சனி, 12 ஜூன், 2010

விளையாட்டு பொம்மை.....

கடைக்கு வந்தாய்..
எல்லா பொம்மைகளிலும்
சொல்பேச்சு கேட்பது போலிருந்த
என்னைத்தான் விரும்பினாய்..

பேசுவதற்கு என்று
எனக்கு அதிக பலமிருப்பது
உனக்குத் தெரிந்திருக்கவில்லை..

வீடு வந்தவுடன் நான்
உன்னை விளையாடிக்
கொண்டிருக்கிறேன்..


கனவிலாவது விட்டு
விடுதலையாகும் எண்ணத்தோடு
குப்புறப் படுத்துத்
தூங்கிக் கொண்டிருக்கிறாய்..

தூங்கப் படைக்கப்படாத நான்
உன் விழிப்புக்காய்க்
காத்திருக்கிறேன்..
நீ எழுந்தவுடன்
திரும்ப விளையாட.......

32 கருத்துகள் :

seemangani சொன்னது…

//தூங்கப் படைக்கப்படாத நான்
உன் விழிப்புக்காய்க்
காத்திருக்கிறேன்..
நீ எழுந்தவுடன்
திரும்ப விளையாட..//

பொம்மையே பேசுவதுபோல் அழகு கவிதை தேனக்கா வாழ்த்துகள்...

கமலேஷ் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க
வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice poem thanks for sharing

D.R.Ashok சொன்னது…

அட அசத்திட்டீங்க... நல்லாயிருக்கு...

உண்மைய சொல்லுங்க குழந்தைங்க விளையாடிட்டு போட்ட பொம்மைங்கள வெச்சிதானே இந்த கவிதை எழுதினீங்க?(அவங்க தூங்கன பின்னால)

’சிந்தனை செய்’ சரிதான் அதுக்காக... இவ்வளவு கவிதையா எழுதி தள்ளினா எப்படி? பின்னுட்டம்போட்டு நாங்க டயர்ட் ஆகிடருமில்ல... :)

சி. கருணாகரசு சொன்னது…

வித்தியாசமா இருக்குங்க.
பாராட்டுக்கள்.

அமைதிச்சாரல் சொன்னது…

இதில் பொம்மை ஆணா? பெண்ணா? :-))

நட்புடன் ஜமால் சொன்னது…

உயிரற்ற பொம்மைகளுக்காக
உயிர்ப்பான வரிகள்

விஜய் சொன்னது…

"தூங்கப் படைக்கப்படாத" இது ஒரு அற்புத கற்பனை

வாழ்த்துக்கள் அக்கா

விஜய்

அ.வெற்றிவேல் சொன்னது…

ரொம்பவவும் அழகாக வந்துள்ளது கவிதை.. ரொம்ப அழகான கவிதை.
வாழ்த்துக்கள் கவிஞரே

ஜெய்லானி சொன்னது…

வாவ்!!! அசத்தல் கவிதை....!!

செந்தில்குமார் சொன்னது…

நல்லயிருக்கு அக்கா...

என்ன ஒரு சிந்தனை!!!!


தூங்கப் படைக்கப்படாத நான்
உன் விழிப்புக்காய்க்
காத்திருக்கிறேன்..

செந்தில்குமார் சொன்னது…

நல்லயிருக்கு அக்கா...

என்ன ஒரு சிந்தனை!!!!


தூங்கப் படைக்கப்படாத நான்
உன் விழிப்புக்காய்க்
காத்திருக்கிறேன்..

Software Engineer சொன்னது…

வணக்கம்,
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/

ஹேமா சொன்னது…

பேசமுடியாத அஃறிணைகள் என நினைக்கும் பிளாஸ்டிக் பொம்மைகள் கூடக் கதைக்கின்றன உங்கள் கவிதையூடாக.பாராட்டுகள் தேனக்கா.

ஆறுமுகம் முருகேசன் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க..

அஹமது இர்ஷாத் சொன்னது…

உயர்வான வரிகள் நல்ல கவிதை தேனக்கா...

தமிழ் உதயம் சொன்னது…

பொம்மையும் உங்கள் புண்ணியத்தில் அருமையான கவிதை எழுதியுள்ளன.

மதுரை சரவணன் சொன்னது…

//தூங்கப் படைக்கப்படாத நான்
உன் விழிப்புக்காய்க்
காத்திருக்கிறேன்..
நீ எழுந்தவுடன்
திரும்ப விளையாட.......//

கவிதை பொம்மை மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

பொம்மைகள் பேச ஆரம்பித்தால் இப்படித் தான் இருக்கும்!


அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

arrawinth சொன்னது…

உண்மை தெரிந்த பிறகும்
பொய்யோடு விளையாட காத்திருக்கும்
பொம்மையை என்ன சொல்வது...
பரிதாபப்படுவதை விட..

நாய்க்குட்டி மனசு சொன்னது…

சொல்பேச்சு கேட்பது போலிருந்த
என்னைத்தான் விரும்பினாய்..//

இந்த வரிகள் பொம்மைக்கு உயிர் உண்டோனு உணர்வு உண்டாக்குது. ஒரு சின்ன பொருள் கூட உங்களுக்கு கவிதைக் கருவாகுது. வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் சொன்னது…

என்னமோ போங்க

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

//////கனவிலாவது விட்டு
விடுதலையாகும் எண்ணத்தோடு
குப்புறப் படுத்துத்
தூங்கிக் கொண்டிருக்கிறாய்..
///////

நிஜங்களிலும் ரசிக்கிறது கனவுகளின் வார்த்தைகளை .
மிகவும் அருமை .

பிரேமா மகள் சொன்னது…

அட.. உங்களுக்கு மட்டும் எப்படிக்கா இப்படியெல்லாம் தோணுது?

Chitra சொன்னது…

Like Toy story - it is toy kavithai.... very nice. :-)

சசிகுமார் சொன்னது…

//தூங்கப் படைக்கப்படாத நான்
உன் விழிப்புக்காய்க்
காத்திருக்கிறேன்.//

மிகவும் பிடித்தது இந்த வரிகள் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓட்டும் போட்டுவிட்டேன்

Jaleela Kamal சொன்னது…

தேனக்கா ஒரு விளையாட்டு பொம்மைய கூட் கவிதையா படைத்து விடுகிறீர்கள்.

வாழ்த்துகள்

ஹுஸைனம்மா சொன்னது…

நீங்க கவிதைகளில் வார்த்தைகளால் “விளையாடுகிறீர்களே”, அதனால் “வார்த்தை பொம்மைகள்” வடித்த கவிதையா இது?

:-)))

ரோகிணிசிவா சொன்னது…

supernga valakam pola .,

VELU.G சொன்னது…

நல்லாயிருக்குங்க

thenammailakshmanan சொன்னது…

நன்றி கனி., கமலேஷ்., ராம்ஜி., அஷோக்., கருணாகரசு., அமைதிச்சாரல்.(யாராவுமிருக்கலாம் .!!), ஜமால்., விஜய்., வெற்றி.,ஜெய்லானி., செந்தில் குமார்., softwre engineer., ஹேமா., ஆறுமுகம்., அஹமத்., ரமேஷ்., சரவணன்., ராமமூர்த்தி.,அரவிந்த் ., ராஜ்., கதிர்.,பனித்துளி சங்கர்.,ப்ரேமாமகள் சித்ரா., சசி.,ஜலிலா. ஹுசைனம்மா., ரோஹிணி சிவா., வேலு..

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...