எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 ஜூன், 2010

கிருஷ்ணப் ப்ரேமி

பசுக்கள் சூழ புல்லாங்குழல் இசை கண்ணா
என்னுள் இருக்கும் ராதை நடனமாட..
ஆனந்தமாய் சுயமிழந்து...

நினைவலைகளில் நித்தமும் பெருகிப் பெருகி
என்ன வெள்ளமிது கண்ணா ? எங்கே நான்..?

இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...

ஆலிலையில் நீ ..ஆலிலையாய் நான்..
ஆரோகணமும் அவரோகணமுமாய் சேர்ந்தாடி


குருக்ஷேத்திரத்தில் பாஞ்சசன்யமாய்,,
பூதகியோ., காளிங்கனோ., கம்சனோ., கர்ணனோ..

நாடி நரம்புகளில் தொடுக்கிறாய்..
தோட்டப் பூவாய் தொடுக்கத்தொடுக்கப்
பூத்துக்கொண்டே.. தொடர்ந்து உன்னை..

எல்லாவற்றிலும் நீ ...இயைந்த இசையாய்
எல்லாவற்றிலும் உன்னைத் துய்த்து நான்..

எனக்குள் நீயா.. உனக்குள் நானா..?
ஜென்ம ஜென்மமாய்த்தேடும் கிருஷ்ணப் ப்ரேமி...

12 கருத்துகள்:

  1. //இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
    உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...//

    தேனக்கா,

    சிலிர்த்த தருணங்களை மீட்டெடுக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. வழக்கம் போல் ஒரு நல்ல கவிதையை கொடுத்துள்ளீர்கள். நன்றி

    //
    இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
    உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...
    //

    உருகி உருகி எழுதிய வரிகள் அரும்

    பதிலளிநீக்கு
  3. //எல்லாவற்றிலும் நீ ...இயைந்த இசையாய்
    எல்லாவற்றிலும் உன்னைத் துய்த்து நான்.//

    :))))

    பதிலளிநீக்கு
  4. @@@ பிரேமா மகள்//ஹை... இன்னோரு மீரா....//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    பதிலளிநீக்கு
  5. உணர்ந்து ரசிக்கும்படியான கவிதை தேனக்கா.

    பதிலளிநீக்கு
  6. //நாடி நரம்புகளில் தொடுக்கிறாய்..
    தோட்டப் பூவாய் தொடுக்கத்தொடுக்கப்
    பூத்துக்கொண்டே.. தொடர்ந்து உன்னை...//

    குழல் பிடித்த கண்ணா தேனக்கா மணம் பிடித்தது எப்போ???
    ரசித்தேன் நல்லா இருக்கு தேனக்கா..

    பதிலளிநீக்கு
  7. //இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
    உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...//

    வார்த்தைகள் பட்டு சிலிர்க்கிறது உள்ளம் அருமை

    பதிலளிநீக்கு
  8. நன்றி சத்ரியன்., வேலு., LK.,ப்ரேமா மகள்., ஜெய்லானி., சரவணா.,கனி., பனித்துளி சங்கர்.,அஹமத் இர்ஷாத்., ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...