எனது நூல்கள்.

புதன், 9 ஜூன், 2010

கிராமத் திருவிழா..

கட்டை வண்டி
சக்கர இதழ்களினால்
ரோட்டுக் காதலனை
முத்தமிடும்..

புழுதி
உல்லாசமாய்...
விசிலடித்துப் பறக்கும்..

மந்தைகள்
மஞ்சள் பூசிக்குளித்துக்
குங்குமமிட்டு
மங்கலப் பெண்களாக வரும்..


பூசாரி .,சாமிக்கு
நெற்றியில் குங்குமம் அப்பி
அனைவரையும் பயமுறுத்துவான்..

கிளிகள்
நெல்மணிக்காகக்
காகிதம் பொறுக்கும்..

ராட்டினங்கள்
பூமிக்குத் தலையைச்
சுற்றவைக்கும்..

ராக்காயி
ஈக்களுக்கு
இலவசமாய்
இனிப்புத் தருவாள்...

முனியப்பன்
எச்சிதொட்டுப்
பிள்ளைகளுக்கு
கடிகாரம்., செயின்
(ஜவ்வு மிட்டாயில்)
பண்ணிப்போடுவான்..

வருங்கால நம்பிக்கை
நாயகர்கள்..
அப்பன்களின் தோளிலேறி
சாமி பார்ப்பார்கள்..

மங்கிப் போன
தீவட்டியின் முன்
கரகக்காரிகள்
உடலை நெளிப்பார்கள்..

பிள்ளைகளையும்
பொருட்களையும்
மனிதர்கள்
காணாமல் அடிப்பார்கள்..

பூசாரி
அரிவாளையும்
பலிக்கல்லையும்
இரத்தத்தால்
குளிப்பாட்டுவான்..

மனிதர்கள்
மாமிசம் உண்ண
வேண்டியே
கிடா வளர்த்துத்
திருவிழாவை வரவேற்பார்கள்..

டிஸ்கி:1:- இது எனது 200 வது இடுகை......10.2. 1985
கல்கியில் மாணவர் பக்கத்தில் வெளிவந்தது..
டிஸ்கி:2:- சகோ பலாபட்டறை ஷங்கர் புதுமனையில்
சகல சௌபாக்கியங்களுடனும் வாழ எனது மனம்
நிறைந்த வாழ்த்துக்கள்..
டிஸ்கி:- சகோ மயில் இராவணனின் மைந்தன்
சஞ்சயனின் பிறந்த நாளில் குழந்தை நூறாண்டு
பேரோடும் புகழோடும் வாழ எனது மனம்
கனிந்த வாழ்த்துகள்...

26 கருத்துகள் :

Chitra சொன்னது…

கட்டை வண்டி
சக்கர இதழ்களினால்
ரோட்டுக் காதலனை
முத்தமிடும்..


........ excellent!
......... ஷங்கருக்கு வாழ்த்துக்கள்!
......... Happy Birthday, Sanjayan!
:-)

மோகன் குமார் சொன்னது…

//10.2. 1985 கல்கியில் மாணவர்
பக்கத்தில் வெளிவந்தது..//
அப்பவே ஆரம்பிச்சிடீங்களா?

Mrs.Menagasathia சொன்னது…

சூப்பர்க்கா ,கிராமத்திருவிழாவினை கண்முன்னாடி நிறுத்திட்டீங்க...

ஷங்கருக்கு வாழ்த்துக்கள்!!

சஞ்சய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என்ன ஒற்றுமை என் அண்ணன் பையனுக்கும் இன்னிக்குதான் பிறந்தநாள்.அவன் பெயரும் சஞ்சய் தான்...

விஜய் சொன்னது…

இருநூறு இருபதாயிரமாக வாழ்த்துகிறேன்

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு எழுதியதா ? இன்றும் பொருந்துகிறதே

வாழ்த்துக்கள் அக்கா

விஜய்

கோமதி அரசு சொன்னது…

கிராமத் திருவிழா கண்முன்னே விரிந்து விட்டது.நன்றி.

ஷங்கருக்கு வாழ்த்துக்கள்!

குழந்தை சஞ்யனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

ஹுஸைனம்மா சொன்னது…

இப்ப சமீபமா திருவிழாவுக்குப் போய்ட்டு வந்தீங்களா?

:-))

நேசமித்ரன் சொன்னது…

ம்ம்ம்!

நல்லா இருக்குங்க !

பொழிந்து போன மழையின் ஈரம் சுவற்றில் பெயர்ந்த காரைகளுக்கு இடையில் போட்டிருக்கும் பழுப்புக்கோடுகள் நினைவுகள் !

