ஞாயிறு, 20 ஜூன், 2010

உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா... நீங்கள் நலம்

இன்னும் சில வருடங்களில்
திருமணமாகும் பேரனுக்கு..
ஆனாலும் அப்பா தாத்தாவல்ல..
சம வயதுத் தோழர்..

எண்ணெய் தடவிக் குளியாட்டுதலும்
கல்லூரி கவுன்சிலிங்குக்கு
ஊர் ஊராய் அலைவதும்..
பிடித்தமோ இல்லையோ
பேரனோடு ஆங்கிலப்படம்
பார்த்து ரசிப்பதும்..

பிறந்த சமயம் பேரன்கால்
நெஞ்சில் பட படுத்திருப்பார்..
உவகையுடன்.. அவன் எது
செய்தாலும் ஓவியமாய் எண்ணி..

நானும் இவ்வாறு சிலசமயம்
அறியாமல் வருத்தி இருக்கக் கூடும்..
உள்ளுக்குள் அடக்கிய கோபத்துடன்..

எல்லா நல்லதும்
கிடைத்தால் உன் அதிர்ஷ்டம்..
கிடைக்காவிட்டால் என் துரதிர்ஷ்டம் என
தன் பக்கம் திருப்பிக் கொள்வார்..


முன்பெல்லாம் மடிக்கும்போது
அவர் சட்டை பிரம்மாண்டமானதாய்
இருக்கும்.. அவர் மனம் போல்..

மருத்துவப் பரிசோதனைக்குப்
பிறகான மாதங்களில்
இது இருக்கே., இது வருமோ என
அவர் முகம் போலச் சுருங்கி
விட்டது சட்டையும்..

உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா..என
சுருக்கங்களை நீவிப் பார்க்கிறேன்..
நீவ முடியாக் குழப்பக் கண்களோடு
அம்மாவும் அப்பாவும்..

வெந்ததைத் தின்று விதி
வந்தால் சாவோம் என
அம்மாவும் புலம்ப
நொந்து போகிறது மனசு..

பரிசோதனைகளும்.,
மருத்துவர்களும் பார்த்துக் கலங்கி.,
மருந்தும் குறிப்புகளும் கொண்டு
மாநகரத்தை விட்டு..

சொந்த ஊர் சென்ற காலை
அப்பா ஃபோனில் உற்சாகமாய்ப் பேசினார்
விடுதலையான சுவாசத்தோடு.. நிம்மதியாய்..

உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா..
நீங்கள் என்றென்றும் நலம்..
நூறாண்டு வாழ்வீர்கள்..

டிஸ்கி:- தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா..
டிஸ்கி : - நேற்று என் வலைத்தளத்தில் வெளியிடப்
பட்ட இந்தக் கவிதை இன்றைய இளமை விகடனில்
21. 6. 2010 வெளிவந்து இருக்கு

46 கருத்துகள் :

asiya omar சொன்னது…

அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் சொன்னது…

இன்னும் சில வருடங்களில்
திருமணமாகும் பேரனுக்கு..
ஆனாலும் அப்பா தாத்தாவல்ல..
சம வயதுத் தோழர்..

வாழ்க்கை இனிப்பதற்கான காரணமும் இதுவே. உங்கள் கவிதைக்கான காரணமும் இதுவே.

அஹமது இர்ஷாத் சொன்னது…

Happy Fathers Day... Nice Lines

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தந்தையர் தின வாழ்த்துக்கள் ...

LK சொன்னது…

உங்கள் தந்தைக்கும் எனது வாழ்த்துக்கள்

அம்பிகா சொன்னது…

\\சொந்த ஊர் சென்ற காலை
அப்பா ஃபோனில் உற்சாகமாய்ப் பேசினார்
விடுதலையான சுவாசத்தோடு.. நிம்மதியாய்..\\
அருமையான தந்தையர் தின கவிதை தோழி.

