கண்ணதாசனின் வனவாசம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதல்ல எப்படி வாழக்கூடாது என்பதற்கான வழிகாட்டி...
உண்மைகளை நிர்வாணமாகவும் துயரங்களைத் தாழ்வு கருதாமலும்., மேன்மைகள் என்று கருதியவற்றை பயத்துடனும்..செய்து வாழ்ந்த ஒரு மகா கவிஞனின் உள்ளீடு இது..
சமுதாயம் நம்மைத்தூக்கி எறிந்தாலும்.. மீண்டும் சமுதாயத்திற்குள் ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும் என்பார் கண்ணதாசன்.. கடலில் நண்டு அலை வீசி எறிந்தாலும் திரும்பக் கடலுக்குள் ஓடுவது போல...
காலூன்றாத நண்டு போல் அலை மோதாமல் உயர்ந்த இடத்தில் காலூன்றி விடவேண்டும்,, என்பார்..
இப்படி மோதி மோதி முன்னேறிய ஒரு வாழ்க்கைச் சரிதம் அவருடையது.. சிறுகூடல் பட்டியில் முத்து சாத்தப்பன் செட்டியாரின் எட்டாவது குழந்தையாக பிறந்த அவர் கண்ணனைப் போல பல இடரிலும் விழுந்து எழுந்துதான் கவியரசரானார்.. கண்ணதாசனானார். அதற்கு முன் அவர் எடுத்த முயற்சிகள் எத்தனை எத்தனை .... திரும்பத்திரும்ப முயற்சி செய்ததில் வெற்றி அவர் பக்கம்தான்..
முதலில் ”திருமகள்” பத்ரிக்கைக்காக புதுக்கோட்டையை அடுத்த ராமச்சந்திரபுரத்தில் ஆரம்பித்தது ஒர் கவியரசருக்கான வாழ்க்கை..முதல் கவிதை வந்தது.. அடுத்து ”முல்லை” பதிப்பகம் 1945 இல் .. பின்னர் திராவிட நாடு இதழ்கள் .. குடியரசு வெளியீடுகள்.. கோனாபட்டு நண்பர்கள் பழக்கம்..
முதல் முதலில் கோகலே மண்டபத்தில் அண்ணாவின் பேச்சு கேட்க அதிலிருந்து ஒரு புதிய பயணம் ஆரம்பம்..
அடுத்து ”அருணோதயம்” பதிப்பகம்., அரு்ணாசலமும் குயிலனும் கூட்டாக ”தென்றல்” பத்ரிக்கை நடத்த கவியரசரின் பீலிவளை என்ற சோழன் நெடுமுடிக்கள்ளி பற்றிய சொற்சித்திரம் வந்தது..
புதுக்கோட்டையில் ”தாய்நாடு” நாராயணனுக்கும் ”அணிகலம்” என்ற பத்ரிக்கைக்கும் எழுதினார்.. பின் ”மேதாவி”யின் உதவி ஆசிரியர்..அடுத்து தாய்நாடுவில் பணிபுரியும் போது இரண்டாவது எழுத்தாளர் மாநாடு ..
”பொன்னி”யில் முருகு.சுப்பிரமணியன் நடத்திய பத்ரிக்கையில் பணி.. அதற்கு பெரியண்ணன் கேட்டதால் இரண்டு கதை எழுதினார்..
“வணங்காமுடி” என்ற பெயரில் “குமரன்” பத்ரிக்கையில் “ஜெய்ஹிந்த்” என்ற கதை வந்தது.. பின் மேதாவியில் இருந்து “திரை ஒலி” பாப்பா நடத்திய இரா.தியாகராசன் திரை ஒலிக்கு ஆசிரியராக வந்தார்.
அடுத்து “சக்தி காரியாலயம்” .. திரு வை. கோவிந்தன் நடத்தியது . ஆசிரியர் திரு தி. ஜ. ர... அங்கு ரா. கி. ர ( குமுதம் துணையாசிரியர்.) , கல்கண்டு ஆசிரியராக இருந்த தோழர் தமிழ்வாணன்., ஆகியோர் நெருக்கமானார்கள்..
பின்னர் ”சாயிபாபா புத்தகாலயம்” அதிபர் சண்முகமிடம்., சேலம் மார்டர்ன் தியேட்டருக்காக சண்ட மாருதம்., பின் ”கஜலெட்சுமி” அச்சகம்..
