எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 24 நவம்பர், 2018

சாட்டர்டே போஸ்ட். திரு. வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசன் கூறும் ஹ்யூமன் லைஃப் வால்யூ.

திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் பன்முகத் திறமை கொண்டவர். இன்வெஸ்ட்மெண்ட்ஸ், இன்சூரன்ஸ், சிறுதொழில் முனைவோருக்கான வழிகாட்டும் பணியைச் செய்து வருகிறார். அடிக்கடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரது கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

 காந்தி ஸ்டடி செண்டரில் நடந்த ஒரு புத்தக விமர்சனம் பற்றி  என் உறவினரும் புத்தகப் பிரியருமான சென்னை பங்குச்சந்தையின் இயக்குநர் திரு நாகப்பன் அழைப்பை குறுந்தகவலில் பகிர்ந்திருந்தார்கள்.  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் அதை ஆர்கனைஸ் செய்துவந்த குழுமத்தில் இடம்பெற்றிருந்த திரு ஸ்ரீனிவாசன் சாரைத் தொடர்பு கொண்டு சேவாலயா பற்றியும், இனி இது சேரி இல்லை என்ற நூல் பற்றியும் அறிந்து அவற்றை எழுதும் வாய்ப்புக் கிட்டியது.


இக்கட்டுரை இளமை விகடனில் வெளியாக லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன் இவர் மூலம் தொடர்பு கொண்டு என்னை பத்ரிக்கைக்கு எழுத அழைத்தார். எனவே நான் பத்ரிக்கைகளுக்கு முகம் காட்ட உதவியவர் திரு ஸ்ரீனிவாசன் சார் என்றால் மிகையில்லை. 

மேலும் இன்சூரன்ஸ் பற்றி பலரிடம் கேட்டும் எனக்கு விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் திரு ஸ்ரீனிவாசன் சாரிடம் சாட்டர்டே போஸ்டுக்குக் கேட்ட போது இன்சூரன்ஸின் முக்கியமான ஒரு பகுதி பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். வீட்டில் அநேக இன்சூரன்ஸ் எடுத்திருந்தாலும் ( சிலது ரிடர்ன் , சிலது நான் ரிடர்ன் - அதுக்கு நம்ம வாழ்க்கைதான் பிணை. உயிர் உள்ளவரை கிடைக்காது. சில நமக்கு ரிடையர்மெண்ட் லைஃபில் கிடைக்கக்கூடும் ) இந்த ஹ்யூமன் லைஃப் வால்யூ இன்சூரன்ஸ் எனக்குப் புதிதாக இருந்தது. எனவே அவர் அனுப்பியதை அப்படியே பகிர்கிறேன். 

//////ஜனவரி ஒண்ணு முதல் ஃபோன் யாருக்கு ?

ஒருவருக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் இருக்க வேண்டும் ?\

முதலாவதாக ஹியூமன் லைஃப் வேல்யூ என்பதைப் புரிந்து கொள்வோம். குடும்பத் தலைவர் ஒருவர் திடீரென இறந்து விடுக்கிறார், யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் இல்லாமல் போனாலும் அந்தக் குடும்பத்தின் எதிர்காலச் செலவுகள் அனைத்தையும் அவர்கள் பெறுகின்ற வழியில் காப்பீடு எடுப்பதுதான் ஹியூமன் லைஃப் வேல்யூ கணக்கீடாகும்.

உதாரணமாக, அந்தக் குடும்பத்தின் மாதாந்திரச் செலவுகள், வருடாந்திரச் செலவுகள், குழந்தைகளின் படிப்பு, மேற்படிப்பு மற்றும் திருமணம் போன்றவற்றிற்கான செலவுகள் , தற்போதுள்ள மொத்த கடன் போன்றவற்றின் கூட்டுத் தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது.