ஜெய்லானி சொன்னது…

தந்தையர் தின வாழ்த்துக்கள்

தமிழினிமை... சொன்னது…

அப்பாக்கள் பொதுவானவர்கள் என்பது மீண்டும் இன்று நிரூபணமானது..
அப்பா என்பது ஒரு உணர்வு..உடலல்ல என்பதும் கூட..

எனக்கும் அப்பாவைத் தேடியது..
துவைத்து வைத்த சட்டைகளை மடித்து வைக்க .., நீவி விட அல்ல..
என் சட்டைகளை நீவிவிட்டு அயர்ன் செய்து வைக்க..( இன்றுவரை அப்பாவே எம் துணியை அயர்ன் செய்கிறார்)

அம்மாவை இழந்த பின் அப்பாவே எல்லாமாக ஆகிப் போனார்..
இன்றளவும் நான் அதிகம் கத்திப் பேசியது.., கோவப் பட்டது அப்பாவிடம் மட்டுமே..
எப்பவும் ஏதோ ஒரு சண்டைதான்..
நான் போடாத சண்டைகள் அனைத்தும் அப்பாவிடம் மட்டுமே போட்டிருக்கிறேன்..
இது என் இயலாமை அல்ல..
அப்பாவும் நானும் பிரிக்க முடியாத இரு உணர்வுகள் என்ற அர்த்தத்தில்..
அப்பாவுடனான சண்டை என்பது என்னுடனான எனது சண்டை போலவே தோணுகிறது பல நேரங்களில்..

குழந்தைகளை எப்பவுமே எனது உனது என பிரித்துப் பார்க்க இயலாதிருந்து எனக்கு..
கிப்ரான் கூறியது போல்..
”””அவர்கள் நம் மூலமாக வந்தவர்களே அன்றி நம்மிலிருந்து அல்ல”””
ஆனால் இப்பவெல்லாம் அம்மா அப்பாவையும் இப்படியே நினைக்கத் தோணுகிறது..இவர்கள் எனக்கு உடல்களாய்த் தெரிவதில்லை..உணர்வுகளாய் மட்டுமே தெரிகிறார்கள்..
அதனால்தான் தாய்மை எனப் பொதுபடுத்தி சொல்ல இயலுகிறது..
They are not BIOLOGICAL CONSTITUTIONS..., rather feelings of the heart and mind combined together..

அப்பாவை கேட்டதாகச் சொல்லுங்க..
எங்க அன்பையும் சொல்லுங்க..
எல்லாம் சரியாகிவிடும்னு சொல்லுங்க..
ஒரு சுடு சொல் கூட சொல்லிடாதீங்க..
ஆனாலும் அவங்ககிட்ட மட்டும் உண்மையே பேசுங்க( இது ஒரு contradiction தான்..ஆனா என்ன செய்ய..??)

கடுமையான பாறாங்கலைப் போன்ற மனிதனையும் நெகிழ வைக்கும் பதிவு இது..

அம்மாக்கள் ....,தங்கள் மேல் காவியம் படைக்கப் படுவதற்காகவே பிறந்தவர்கள் ..
ஆனா அப்பாக்கள்.., பல் நேரங்களில்
நம்மால் சரியான கண்ணோட்டத்தோடு பார்க்கப் படாதவர்கள்..
உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் வாழ்த்து..

**********************************
மீண்டும் சொல்கிறேன்..
அப்பாக்களின் தன்மைகள் பொதுவானது..
வாழ்க..அதிக advertisementகளில் தலை காட்டாத அவர்கள்..
-அம்மு..

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

வயதானவர்களின் வேர்கள் அவர்கள் பிறந்த மண்ணில் தான்! அந்த சூழலே அவர்களை ஆரோக்யமாய் ஆக்கி விட்டு விடும்!

தந்தையர் தின வாழ்த்துக்கள்!!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

நல்ல கவிதை.

உலகில் உள்ள எல்லா தந்தையருக்கும் பொருந்தும் கவிதை. பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.

