வெள்ளி, 18 ஜூன், 2010

காய்ச்சல்

உனக்குக் காய்ச்சல்..
கொதித்துக் கிடக்கிறது மனசு..
பாபர் ஹுமாயூனின்
நோவை வாங்கியதாய்...
உன்னிடமிருந்து இடம்பெயர்ந்து
எனக்கு வரட்டும்..

அணைத்து ஆரத்தழுவி.,
சூடெல்லாம் உருவிப்போட
நினைக்கிறேன்..
சூ மந்திரக் காளியென..


நீ பிதற்றும் போதெல்லாம்
பதைக்கிறது மனசு..
சூப்பும் பார்லிக் கஞ்சியும்
ரொட்டியும் ஹார்லிக்ஸும்
ஆறிக் காய்ந்து போய்..

உணர்வற்று ஒரு நேரம் கூட
கண் சொருக முடியாமல்..
உற்று உன்னைப் பார்த்துக் கொண்டே...
பக்கம் அமர்ந்து நெற்றி
தடவிக் கொண்டே....

கண்விழித்து மருந்து உண்ணவாவது
ஒரு வாய் சாப்பிடு..
கசந்து கிடக்கிறது உனக்கு நாவு..
எனக்கு எல்லாம்..

உன் நோவிலெல்லாம்
உன்னைப் பார்த்துப் பார்த்தே
சுமந்துகொண்டே கவலையால்
குலைந்து இருக்கிறேன் நானும்..

இரவும் நிலவும் குளிர்ந்து
இறக்கையைக் கிழிக்க..
வழியும் உஷ்ணத்தை
விரல்வழி வடித்து நான்..
வடிக்க முடியா பாரத்தோடு..

விடியலில் சூரியன் விரியப் பூத்த
ஒரு உயிர்ப்பான நாளில்
இயல்பான கதகதப்புடன்
பல்துலக்கி காபி அருந்துகிறாய்,,
பார்த்துப் பரவசத்தில் நான்..

31 கருத்துகள் :

Sivaji Sankar சொன்னது…

சூ மந்திரக் காளி ;)

செந்தில்குமார் சொன்னது…

அக்கா காச்சலா மறுபடியிமா அய்யே !!! யாருக்கு......

உணர்வற்று ஒரு நேரம் கூட
கண் சொருக முடியாமல்..
உற்று உன்னைப் பார்த்துக் கொண்டே...
பக்கம் அமர்ந்து நெற்றி
தடவிக் கொண்டே....

முடியாமல் தாங்கிய வலி..

rk guru சொன்னது…

அருமையான kavithai பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html

dheva சொன்னது…

அது ஏனோ தெரியவில்லை...என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாம கொதிச்சப்ப ராத்திரு பூரா அணைச்சுகிடு சூட்ட என் மேல வாங்கிகிட்டப்ப தோணிய ஒரு உணர்வு...கொடுக்குது உங்கள்...கவிதை...! வாழ்த்துக்கள் தோழி!

dheva சொன்னது…

அது ஏனோ தெரியவில்லை...என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாம கொதிச்சப்ப ராத்திரு பூரா அணைச்சுகிடு சூட்ட என் மேல வாங்கிகிட்டப்ப தோணிய ஒரு உணர்வு...கொடுக்குது உங்கள்...கவிதை...! வாழ்த்துக்கள் தோழி!

ஆறுமுகம் முருகேசன் சொன்னது…

பாபர் ஹுமாயூனின்
நோவை வாங்கியதாய்...//அப்படினா ??

இரவும் நிலவும் குளிர்ந்து
இறக்கையைக் கிழிக்க..
வழியும் உஷ்ணத்தை
விரல்வழி வடித்து நான்..//

ம், நல்லாயிருக்கு.

நட்புடன் ஜமால் சொன்னது…

அம்முவுக்காகவா !!!

சீக்கிரம் சரியாக பிரார்த்தனைகள் ...

ராம்ஜி_யாஹூ சொன்னது…

Poem nice but sad to hear that someone has fever.

கோமதி அரசு சொன்னது…

கவிதை அருமை தேனம்மை.

கவிதையில் தாயின் மனம் தவிப்பது புரிகிறது.

நோய் நொடி இல்லாமல் குழந்தைள் வாழ வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!

LK சொன்னது…

yaaruku udambu sari illa

seekiram gunam aaga vaalthukkal

Mrs.Menagasathia சொன்னது…

நல்லாயிருக்குக்கா..யாருக்கு காய்ச்சல்?? சீக்கிரம் குணமாக என் பிரார்த்தனைகள்...

