வியாழன், 24 ஜூன், 2010

செம்மொழி .. எம்மொழி..

செம்மொழியாம் எம்மொழி
அம்மையப்பன் தந்த மொழி
இம்மையிலும் மறுமையிலும்
எம்மோடு வாழும் மொழி..

ஐயன் வள்ளுவன் வாய்மொழி.,
ஐவகை நிலத்தின் சேய் மொழி..
ஐம்பெருங்காப்பியம் ஈந்த மொழி..
தொல்காப்பியத் தொன்மை மொழி..மதுரைத் தமிழ் மண்ணின் தமிழ்
நெல்லைத்தமிழ் நல்ல தமிழ்..
கொங்கு தமிழ் கொஞ்சு தமிழ்
சென்னைத்தமிழ் ..செல்லத்தமிழ்

ஆதிமொழி.. அன்னை மொழி..
யாக்கும் மொழி .,கோர்க்கும் மொழி.,
யவனர்.உரோமர்., அராபியர்.,ஆங்கில
வணிகக் கலப்பில் வனைந்த மொழி..

அகமும் புறமும் கலந்த மொழி..
அன்னியக் கலப்பும் ஏற்ற மொழி
ஆலமாய் வேறூன்றி அகலமாய்க் கிளைத்து
ஆவியோடு சேர்ந்த மொழி..

யாதும் ஊராகி செழித்த மொழி
யாவரும் உறவாகி ஜெயித்த மொழி.,
நன்றும் தீதும் விளக்கிய மொழி.,
எண்ணம் போல் வாழ்வித்த மொழி..

வந்ததெல்லாம் ஏற்ற மொழி
வந்தாரை எல்லாம் வாழ வைத்த மொழி.,
வலைத்தளத்திலும் வாழும் மொழி..
வலைப்பதிவரை வாழ்விக்கும் மொழி

கொங்கில் எம்மொழி விழா சிறக்க...
ஒளி விளக்காய்.. பேரொளியாய்..பெருகி
தீமை ஒழிந்து ஈழத்தமிழரும் அடுத்த ஆண்டில்
மன நிம்மதியோடு மகிழ்வோடு பங்கேற்க,,

உலகத் தமிழர் வாழ்க..உவகைத் தமிழ் வாழ்க..
தாய்த்திரு நாடு வாழ்க.. தகவுற்றது வெல்க..
வலைப் பதிவர் வாழ்க.. வலைத்தமிழ் வாழ்க..
வண்ணமும் எண்ணமுமாய் வளம் பெறுக...

டிஸ்கி..1..:- செம்மொழி மாநாட்டில் தமிழ்த்தந்தை
கலைஞர் அவர்களின் உரையை இங்கு ம் மேலும்
நண்பர் மணிவண்ணனின் நேரடி வர்ணனையைக்
கோவையிலிருந்து இதிலும் காண்க....

டிஸ்கி..2..:- செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும்
அன்பு நண்பர்கள் ஓசை செல்லா., ஈரோடு கதிர்
மற்றும் திலகபாமாவுக்கு வலைப்பதிவர்
குடும்பத்தின் சார்பாக மகிழ்வான வாழ்த்துக்கள்..

28 கருத்துகள் :

அபி அப்பா சொன்னது…

ஆகா அருமை அருமை அருமையோ அருமை!

நல்ல பணி.வாழ்த்துக்கள்!!!

சசிகுமார் சொன்னது…

அக்கா நன்றாக உள்ளது கவிதை, நீங்களும் சென்றிருக்கலாமே. சென்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

சி. கருணாகரசு சொன்னது…

அனைவருக்கு வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றிங்க.
//சென்னைத்தமிழ் ..செல்லத்தமிழ்//????

க.பாலாசி சொன்னது…

வணக்கங்களும், வாழ்த்துக்களும்..

அமைதிச்சாரல் சொன்னது…

//ஆலமாய் வேறூன்றி அகலமாய்க் கிளைத்து
ஆவியோடு சேர்ந்த மொழி.//

ஆலம் என்றால் விஷம் என்று அர்த்தமில்லையோ?..

asiya omar சொன்னது…

அருமை தேனக்கா.

asiya omar சொன்னது…

அருமை தேனக்கா.

Chitra சொன்னது…

உலகத் தமிழர் வாழ்க..உவகைத் தமிழ் வாழ்க..
தாய்த்திரு நாடு வாழ்க.. தகவுற்றது வெல்க..
வலைப் பதிவர் வாழ்க.. வலைத்தமிழ் வாழ்க..
வண்ணமும் எண்ணமுமாய் வளம் பெறுக........ அதே.... அதே.....!!!
:-)

அக்பர் சொன்னது…

கவிதை அருமை அக்கா

ஸ்ரீராம். சொன்னது…

சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ்....தமிழ் தமிழ் தமிழ் அமிழ்து...