பிராய்ட் சொன்னது போல அது என்னவோ பெண் குழந்தைகளுக்கு தந்தை மீது கூடுதல் பாசம், பையன்களுக்கு தாய் மீது அதிகம் பாசம் உள்ளது போல.

ஹுஸைனம்மா சொன்னது…

அக்கா, ஒண்ணும் எழுதமுடியலைக்கா. என்னவோ மாதிரி இருக்கு, அப்பாவை நினைச்சு.

பா.ராஜாராம் சொன்னது…

கண்ணில் நீர் துளிர்த்தது தேனு மக்கா...

அப்பாக்களுக்கு வாழ்த்துகள்!

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) சொன்னது…

Sontha oor pol varumaa?? Appa patriya kavithai arumai. Nijam

ஹேமா சொன்னது…

நலமாய் வாழணும் நம்மைப் பெத்தவங்க.
அப்பாவுக்கு வாழ்த்துகள் தேனக்கா.

Mey சொன்னது…

Excellent one , my loving sister. My eyes got wet. Each of my children gave me a drawing (of mine and themselves) and a hand written wish. I was touched also by the little ones. May All Glories be to God.

- Mey

sakthi சொன்னது…

Arumai thenu iniya thanthaiyar thina nal valthukkal

ஜோதிஜி சொன்னது…

உண்மையான உணர்வுகள் உள்ளேயிருந்து உந்தி தள்ளும் போது எத்தனை இதமான கனமான வார்த்தைகள் வந்து விழுகின்றது பார்த்தீர்களா? கற்பனை வார்த்தைகளுக்கும் உணர்வுகள் கரைத்த வார்த்தைகளுக்கும் இது தான் முக்கிய வித்யாசம்.

Mrs.Menagasathia சொன்னது…

கவிதை அருமை அக்கா.தந்தையர் தின வாழ்த்துக்கள்!! கவிதையை படிக்கும் போது மனம் 16 வருடங்கள் பின்னோக்கி செல்கிறது.....

கமலேஷ் சொன்னது…

அப்பா ..அம்மாவைப்போலவே ஒரு மந்திர சொல்தான் போல. இந்த மதிப்பு மிக்க நாளை உங்களின் கவிதை மேலும் மெருகூட்டுகிறது...வாழ்த்துக்கள்...தோழி...

Vishnu... சொன்னது…

அருமையான கவிதை சகோ ..
மிகவும் என்னை பாதித்தது ..
எனது தந்தையின் கரம் பிடித்து நடந்த நாட்களையும்
அவர் தினமும் எனக்காக சொல்லி இருந்த பல கதைகளையும்
மீண்டும் மனத்திரையில் தவழ செய்தது உங்கள் கவிதை ..

அன்புடன்
விஷ்ணு

arrawinth சொன்னது…

அப்பப்பா.....என்னப்பா இது.....
கொடுத்து வைத்த அப்பா...
இப்படிப்பட்ட மகள் கிடைத்ததற்கு...

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான கவிதை தேனக்கா.. தந்தையர்தின வாழ்த்துக்கள்.

கண்மணி/kanmani சொன்னது…

தேனு எனக்காகவும் சேர்த்து எழுதியதைப் போல இருக்கு..
அப்பாக்களின் அருமை கொஞ்சம் தாமதித்தே புரிகிறது.
அருமை.அப்பா பல நூறு ஆண்டு வாழட்டும்

ரிஷபன்Meena சொன்னது…

கவிதைகளில் எனக்கு அத்தனை ஈடுபாடு இல்லாவிட்டாலும் கூட இந்தக் கவிதை பிடித்திருந்தது.

சி. கருணாகரசு சொன்னது…

வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் சொன்னது…

அழகு. வாழ்த்துக்கள்

சசிகுமார் சொன்னது…

தந்தையர் தின வாழ்த்துக்கள் அக்கா . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் சொன்னது…

ஏற்றதொரு கவிதை

தந்தைக்கு வணக்கங்கள்

அக்பர் சொன்னது…

எனது வாழ்த்துகளும் அக்கா.

thenammailakshmanan சொன்னது…

இது ஜி மெயில் மூலம் என் சகோதரன் மெய்யப்பனின் நண்பர்கள் அனுப்பியது

Dear Mey

Many thanks indeed for senidng me such a thought provoking piece of poetry written about your father. The poem brought fond memories about my own father. May God Bless your sister abundantly.

