எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 ஜூன், 2010

புறக்கணிப்பு...............

வைத்துக்கொள் அல்லது
தூக்கிப் போடு..
இன்னும் பலம் சேர்த்து
நீந்தி வருவேன்..

இன்னமும் படிக்கப்பட்டாத
பக்கங்களோடு
புதிதான வாசனையுடன்...

இருப்பை அலட்சியப்படுத்துகிறாய்
என்பதால் நான்
இல்லாமல் போவதில்லை...


யாருமற்ற காடுகளில்
பூக்கள் சொரிவது
நிற்பதுமில்லை...
மழையோ., மிருகங்களோ
நனைந்திருக்கலாம்..

சிதைவுற்றுக் கொண்டிருக்கிறேன்
என்றாலும்
சிதைத்ததில்லை எதையும்..

அததையும் அதிகப்படியான
பிரியத்தில்
அன்புவெள்ளத்தில்
கொல்வது தவிர..

விட்டுவிட்டோ., வெட்டிவிட்டோ
போக இயல்வதில்லை...
இருக்கட்டும் அதுபாடு
அது விரும்பும் வரை....

டிஸ்கி:- இந்தக் கவிதை 4. 6. 10 இளமை விகடனில்
வெளிவந்து உள்ளது

30 கருத்துகள்:

  1. கவிதை அருமை.. விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. சிதைவுற்றுக் கொண்டிருக்கிறேன்
    என்றாலும்
    சிதைத்ததில்லை எதையும்..
    ]]

    சிறப்பு.

    விகடனுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. //இருப்பை அலட்சியப்படுத்துகிறாய்
    என்பதால் நான்
    இல்லாமல் போவதில்லை...
    //

    கம்பீரமான வரிகள்

    அழகான கவிதை

    பதிலளிநீக்கு
  5. அருமைங்க. வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  6. //சிதைவுற்றுக் கொண்டிருக்கிறேன்
    என்றாலும்
    சிதைத்ததில்லை எதையும்..//

    யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  7. கவிதை நன்றாகவுள்ளது..
    இளமை விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சிதைவுற்றுக் கொண்டிருக்கிறேன்
    என்றாலும்
    சிதைத்ததில்லை எதையும்..

    ம்....

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  9. //இருப்பை அலட்சியப்படுத்துகிறாய்
    என்பதால் நான்
    இல்லாமல் போவதில்லை...//சூப்பர்ர் வரிகள்...வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  10. இருப்பை அலட்சியப்படுத்துகிறாய்
    என்பதால் நான்
    இல்லாமல் போவதில்லை...''

    அழகான கவிதை

    பதிலளிநீக்கு
  11. விகடனிலேயே வாசித்தேன். வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  12. சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. தொடர்ந்து அசத்திக்கொண்டிருப்பதற்கு வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  14. விட்டுவிட்டோ., வெட்டிவிட்டோ
    போக இயல்வதில்லை...
    இருக்கட்டும் அதுபாடு
    அது விரும்பும் வரை....
    யதார்த்தம்! அருமை!
    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  15. யாருமற்ற காடுகளில்
    பூக்கள் சொரிவது
    நிற்பதுமில்லை...
    மழையோ., மிருகங்களோ
    நனைந்திருக்கலாம்..

    சிதைவுற்றுக் கொண்டிருக்கிறேன்
    என்றாலும்
    சிதைத்ததில்லை எதையும்..//

    இவ்வரிகள் மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது..

    விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. பாராட்டுக்கள்.உங்கள் படைப்புக்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  17. //யாருமற்ற காடுகளில்
    பூக்கள் சொரிவது
    நிற்பதுமில்லை...//

    அழகான வார்த்தை தொடுத்து வந்த கவிதை மிகஅருமை தேனக்கா விகடனில் வந்ததிற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  18. நன்றி இர்ஷாத்., ஜமால்., வேலு., அஷோக்..(இல்லை அஷோக்.. thanks for caring )., வித்யா., ஜெய்லானி., நேசன்..(!)., குணசீலன்., கண்ணகி., கருணாகரசு.,
    மேனகா.,ரமேஷ்., ராமலெக்ஷ்மி,., சௌந்தர்.,சரவணா., ரிஷபன்., ஆறுமுகம் முருகேசன்., aaiya omar., கனி., முனியப்பன் சார்.,கார்த்திக் சிதம்பரம்.

    பதிலளிநீக்கு
  19. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  21. கிராமத்து திருவிழா கண்முன் வந்துபோனதுக்கா.. குறிப்பாக..
    “கிளிகள்
    நெல்மணிக்காகக்
    காகிதம் பொறுக்கும்..”
    “கிளிகள்
    நெல்மணிக்காகக்
    காகிதம் பொறுக்கும்..”
    “வருங்கால நம்பிக்கை
    நாயகர்கள்..
    அப்பன்களின் தோளிலேறி
    சாமி பார்ப்பார்கள்..”

    போன்ற வரிகள் அற்புதமானவை..

    பதிலளிநீக்கு
  22. நன்றி விஜய்., கோமதி அரசு., வேடியப்பன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...