தென்றல் என்ற சொந்த பத்ரிக்கை உதயம்.. முதல் தென்றல் இதழில் இறந்துபோன காதலர்கள் ஒன்று சேர்ந்து பேசுவது போல ஒரு படைப்பு.
தமிழர் திருமணத்தில் தாலி பற்றி மபொசியின் கருத்துகளுக்கு எதிர்க்கருத்துக் கொண்டிருந்தது .. திருடித்தான் புகழ் பெற்றான் ஷேக்ஸ்பியர் என இவர் சர்ச்சைக்குரியது பற்றியும் பத்ரிக்கைகளில் துணிந்து கருத்து வெளியிட்டவர்..
கிட்டத்தட்ட 1942 இல் இருந்து 1961 வரையான கால கட்டத்தில் சுமார் ஒரு 20 பத்ரிக்கைகளில் பணியாற்றியும் .. சொந்தமாக பதிப்பகம் நடத்தியும் சேர்த்த அனுபவம் அளவிலடங்கா.. அதன் பின் அரசியலிலும் திரைத்துறையிலும் புகுந்து பின் கவியரசராக வென்ற சரித்திரம் அறிவோம்..
ஆனால் அந்தக் கவிஞரைப் புடம் போட்டு பாதை அமைத்துத் தந்தது இந்தப் பத்ரிக்கைகைப் பணியும் பதிப்பகங்களும்தான்.. ஆரம்ப கால கட்டங்களில் மிகச் சொற்ப பணத்துக்காக கூட எழுதியுள்ளார்.. எனவே ஒரு கவியரசருக்கே இவ்வளவு கஷ்டமும் முயற்சியும் வேண்டியிருக்கையில்... வலைப்பதிவராகிய நாமெல்லாம் இன்னும் சீரிய முயற்சி எடுத்து மென்மேலும் சிறப்பானதைக் கொடுக்க முயல்வோம்.. நாம் இல்லாவிட்டாலும் நம் படைப்புகள் பேசப்படும்.. நூறாண்டுக் கவிஞராயில்லா விட்டாலும் நல்ல படைப்புகளுக்குச் சொந்தக்காரராவோம்.. நன்றி கவியரசரே.. முயற்சி உடையோம் .. இகழ்ச்சி அடையோம்.. உங்கள் பிறந்த நாளில் உங்கள் ஆசீர்வாதத்தோடு..
டிஸ்கி:- ஏசு காவியம் உட்பட மன வாசம் மன வாசம் என பல எழுதி இருந்தாலும் நான் அவரின் ஆரம்ப காலக்கட்ட முயற்சிகளையே... அவரின் எல்லாவற்றிற்குமான .. அடிப்படையான... அவரை செதுக்கிய கருவியாகக் கருதுகிறேன்

பகிர்விற்கு நன்றி..
பதிலளிநீக்கு//எனவே ஒரு கவியரசருக்கே இவ்வளவு கஷ்டமும் முயற்சியும் வேண்டியிருக்கையில்... வலைப்பதிவராகிய நாமெல்லாம் இன்னும் சீரிய முயற்சி எடுத்து மென்மேலும் சிறப்பானதைக் கொடுக்க முயல்வோம்.. //
பதிலளிநீக்குசிறந்த வரிகள்!
நல்ல பதிவுங்க!
அருமையான பகிர்வு.. தகவலுக்கு நன்றி தேனக்கா.
பதிலளிநீக்குஅக்கா, ரொம்ப நல்லா ரசித்து படித்து , உங்கள் கருத்துக்களுடன் தொகுத்து தந்துள்ள பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன் மானசீகக் காதலன் கவியரசு பற்றிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தேனக்கா..!
பதிலளிநீக்குNice info on Kannadaasan on his birthday Thenammai.Itz surprise to know facts abt his books & also himself as a publisher.Most of us know him as cinema lyricist.Also your interest in making the bloggers with good writings is nice.Good article Thenammai.
பதிலளிநீக்கு//சமுதாயம் நம்மைத்தூக்கி எறிந்தாலும்.. மீண்டும் சமுதாயத்திற்குள் ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும் என்பார் கண்ணதாசன்..//
பதிலளிநீக்குஎனக்கு பிடித்த வரிகள் அக்கா
அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தின் முன்னுரையில் இப்படி எழுதி இருப்பார் கண்ணதாசன்:
பதிலளிநீக்குஎப்படி எல்லாம் வாழ்ந்து கெட்டு போக கூடாதோ அப்படி எல்லாம் கெட்டு போனதால் எனக்கு, எப்படி எல்லாம் நல்ல படியாக நீங்கள் வாழ வேண்டும் என்று அறிவுரை கூற தகுதி உண்டு.