Kind regards
Xavier

thenammailakshmanan சொன்னது…

Mey ji,

Superb and touching...I am still going through her entire blog. All of Sudden I was reminded of mother...God bless her with many more 'years & thought provoking ideas' of writing unmatched adorable poetry. The sweetness in her name prevails verymuch in her thoughts too...further sweetening the language.

People may come and go...and very few come and never go since they are preoccupied in making history.

'Makkass'in kurumbu punnanagaiyai varavaitthathu...

Kalakkungal....kayil karandi irrunthum...mattravargalin sinthayai...

Guna

thenammailakshmanan சொன்னது…

As Appa, used to say, you have been a Kudathilitta Vilakku. Now you have become Kundrilitta Vilakku Thenu.

Love
Meyyar

thenammailakshmanan சொன்னது…

amzing poem, give my special regards to her, i would like to meet her one day.


ennum ethanai peru unge kudumbathile eppadi arivaligal?


suresh

thenammailakshmanan சொன்னது…

amzing poem, give my special regards to her, i would like to meet her one day.


ennum ethanai peru unge kudumbathile eppadi arivaligal?


suresh

thenammailakshmanan சொன்னது…

Dear Mey,
I read your sister's blog. It was excellent. She is doing great. As you said I remembered my father.
Regrds
Ravi

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அருமை தேனம்மை.

நியோ சொன்னது…

ஒரு கட்டத்தில் குழந்தைகள்
தங்கள் அப்பாவின் அப்பாவாகி விடுகிறார்கள்
அப்பாக்கள் தங்கள் குழந்தைகளின் குழந்தைகளாக ...

" உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா.. "
கேட்பது ஒரு தந்தையின் குரல் ....
" சுருங்கி விட்ட சட்டை... "
ஆறுதல் தேடும் குழந்தையின் முகம் ...

போனில் பேசும் உற்சாகம் என்றென்றும் உங்கள் இருவரிடமும் நிலைத்து நிற்கும் தேனக்கா !

----------
தந்தையர் தினம் கொண்டாடினேன்!
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html

புலவன் புலிகேசி சொன்னது…

அருமைங்க..வாழ்த்துக்கள்

செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா

பாச தந்தைக்கு வணக்கங்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஆசியா., ரமேஷ்., அஹமத்.,செந்தில்., LK., ஜெய்லானி., அம்பிகா., அம்மு., ராமமூர்த்தி.,ராம்ஜி., ஹுசைனம்மா., பாரா.,மைதிலி., ஹேமா.,மெய்., சக்தி., ஜோதிஜி.,மேனகா., கமலேஷ்., விஷ்ணு., அரவிந்த்.,ஸ்டார்ஜன்., கண்மண்., ரிஷபன்., கருணாகரசு.,
புதுகைத்தென்றல்., சசி., கதிர்,அக்பர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சேவியர்., குணா., மெய்.,சுரேஷ்.,ரவி

thenammailakshmanan சொன்னது…

நன்றி முத்துலெக்ஷ்மி.,நியோ., புலிகேசி.,செந்தில் குமார்

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கோமதி அரசு சொன்னது…

உங்கள் அப்பா நூறு ஆண்டு வாழ்ந்து வாழ்க்கை பாடத்தை நமக்கு கற்று தரட்டும்.

/சட்டை பிரம்மாண்டமானதாய் இருக்கும் அவர் மனம் போல்/

மிகவும் ரசித்தேன்.

தந்தையர் தின வாழ்த்துக்கள்.

Karthick Chidambaram சொன்னது…

Nice one :-)

thenammailakshmanan சொன்னது…

நன்றி கோமதி அரசு., கார்த்திக்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...