன் பதூதா ஓர் உலகம் சுற்றிய பயணி. மாலில் அங்கங்கே இவரது சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதைப் பற்றிப் பல்வேறு விவரங்களும் கூறினார்கள். சென்று வந்து நாளானதால் மறந்துவிட்டது.

மாலின் முழுமையான தோற்றம் மினியேச்சராக. கிட்டத்தட்ட ஆறு கோர்ட்டுகள் ( பகுதிகள் ) கொண்டது இந்த மால்.

அந்தாலூசியா கோர்ட், சைனா கோர்ட், ஈஜிப்ட் கோர்ட், இந்தியா கோர்ட், பெர்ஷியா கோர்ட், துனீஷியா கோர்ட்.

இது துனீஷியா கோர்ட்.இது பெயிண்டிங் என்று தெரியாதபடி அற்புதமாய் தத்ரூபமாய் இருந்தது . !

இந்தியன் கோர்ட். அம்பாரியில் இருக்கும் யானைக் கடிகாரம் இங்கே ஸ்பெஷல்

பெர்ஷியன் கட்டிடக்கலையில் அமைக்கப்பட்ட இடம். சைனா கோர்ட். துனீஷியா கோர்ட். அந்தாலூசியா கோர்ட்டில் இருக்கும் ஃபவுண்டன்.ஈஜிப்ட் கோர்ட். சைனா கோர்ட்.

தேன் கூடுகளைப் போன்ற இபுன் பதூதா மாலின் வெளிப்புறத் தோற்றம். இது ஒரு டெக்ஸ்டர்ட் ஷார்ட்டாக அமைந்திருக்கலாம். தவறவிட்டுவிட்டேன் என நினைக்கிறேன்.

மிக அழகான இந்த மாலை உங்க மாலை நேர மால் விசிட்டின்போது மறந்துடாதீங்க. :) 

3 கருத்துகள்:

  1. மால் பற்றிய தகவலும் படங்களும் ரசிக்கும் படியாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கில்லர்ஜி சகோ

    நன்றி முத்துசாமி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...