மிக அருமை, சிறந்த பதிவை அளித்தமைக்கு நன்றிகள்.
//நாம் இல்லாவிட்டாலும் நம் படைப்புகள் பேசப்படும்.. நூறாண்டுக் கவிஞராயில்லா விட்டாலும் நல்ல படைப்புகளுக்குச் சொந்தக்காரராவோம்.//
பதிலளிநீக்குநல்ல கருத்து..முயற்சி உடையார் இகழ்சி அடையார்..
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிஞரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கே தெரியாத விபரங்கள்..அப்படியே அமராவதிபுதூர் குருகுலம் பற்றியும்.உருப்படமாட்டே என்ற ஆசிர்வாதத்துடன் அங்கிருந்து வெளியேறியதையும் குறிப்பிட்டு இருக்கலாம்.
பதிலளிநீக்குகவியரசரைப் பற்றிய ஏற்கெனவே தெரிந்த தகவலகள் என்றாலும் மறுபடி மறுபடி படிப்பதற்கு அலுப்பதில்லை.வாழ்த்துக்கள்.கவியரசர் தொடர்புள்ள மற்றொரு முக்கியமான செய்தி குறித்த எனது பதிவொன்றையும் எழுதியுள்ளேன். அவசியம் இதனைப் படித்துப் பாருங்கள்.http://amudhavan.blogspot.com
பதிலளிநீக்குசுவையான தகவல்கள் நிறைய தெரிந்துகொண்டேன்
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
ஒரு கண்ணதாசனின் கவிதையை பகிர்கிறேன். "பிறப்பில் வருவது யாதென கேட்டேன். பிறந்து பாரென இறைவன் பணித்தான். இறப்பில் வருவது யாதென கேட்டேன் இறந்து பார் என இறைவன் பணித்தான். மனையாள் சுகமெனில் யாதென கேட்டேன். மணந்து பாரென ஆண்டவன் பணித்தான். அனுபவித்து பார்ப்பதே வாழ்க்கை எனில்- ஆண்டவனே நீ எதற்கு என்று கேட்டேன். அருகே வந்த ஆண்டவன் அழகாய் சொன்னான். அனுபவமே என்பதே நான் தான்" என்று.
பதிலளிநீக்குnandri
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி..
பதிலளிநீக்குகண்ணதாசன் - மனசுக்கு அலுக்காத சுகமான பெயர். இந்தப் பதிவும் படிக்கையில் திகட்டாத இன்பம்.
பதிலளிநீக்குவிருது பெற்றுகொள்ளுங்கள்
பதிலளிநீக்குவிஜய்
கவியரசரை பற்றிய ஒரு கருத்துள்ள பகிர்வு. நன்றி தோழி.
பதிலளிநீக்குஆரம்ப கால கட்டங்களில் மிகச் சொற்ப பணத்துக்காக கூட எழுதியுள்ளார்..//
பதிலளிநீக்குஅப்போதும் சரி, அப்புறம் நிறையப் பணம் வந்த போதும் சரி, அவர் கையில் பணம் தங்கியதில்லையாம்.... செலவு சரியாக வந்து காத்திருக்குமாம்.
படித்திருக்கிறேன்.
பகிர்விற்கு நன்றி...
பதிலளிநீக்கு//////கண்ணதாசனின் வனவாசம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதல்ல எப்படி வாழக்கூடாது என்பதற்கான வழிகாட்டி...
பதிலளிநீக்கு//////////////
மறுக்க முடியாத உண்மைதான்
வார்த்தைகள் கோர்ப்பதும், நழுவ விடாமல் அதை தொடர்ந்து கொண்டு போவதும் என அத்தனையும் கைகூடி தங்களுக்கான இடத்தை ஒவ்வொரு இடுகையின் வாயிலாகவும் உயர்ந்து கொண்டே வருகிறீர்கள்
பதிலளிநீக்குகவிதைகள் என்பது கண நேர கிளர்ச்சி. உணர்ந்தவர்களுக்கு மட்டுமே ஏதோ ஒரு தாக்கத்தை உருவாக்கும்.