ரிஷபன் சொன்னது…

இரவும் நிலவும் குளிர்ந்து
இறக்கையைக் கிழிக்க..
வழியும் உஷ்ணத்தை
விரல்வழி வடித்து நான்..
வடிக்க முடியா பாரத்தோடு...
சூப்பர்! ஓ.. நான் சொன்னது வரிகளின் இசையை.. அந்த வலியை மீறி புலப்பட்ட கவிதை..

ரிஷபன் சொன்னது…

இரவும் நிலவும் குளிர்ந்து
இறக்கையைக் கிழிக்க..
வழியும் உஷ்ணத்தை
விரல்வழி வடித்து நான்..
வடிக்க முடியா பாரத்தோடு...
சூப்பர்! ஓ.. நான் சொன்னது வரிகளின் இசையை.. அந்த வலியை மீறி புலப்பட்ட கவிதை..

சசிகுமார் சொன்னது…

அக்கா யாருக்கு காய்ச்சல், பாப்பாவுக்கா ? பாப்பாவுக்கு சீக்கிரம் குணமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அக்கா

சசிகுமார் சொன்னது…

அக்கா யாருக்கு காய்ச்சல், பாப்பாவுக்கா ? பாப்பாவுக்கு சீக்கிரம் குணமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அக்கா

Chitra சொன்னது…

இரவும் நிலவும் குளிர்ந்து
இறக்கையைக் கிழிக்க..
வழியும் உஷ்ணத்தை
விரல்வழி வடித்து நான்..
வடிக்க முடியா பாரத்தோடு...

..... காய்ச்சல் வந்தா கூட - அக்காவின் கவிதையில் சுகம் ஆகி விடும்... இதமான வரிகள்.

அக்பர் சொன்னது…

காய்ச்சல் கவிதை, கவிதைக்காய்ச்சலில் நாங்கள்.

குணமடைய பிரார்த்திக்கிறேன் அக்கா.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

வீட்டில் துள்ளிக் குதித்து விளயாடும் குழந்தைக்கு நோவென்றால் எல்லாருக்கும் கஷ்டம் தான்!

ரோகிணிசிவா சொன்னது…

ponga ippdi ellam kavithai eluthu engaluku kaichal vara veikaaatheenga

கண்ணகி சொன்னது…

அருமையாய் வந்திருக்கிறது, தாயின் பரிதவிப்பு....

ஹேமா சொன்னது…

காய்ச்சல் உங்களுக்கு வந்தமாதிரி ஒரு உடல்வலி.பாசமாய் ஒரு கவிதை.காய்ச்சல் வந்தாலும் உங்கள் கவனிப்பே காய்ச்சலைப் போக்கியிருக்கும்.

seemangani சொன்னது…

தேனக்கா மீண்டும் பிள்ளையாய் போக மணசு கேக்குது.....வாய்ப்பே இல்லை...அற்புதமான கவிதை....

ஸ்ரீராம். சொன்னது…

குழந்தைக்கு சுகமில்லா விட்டால் பெற்றோர் படும் பாட்டை (ப்ளீஸ் தாய் படும் பாடு என்று மட்டும் சொல்லாமல் எங்களையும் சேர்த்துக்கோங்க...!) கவிதை அழகாகச் சொல்கிறது.

ஜெய்லானி சொன்னது…

//அக்பர் சொன்னது…

காய்ச்சல் கவிதை, கவிதைக்காய்ச்சலில் நாங்கள்.

குணமடைய பிரார்த்திக்கிறேன் அக்கா. //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

விஜய் சொன்னது…

அக்கா மாம்ஸ்க்காக எழுதியதா?

வாழ்த்துக்கள்

விஜய்

புலவன் புலிகேசி சொன்னது…

:))

தமிழினிமை... சொன்னது…

அக்காவா..?? அம்மாவா???அன்பினால் அனைத்துமாய் ஆனவளா..?? என்ற கேள்வியைத் தவிர்த்து என்னிடம் ஒண்ணுமில்லை...
-அம்மு

arrawinth சொன்னது…

ஐயொ பாவம் .....
அந்தொ பரிதாபம்....

thenammailakshmanan சொன்னது…

நன்றி சிவாஜி சங்கர்., செந்தில் குமார்.,குரு., தேவா.,(உண்மை தேவா)..

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஆறூமுகம்., ஜமால்(ஆம் ஜமால்)., ராம்ஜி.,கோமதி., LK., மேனகா., ரிஷபன்., சசி.,சித்ரா., அக்பர்., ராமமூர்த்தி.,ரோஹிணி ., கண்ணகி., ஹேமா.,கனி., ஸ்ரீராம்., ஜெய்லானி.,விஜய்., புலிகேசி.. அம்முகுட்டி., எ

என்ன அரவிந்த என்ன ஆச்சு.. பொறாமையா

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...