நேரடியாக எல்லாத் தொகையையும் கூட்டி அந்த தொகைக்கு எடுக்கலாம். இதற்கு ஒரு சூத்திரம் உள்ளது. ஹியூமன் லைஃப் வேல்யூ என்று தேடினால் வலைத்தளத்தில் கிடைக்கும். அதில் தற்போதைய வயது. கையிருப்பு, ஃபிக்ஸட் டெபாசிட், மாதச் செலவு, வருடச் செலவு என்று எல்லா விவரங்களையும் பதிந்தால் போதும். அதுவே உங்கள் ஹியூமன் லைஃப் வேல்யூ என்ன என்பதைச் சொல்லிவிடும்.


https://www.policybazaar.com/financial-tools-calculators/human-life-value-calculator/ இது ஒரு லிங்க். ஐந்தே நிமிடத்தில் உங்களுக்கு எவ்வளவு காப்பீடு தேவை என்பதைச் சொல்லிவிடும்.

எளிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போமா ? ஒருவருக்கு மாதச் சம்பளம் ரூ 25000/- அதில் ரூ 5000 சேமிக்கிறார். மீதமுள்ள தொகையைச் செலவழிக்கிறார். மாதாந்திரச் செலவை வருடச் செலவாகக் கணக்கிட்டால் ரூ 240000. பள்ளிக் கூடம், பண்டிகைகள் சேர்த்தால் ரூ 400000 வருகிறது. எல்லாம் ஒரு ரஃப் கால்குலேஷன்தான்

அவர் மறைந்து விட்டால் அந்தக் குடும்பத்திற்கு வருடம் 4 லட்சம் தேவைப்படும் அல்லவா ? அது அவர்களுக்கு எளிதாகக் கிடைக்க வேண்டும். வங்கிகள் 10 % வட்டி தருகின்றன என்று வைத்துக் கொள்வோம்.

40 லட்சம் எஃப்டீ இருந்தால் 4 லட்சம் கிடைக்கும். ஆக ஒருவர் 40 லட்சத்திற்குப் பாலிஸி எடுக்க வேண்டும். அசம்பாவிதமாக மரணம் ஏற்பட்டால் அந்தத் தொகை கிடைக்கும். அதை வைப்பு நிதியில் போட்டு விட்டால் மாதச் செலவிற்குப் பணம் கிடைக்கும். யாரிடமும் கையேந்த வேண்டாம் பாருங்கள்.

இந்தக் கணக்கு தோராயமாகச் சொல்லப்பட்டது. ஒரு புரிதலுக்காக. இதனோடு இன்னும் சிலவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு வீட்டு வசதிக் கடன் 2 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

மரணத்திற்குப் பிறகு இந்தக் கடனின் தவணையை மாதா மாதாம் செலுத்துவதற்குப் பதிலாக ஒரே தடவையில் செலுத்தலாம். இந்தக் கடனையும் சேர்த்துக் கொண்டால் 42 லட்சத்திற்கு அவர் பாலிஸி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி என்னென்ன கடன்கள் இருக்கிறதோ அதைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்கு எடுக்கும் பாலிஸியை டேர்ம் இன்ஷூரன்ஸ்ஸாகத்தான் எடுக்க இயலும். அதன் பிரீமியம்தான் நம் சக்திக்கு உட்பட்டதாக இருக்கும்.

ஒரு குடும்பத் தலைவர் குறைந்த பட்சம் செய்ய வேண்டியது இதுதான். ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியும் தனக்கு இருக்கும் எல்லாக் கடனையும் கூட்டிப் பார்க்க வேண்டும். வீட்டு வசதிக் கடன், டூவீலர் டியூ, என ஒன்றையும் விடக் கூடாது. ஆங், கிரெடிட் கார்ட் தொகை. இது ரொம்பவும் முக்கியம்.