Maria Mcclain சொன்னது…

interesting blog, i will visit ur blog very often, hope u go for this website to increase visitor.Happy Blogging!!!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

தமிழ் தந்தை - புதிய பட்டமும் நன்றாக உள்ளது.


கொட நாட்டில் அம்மா

கோவையில் தமிழ் தந்தை.

விஜய் சொன்னது…

பசுந்தமிழ் வாழ்க

விஜய்

தமிழ் வெங்கட் சொன்னது…

உங்களுக்கு கவிதை அருமையாக
வருகிறது..
தமிழின் பெருமை சிறக்க உங்கள் பங்களிப்பை சரியாக செய்கிறீர்கள்..

சுந்தரவடிவேல் சொன்னது…

//தமிழ்த்தந்தை//
தமிழை வைத்து அரசியல் வேசைத்தனம் செய்யும் ஒருவரைத் தமிழின் தந்தையாகக் கூறுவது நாம் நம் தாயை அவமதிப்பதைப் போன்றது. இதற்குமேல் அப்படியே கூறுவது உங்கள் விருப்பம்.

இரண்டாவதாக: இதனை நல்ல கவிதை என்று சிலர் புகழ்வதை நம்பி இதைப்போலவே தொடர்ந்தும் எழுதாதீர்கள். நல்ல கவிதைகளைத் தேடிப் படித்தீர்களென்றால் ஒருவேளை ஒருகாலத்தில் நீங்களும் நல்ல கவிதைகளைப் படைக்கக்கூடும். உங்கள் நன்மைக்குச் சொல்கிறேன்.

நட்புடன் ஜமால் சொன்னது…

:)

GEETHA ACHAL சொன்னது…

அருமையாக இருக்கின்றது தேனக்கா...நானும் நேற்று இனியவை 40தினை நெட்டில் உட்கார்த்து என்னுடைய குழந்தைக்கு அந்த கதைகள் சொல்லிகொண்டு பார்த்தேன்...அவளும் சந்தோசமாக பார்த்தாள்,,,,

VELU.G சொன்னது…

அருமை அருமை

வாழ்க தமிழ்

வெல்க தமிழர்

Mrs.Menagasathia சொன்னது…

very nice akka!!

thenammailakshmanan சொன்னது…

சுந்தர வடிவேல் ...மூத்த தமிழறிஞர் ஒருவரை. .. உரைநடைத்தமிழில் மிஞ்ச முடியாத ஒரு்வரை.. நான் மிக மதிக்கிறேன்.. உங்கள் தனிப்பட்ட அபிப்பிராயத்துக்கு நான் ஒன்றும் சொல்ல இயலாது..


இன்று செம்மொழி மாநாட்டுக்காக எழுதவேண்டும் என அவசரமாக எழுதப்பட்டது இக்கவிதை.. எனவே நீங்கள் சொல்லும் அறிவுரையை இந்தக் கண்ணோட்டத்துக்கு ஏற்கிறேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ரசித்தேன் மகிழ்ந்தேன்.

thenammailakshmanan சொன்னது…

சுந்தர வடிவேல் நேரம் கிடைத்தால் இந்தப் பதிவையும் படிங்க..

http://avetrivel.blogspot.com/2010/06/blog-post_22.html

நியோ சொன்னது…

நெஞ்சம் குளிர்கிறது தேனக்கா !
...
செம்மொழி வாழ்த்துக்கள் !
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_24.html

seemangani சொன்னது…

தமிழ் மொழிக்கு கவிமொழி தந்த இந்த தேன்மொழி...அழகு தேனக்கா...

Muniappan Pakkangal சொன்னது…

Thaai mozhikku , Semmozhikku oru sirappaana Kavithai Thenammai.Kalaingar's speech also nice inclusion.

Discovery book palace சொன்னது…

அக்கா நனும் மாநாட்டுக்கு போயிருந்தேன். பயங்கிற நெரிச்சல். 2 நாளில் திரும்பிவிட்டேன்.

thenammailakshmanan சொன்னது…

நன்றி அபி அப்பா., சசி., கருணாகரசு.,(ஆம் கருணா) பாலாசி., அமைதிச்சாரல்., (ஆலம் விழுது ப்பா அமைதிச்சாரல்..) ஆசியா.,சித்ரா., அக்பர்., ஸ்ரீராம்.,மரியா., ராம்ஜி., விஜய்., தமிழ்வெங்கட்.,ஜமால் ., கீதா., வேலு., மேனகா.,முத்துலெச்சுமி., நியோ., கனி., முனியப்பன் சார்., வேடியப்பன்..

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...