ஆனால் இது போன்ற சிந்தனைகள் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல உங்களை உங்களுக்கே அறிமுகப்படுத்தும்.
சிறப்பு.
"வனவாசம்" கவியரசரால் ரொம்பவே
பதிலளிநீக்குஅற்புதமாகப் படைக்கப்பட்ட
வாழ்க்கை வரலாற்றுக் காவியம்!
கவியரசரை மீண்டும் நினைக்க வைத்த
இந்த நேரத்தில் உங்களுக்கு மீண்டும்
மனமார்ந்த நன்றிகள்!
நல்ல பதிவு அக்கா
பதிலளிநீக்குநான் படித்த புத்தகத்தில் வியந்து பார்த்தது வனவாசம் கவிஞர் கண்ணதாசனை மட்டும் தான் வனவாசத்தை படித்து முடிக்கும் போது என் மனம் அப்படி ஒரு கனத்தை பற்றிக்கொண்டது ஒருவன் அவன் வாழ்வில் இவ்வளவு கரடு முரடான முள் பாதைகளை கடந்து வந்துள்ளார் என்பதை உணர்ந்தேன்...
எப்படி எல்லாம் வாழ்ந்து கெட்டு போக கூடாதோ அப்படி எல்லாம் கெட்டு போனதால் எனக்கு, எப்படி எல்லாம் நல்ல படியாக நீங்கள் வாழ வேண்டும் என்று அறிவுரை கூற தகுதி உண்டு
இந்த வரிகளுக்கு நானும் அடிமை....
வலைப்பதிவராகிய நாமெல்லாம் இன்னும் சீரிய முயற்சி எடுத்து மென்மேலும் சிறப்பானதைக் கொடுக்க முயல்வோம்.. நாம் இல்லாவிட்டாலும் நம் படைப்புகள் பேசப்படும்.. நூறாண்டுக் கவிஞராயில்லா விட்டாலும் நல்ல படைப்புகளுக்குச் சொந்தக்காரராவோம்.. நன்றி கவியரசரே.. முயற்சி உடையோம் .. இகழ்ச்சி அடையோம்.. உங்கள் பிறந்த நாளில் உங்கள் ஆசீர்வாதத்தோடு
இந்த வரிகள் தன்னம்பிக்கை அளிக்கிரது அக்கா...
இன்னும் செம்மையாக உழைப்போம் ...
நன்றி சூர்யா., சுரேகா., ஸ்டார்ஜன்.,சித்ரா., சரவணன்., முனியப்பன் சார்.,சசி., ராம்ஜி., தமிழ்வெங்கட்.,மதுரை சரவணன்., வெற்றி., அமுதவன்.,வேலு., ரமேஷ்., LK., டி வி ஆர்.,ரிஷபன்., விஜய் (நன்றீ விஜய்) அம்பிகா., ஸ்ரீராம்.,அஹமத் ., ஜோதிஜி., சங்கர்., அண்ணாமலை.செந்தில் குமார்
பதிலளிநீக்குஅன்பிற்கினிய தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு..
பதிலளிநீக்குகாவிரிமைந்தனின் கனிவான வணக்கம்! தாங்கள் எழுதிய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரை படித்தேன்.
ஒரு பொதுவான தலைப்பில் கட்டுரையைக் கேட்டிருந்தது ஏன் தெரியுமா? இப்படி கவியரசர் பற்றிய அரிய பல தகவல்களை.. கருத்துக் கருவூலங்களைப் பெற்றிட வேண்டுமென்கிற விழைவே!
எனவே எனது எண்ணத்தை வெற்றிபெறச் செய்த உங்கள் கட்டுரைக்கு நன்றி! அரிய பல செய்திகளின் தொகுப்பாய் அணிவகுத்திருந்த கவிஞரின் ஆரம்ப கால அனுபவங்கள் அவரைச் செப்பனிட்டு.. செதுக்கி மாபெரும் புகழுக்கு உரியவராக உயர்வுபெற வைத்தது என்கிற உங்கள் முத்திரை அற்புதம்!
கவியரசரின் சிறுகூடற்பட்டி இல்லத்திற்குள் நுழைந்தபோது வந்த காற்று தந்த உணர்வுபற்றி படிக்கும்போதே.. என்னுள்ளத்தில் ஆழமான பதிவுகள் அலைமோதின! நன்றி.. தேனம்மை..
என்றும் அன்புடன்..
காவிரிமைந்தன்