ஸ்கூலில் படித்த காலத்திலிருந்து நமக்குப் ஃபிரண்டாக இருக்கும் தோஸ்த்திடம் கைமாற்றாக வாங்கியுள்ள ரூ 1000 ஐயும் கூட இதில் சேர்க்க வேண்டும். நம்ம காலத்துக்குப் பிறகு அதை மற்றவர்களிடம் அவர் குறிப்பிட்டுக் கொண்டே இருப்பார். நாம் அதைத் தவிர்க்கலாமே !

இப்படி நீங்கள் கணக்கிட்டது ரூ 12 லட்சம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தொகைக்காவது உங்களுக்கு இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்று பாருங்கள். அது 10 லட்சம் இருந்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா ? ஒரே ஒரு ஃபோன். வசதிக்காக நானே உங்கள் டயலாக்-கையும் கொடுத்து விடுகிறேன்.

“ஹலோ, இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் லட்சுமணன் ஸாரா ? ஹேப்பி நீயூ இயர். ஒரு குட் நியூஸ் ஸார். எனக்கு ஒரு ரெண்டு லட்சத்துக்குப் பாலிஸி எடுக்கணும். ஒடனே வாங்க.”


டிஸ்கி :- ஸ்ரீனி சார் அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள். திரு லெக்ஷ்மணன் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் இல்லை சார் அவரு அவர் பேங்க் ஆடிட்டர். ஆடிட்டிங் இன்ஸ்பெக்‌ஷன். ஆடிட்டிங் ஹெட் :)

இதில் டேர்ம் இன்சூர்ன்ஸ் என்றால் வருடத்துக்கு நான்கு முறை கட்டும்படி இருக்கும் என நினைக்கிறேன். அதன் தொகையையும் தோராயமாகக் குறிப்பிட வேண்டுகிறேன்.

இன்சூரன்ஸ் என்றாலே பலர் பயப்படும் நிலையில் உண்மையை உடைத்துச் சொல்லி குடும்பத்தின் பாதுகாப்புக்கு வழி கோலியுள்ளது இக்கட்டுரை. மிகப் பயனுள்ள இக்கட்டுரை வழங்கியமைக்காக அன்பும் நன்றியும் சார். தொடர்ந்து உங்கள் கட்டுரைகள் என் வலைத்தளத்துக்கு பெருமை சேர்க்கும். எல்லாருக்கும் பயனுள்ள இன்சூரன்ஸ், இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பற்றியும் பகிர வேண்டுகிறேன்.

6 கருத்துகள்:

  1. என் இருபதாவ்து வயதில் யாரோ ஜோசியம் சொன்னார் எனாயுசு இன்னும் ஓரிருவருடங்கள்தான் என்றார் அப்பொடுஎன்னை நம்பி ஐந்து பேர் இருந்தனர் நன் பயந்து ஒரு பலிசி இன்சூரன்ஸ் ரூ 10000/ க்கு எடுத்தேன் மாத ப்ரிமியம் ரூ 25 அப்போது அது எனக்கு ஒரு பெரியதொகை பல்லைக்கடித்து 16 மாதங்கள் கட்டினேன் அதுலாப்ஸ் ஆயிற்று மட்டுமல்ல கட்டியபணமும் போயே போச் இன்சூரன்ஸ் எடுக்கக் கோருபவர்கள் நம்பயத்தில் காசு பார்க்கிறார்கள் என்றே தோன்று கிறது

    பதிலளிநீக்கு
  2. இன்சூரன்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. எல்.ஐ.ஸி என்ன பாலிசி வைத்திருக்கிறார்களோ அவற்றுள் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. டேர்ம் பாலிசி பற்றி முகவர்கள் பிடி கொடுப்பதில்லை. மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றி எவ்வளவு முயன்றாலும் தெளிவு பெற முடியவில்லை. இது பற்றிய விழிப்புணர்வே இப்போது வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அப்படியா பாலா சார் ! அதை ரீகெயின் எப்படி செய்வது என்று கேட்டு சொல்றேன் சார்.

    நன்றி வெங்கட் சகோ

    உண்மைதான் முத்துசாமி சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...