க.பார்த்திபன் சொன்னது…

ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ஏன் வாங்கோழி கூட வளர்த்தா,நாய் மட்டும் வளர்க்களை ஏன் தெரியுமா நாயை திருவிழாவிற்கு
வெட்டமுடியாதே அதான்.

ஆனாலும் சொந்தமாக ஆட்டுக்கிடா
வளர்த்து திருவிழா அல்லது பொங்கலுக்கு பலியிடுவதை பார்க்க மனம் கொஞ்சம் கூட இடம் கொடுப்பதில்லை ஆனாலும் வெந்ததை
தின்று விடுவது பழக்கமாகிவிட்டது.

பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள்.
மிக்க நன்றி வண்க்கம்.

செந்நெல்குடி க.பார்த்திபன்
சிங்கப்பூர்.

D.R.Ashok சொன்னது…

//பூசாரி .,சாமிக்கு
நெற்றியில் குங்குமம் அப்பி
அனைவரையும் பயமுறுத்துவான்..


கிளிகள்
நெல்மணிக்காகக்
காகிதம் பொறுக்கும்..//

:)

ஈரோடு கதிர் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துகள்

அம்பிகா சொன்னது…

25 வருடங்களுக்கு முன் எழுதியதா?
அருமை. 200 க்கு வாழ்த்துக்கள்.!

அக்பர் சொன்னது…

கவிதை வழக்கம் போலவே கலக்கல்.

200வது இடுகைக்கு வாழ்த்துகள்.

சங்கருக்கு வாழ்த்துகள்.

சஞ்சய்க்கும் வாழ்த்துகள்.

அக்பர் சொன்னது…

கவிதை வழக்கம் போலவே கலக்கல்.

200வது இடுகைக்கு வாழ்த்துகள்.

சங்கருக்கு வாழ்த்துகள்.

சஞ்சய்க்கும் வாழ்த்துகள்.

பிரேமா மகள் சொன்னது…

இந்த கிராமம் இன்னும் இருக்கா அக்கா?

ஹேமா சொன்னது…

எல்லா வாழ்த்துக்களும் இணைந்திருக்கின்றன தேனக்கா.
அன்போடு சேரட்டும் அனைவருக்கும்.

//பூசாரி .,சாமிக்கு
நெற்றியில் குங்குமம் அப்பி
அனைவரையும் பயமுறுத்துவான்..//

M.S.R. கோபிநாத் சொன்னது…

கவிதை அருமை. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

seemangani சொன்னது…

//கட்டை வண்டி
சக்கர இதழ்களினால்
ரோட்டுக் காதலனை
முத்தமிடும்..//
அடடா ஆரம்பமே அசத்தல்...ரசித்தேன் தேனக்கா...

200வது இடுகைக்கு வாழ்த்துகள்.

சஞ்சய்க்கும் வாழ்த்துகள்.

புலவன் புலிகேசி சொன்னது…

200க்கு வாழ்த்துக்கள்...1985ல் எனக்கு ஒரு வயசு....முடியல.........

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice post

read this too, when u r free-http://skaamaraj.blogspot.com/2010/04/blog-post_25.html

ரிஷபன் சொன்னது…

200 க்கு நல்வாழ்த்துகள்..

ஜெய்லானி சொன்னது…

200 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!! இன்னும் பக்கத்தில் பத்து பூச்சியங்கள் வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!!!

செந்தில்குமார் சொன்னது…

1985 யம்மாடியேவ்
லேசா தலை சுற்றுது அக்கா

200 வது இடுகைக்கு என் வாழ்த்துக்கள்

வியுகம் செய்யமுடியாத வரிகள்

கட்டை வண்டி
சக்கர இதழ்களினால்
ரோட்டுக் காதலனை
முத்தமிடும்..


மழை பெய்து நின்றும்
மண்வாசனை
வெட்டிய விட்ட கிளையின்
துளிர்விட்ட இலை

என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை

நல்லாயிருக்கு அக்கா கவிதை

செந்தில்குமார் சொன்னது…

புதுமனையில் ஷங்கர் வாழ்த்துக்கள்

சஞ்சயனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

arrawinth சொன்னது…

மிகவும் இயல்பு.... தேனம்மைபோல...

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்து.,மோஹன் குமார்., மேனகா (அப்படியா).,விஜய்., கோமதி அரசு., ஹுஸைனம்மா.,நேசன்., பார்த்திபன்., அஷோக்., கதிர்., அம்பிகா., அக்பர்., ப்ரேமா மகள்., ஹேமா., கோபி., கனி., புலிகேசி.,ராம்ஜி., ரிஷபன்., ஜெய்லானி.,செந்தில் குமார்., அரவிந்த்

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றூமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...