பசுக்கள் சூழ புல்லாங்குழல் இசை கண்ணா
என்னுள் இருக்கும் ராதை நடனமாட..
ஆனந்தமாய் சுயமிழந்து...
நினைவலைகளில் நித்தமும் பெருகிப் பெருகி
என்ன வெள்ளமிது கண்ணா ? எங்கே நான்..?
இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...
ஆலிலையில் நீ ..ஆலிலையாய் நான்..
ஆரோகணமும் அவரோகணமுமாய் சேர்ந்தாடி
குருக்ஷேத்திரத்தில் பாஞ்சசன்யமாய்,,
பூதகியோ., காளிங்கனோ., கம்சனோ., கர்ணனோ..
நாடி நரம்புகளில் தொடுக்கிறாய்..
தோட்டப் பூவாய் தொடுக்கத்தொடுக்கப்
பூத்துக்கொண்டே.. தொடர்ந்து உன்னை..
எல்லாவற்றிலும் நீ ...இயைந்த இசையாய்
எல்லாவற்றிலும் உன்னைத் துய்த்து நான்..
எனக்குள் நீயா.. உனக்குள் நானா..?
ஜென்ம ஜென்மமாய்த்தேடும் கிருஷ்ணப் ப்ரேமி...
என்னுள் இருக்கும் ராதை நடனமாட..
ஆனந்தமாய் சுயமிழந்து...
நினைவலைகளில் நித்தமும் பெருகிப் பெருகி
என்ன வெள்ளமிது கண்ணா ? எங்கே நான்..?
இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...
ஆலிலையில் நீ ..ஆலிலையாய் நான்..
ஆரோகணமும் அவரோகணமுமாய் சேர்ந்தாடி
குருக்ஷேத்திரத்தில் பாஞ்சசன்யமாய்,,
பூதகியோ., காளிங்கனோ., கம்சனோ., கர்ணனோ..
நாடி நரம்புகளில் தொடுக்கிறாய்..
தோட்டப் பூவாய் தொடுக்கத்தொடுக்கப்
பூத்துக்கொண்டே.. தொடர்ந்து உன்னை..
எல்லாவற்றிலும் நீ ...இயைந்த இசையாய்
எல்லாவற்றிலும் உன்னைத் துய்த்து நான்..
எனக்குள் நீயா.. உனக்குள் நானா..?
ஜென்ம ஜென்மமாய்த்தேடும் கிருஷ்ணப் ப்ரேமி...
//இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
பதிலளிநீக்குஉயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...//
தேனக்கா,
சிலிர்த்த தருணங்களை மீட்டெடுக்கும் வரிகள்.
வழக்கம் போல் ஒரு நல்ல கவிதையை கொடுத்துள்ளீர்கள். நன்றி
பதிலளிநீக்கு//
இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...
//
உருகி உருகி எழுதிய வரிகள் அரும்
//எல்லாவற்றிலும் நீ ...இயைந்த இசையாய்
பதிலளிநீக்குஎல்லாவற்றிலும் உன்னைத் துய்த்து நான்.//
:))))
ஹை... இன்னோரு மீரா....
பதிலளிநீக்கு@@@ பிரேமா மகள்//ஹை... இன்னோரு மீரா....//
பதிலளிநீக்குரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்
உணர்ந்து ரசிக்கும்படியான கவிதை தேனக்கா.
பதிலளிநீக்கு//நாடி நரம்புகளில் தொடுக்கிறாய்..
பதிலளிநீக்குதோட்டப் பூவாய் தொடுக்கத்தொடுக்கப்
பூத்துக்கொண்டே.. தொடர்ந்து உன்னை...//
குழல் பிடித்த கண்ணா தேனக்கா மணம் பிடித்தது எப்போ???
ரசித்தேன் நல்லா இருக்கு தேனக்கா..
//இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
பதிலளிநீக்குஉயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...//
வார்த்தைகள் பட்டு சிலிர்க்கிறது உள்ளம் அருமை
கவிதை அருமை....
பதிலளிநீக்குகவிதை அருமைங்க!!!!
பதிலளிநீக்குநன்றி சத்ரியன்., வேலு., LK.,ப்ரேமா மகள்., ஜெய்லானி., சரவணா.,கனி., பனித்துளி சங்கர்.,அஹமத் இர்ஷாத்., ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்