எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 3 ஜூன், 2010

பேரன்பின் தந்தைக்கு பிரிய மகளின் வாழ்த்து

முத்தமிழும் முக்கனியும் மூவேந்தர் காத்த நாட்டில்
தித்திக்கும் செம்மொழியை சீர்கொடுத்து சிறப்பாக்கி
எத்திக்கும் ஏற்றும்படி எழிலான உருக்கொடுத்து
சித்திக்கும் செந்தமிழே..! சிறப்பாக வாழியவே.. !!

ஐந்துமுறை அமர்ந்தாய் ஆட்சிக் கட்டிலிலே..
அரவணைப்பாய் அனைவரையும் அன்பினிலே பண்பினிலே
அழகான பாலங்கள் ., அனைத்து நலத் திட்டங்கள்.,
அருமைச் செந்தமிழே ..! ஆருயிரே வாழியவே..!!

உடன்பிறப்பாய்க் கொண்டாயே உடன்வந்த யாவரையும்
உன்கடிதம் இல்லாமல் ஒருநாளும் விடிந்ததில்லை..
உனையறிந் தேன்எம் அருணாசல ஐயா மூலம்..
உவப்பான செந்தமிழே..! ஒருநூறு வாழியவே..!!


நல்லோர்கள் சூழ்ந்திருக்க.. நலமுடனே பேச்சிருக்க..
தொல்காப்பியத் தொன்மை எல்லாம் விளக்கிவைத்து
அழகிருக்க., கனியிருக்க., அரசிருக்க., முத்திருக்க
எழிலான செந்தமிழே..! ஏற்றமுடன் வாழியவே..!!

பொன்னரும், சங்கரும்., முரசொலியும் மறக்காவே..
அஞ்சுகம் வேலப்பர் அருந்தவத்தில் வந்தமகவே..!
மாறாத மாறன்தான் உம்மோடு அன்பழகர்போலே
மகிழ்வான செந்தமிழே..! மலர்ச்சியாய் வாழியவே..!!

உடல்நலத்தைப் பேணிடுக.. ஓய்வும் எடுத்திடுக..(அவ்வப்போது)
உதயநிதியாம் ஸ்டாலின்தான் உம்பின்னே துணைநிற்பார்..
உவப்பான உன் புன்னகைக்கு ஈடேது..! ஈடேது..!!
ஒய்யாரச் செந்தமிழே..! ஒரு நூறு வாழியவே..!!
****************************

தமிழன்னையின் பெருமிதமே..!
தமிழர்களின் மூத்தகுடியே..!!
தழைத்தோங்கி வாழிய நீ..!!
தமிழாய் தமிழ்க்காய்..!!

***********************

19 கருத்துகள்:

  1. [b]அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.. நேற்று இசை ஞானியின் பிறந்த நாள் என்று அறிந்தேன்.. இசை கடவுளுக்கும் என் வாழ்த்து வணக்கம்..

    பதிலளிநீக்கு
  2. எல்லோரையும் நெசிக்கும் உங்கள் நல்ல மனதுக்கு என் வாழ்த்துக்கள் தேனம்மை.... ! இன்று பிறந்த நம் தமிழ் இனத்தின் புகழை இசையால் நேர்மையாக உலகறியவைத்த இசை மேதை இளயராஜா அவர்களை வாழ்த்தி வணங்குகிறென்...

    பதிலளிநீக்கு
  3. தேனக்கா.. உங்க திறமை எல்லோருக்கும் தெரியும்.. இது மாதிரி தனிப்பட்ட ஒருவரின் புகழ் வேண்டாமே? பிறகு உங்களுக்கு கட்சி சாயம் பூசப்பட்டு ஒரு பிரிவிக்குள் கொண்டு வந்துவிடும்..


    கலைஞர்கள் என்னாலும் பரவாயில்லை, அவர்களின் ஒரு படைப்பாவது எல்லோருக்கும் பிடிக்கும்.. கலைஞர் வேண்டாமே?

    இது என் கருத்து.. உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இந்த பின்னூட்டத்தை அழித்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. உங்க கவிதை சூப்பர் ஆனா அதில் உள்ள ஆள்தான் பிடிக்கல....தமிழனாய் இருப்பதால்..

    :-))

    பதிலளிநீக்கு
  5. கவிதை சூப்பர்ர்க்கா...ஆனா அந்த தாத்தாவைதான் எனக்கு பிடிக்கல..இருந்தாலும் அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  6. உள்ளுர்காரன் நானே வாழ்த்தலைனா எப்படி ? வாழ்த்துகள் :((

    பதிலளிநீக்கு
  7. அக்கா, தமிழீஷ் திரட்டியில் பதிவை இணைக்கும்போது பதிவிற்கான புகைப்படம் என்று இறுதியில் ஒரு ஆப்ஷன் இருக்கும். பதிவில் புகைப்படங்கள் இல்லையென்றால் அது நம் ப்ரஃபைல் போட்டோவையே காட்டும். ஆனால் உங்கள் பதிவில் தொடர்ச்சியாக அந்த விருதுப் படமே இடம்பெறுகிறது. அடுத்த பதிவை இணைக்கும்போது இதை கொஞ்சம் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. சீரிளமை தென் தமிழில்..
    ஏற்றமுடன் நீர் நெய்த,
    எழுச்சிமிக்க ’பா’வமைந்த
    எண்ணத்தினை மதித்திடுவோம்!
    வண்ணம் பூச வேண்டாமே!!
    முத்தமிழின் முதுகலைஞன்...
    இத்தருணம் நினைத்து விட்டால்,
    முக்கனியின் சாறெடுத்து,
    முகம் மலர, அகம் குழைய..
    அருந்துமின்பம் அடைந்தோமே...
    அத்தனையும் அற்புதமே!!!

    பதிலளிநீக்கு
  10. தமிழுக்கும்,தேனுக்கும், தமிழ்தேனுக்கும் வாழ்த்துகள்...அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  11. தமிழ் இனம் இருக்கும் வரை ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்’(செம்மொழி)இருக்கும்,அதில் அரசியல் சாக்கடையை கலந்து சீர்கெடுக்காமல் இருந்தால் சரிதான்?மொழி எங்கள் உணர்வு, அரசியல் பிழைப்பு இல்லை. (ஏனோ தெரியவில்லை கசங்கிய மணம் பிரிய மகளின் எழுத்துக்களில்)

    பதிலளிநீக்கு
  12. கவிதை அருமை அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அக்கா இதுவரை எழுதியதில் எனக்கு மிகவும் பிடிக்காத கவிதை இது ஒன்றுதான்.

    வருத்தத்துடன் விஜய்

    பதிலளிநீக்கு
  14. நன்றி சிவாஜி சங்கர்., உலவு., அரவிந்த்., அக்பர்., ராசாத்தி., ஜெய்லானி., மேனகா., பாலா., சரவணா., நசரேயன்..(உங்க வயசு என்னா..??)., ராமமூர்த்தி., கனி.,Arise., சசி., விஜய்., முனியப்பன் சார்..

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  16. கலைகள் வளர்த்த கலைஞனுக்கு,
    கவிதை வார்த்த கவிதாயினியே,
    தமிழை உயர்திய தலைவனுக்கு,
    அன்பாய் வாழ்த்திய ஆரணங்கே,
    வாழ்த்துகிறேன் நீ உயர்கவென்று,
    போற்றுகிறேன் கவிதைபோல்
    வாழ்கவென்று.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...