எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காரைக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஏப்ரல், 2025

திருமதி லெக்ஷ்மி ஆச்சி வளர்தமிழ் நூலகத்துக்கு அளித்த நூல்கள்.

காரைக்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகத்துக்கு நான் கொடுத்துள்ள நூல்களின் பட்டியல் ( நூலின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், பக்கங்கள், விலை விபரம் ) கொடுத்துள்ளேன். 


ஆஸ்திரேலியாவிலிருந்து 2011 முதல் 2015 வரை வெளிவந்த 38 இதழ்கள். 

திங்கள், 2 டிசம்பர், 2024

மணிக்கிராமமும் சித்திரமேழியும்

 181.

2071.பூர்வீகம் - நாக நாடு


2072.அதன் பின் வலசை வந்தது காஞ்சிபுரம், பூம்புகார்,  சிதம்பரம்,  பாண்டி நாடு


2073.பர்மா ( செய்கோன் ) மலாயா. ரெங்கோனுக்குக் கொண்டு விக்கச் சென்றது. தற்போது உத்யோகம் நிமித்தம் சென்றிருக்கும் பல்வேறு வெளிநாடுகள். 


2075.மணிக்கிராமம் (mercantile guild ) 

திங்கள், 21 அக்டோபர், 2024

உபதேசப் புதுமையும் சமயதீட்சையும்

 180.


2061.கணபதி பூஜை – பகவத்யானம். மணமகனுக்கும் மணமகளுக்கும் புரோகிதர் சங்கல்பம் சொல்லி கணபதி பூஜை (பகவத் தியானம் செய்து) செய்வார்). அதன் பின் இருவரின் மாமக்காரர்களும் இருவருக்கும் காப்புக் கட்டுவார்கள். ஒரு சிறு வெள்ளி நாணயத்தை சிவப்புத் துணியில் முடிந்து நுனி உடையாத விரளி மஞ்சளையும் சேர்த்துக்கட்டி மணமக்களின் வலது மணிக்கட்டில் கட்டி விடுவதே காப்புக் கட்டுதல் ஆகும்.

2062. தாலி கட்டும் போது மூன்றுமுடிச்சுப் போடுதல் – விழிப்பு நிலை, தூக்க நிலை, கனவு நிலை இம்மூன்றிலும் நீயே என் மனைவி, நான் உன் கணவன் என்பதைக் கூறும் விதமாக மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடப்படுகின்றது.

செவ்வாய், 15 அக்டோபர், 2024

கன்னி நீராடுதலும் மாப்பிள்ளை அறிதலும்

 179.


2051.கோவிலில் பாக்கு வைத்தல் – திருமணம் பேசிக்கொண்டதும் இரு வீட்டாரும் அவரவர் நகரக் கோயில்களில் திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகப் போய் பாக்கு வைக்க வேண்டும். காலை முதல் மாலைக்குள் செல்ல வேண்டும். திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு மணமகன், மணமகள் ஆகிய இருவரின் கோவில், பிரிவு, வகை, மணமக்கள் பெயர், அவர்களின் பெற்றோரின் பெயர்கள், ஊர்கள், விலாசங்கள், கல்யாண நாள், நேரம், இடம் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு பங்காளிகள் யாரேனும் ஒருவர் போய் பாக்கு வைத்துப் பதிவு செய்து அதற்குரிய காணிக்கை செலுத்தி வர வேண்டும். திருமண அழைப்பிதழ், விவரங்கள் குறித்த சிட்டை, வெற்றிலை பாக்கு ஆகியன கொண்டு செல்ல வேண்டும்.

திருமணத்தன்று முதல்நாள் இரு கோவில்களிலும் இருந்து இரு கோவில் மாலைகள் வரும். அதைப் பெண்கள் சங்கு ஊதி வாங்கி நடுவீட்டில்வைக்க வேண்டும். கொண்டு வரும் `அர்ச்சகருக்கு முறை கொடுக்க வேண்டும்.  மாப்பிள்ளை வீட்டில் அதில் ஒன்றை மாப்பிள்ளை அணிந்து கொண்டு திருப்பூட்டச் செல்ல வேண்டும். திருப்பூட்டும் போது முதன் முதலில் அந்தக் கோவில் மாலையைத்தான் மாப்பிள்ளை பெண்ணுக்கு அணிவிக்க வேண்டும்.

திங்கள், 10 ஜூன், 2024

வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம்.

 வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம்.



உள்ளம் அழகா இருந்தா ஊரே அழகா இருக்கும். தன் பேரும் அழகா இருக்கும் ஒருத்தரைப் பற்றிச் சொல்லிக்கிட்டே போகலாம். காரைக்குடியைக் கல்விக்குடியாக மாற்றியவர் வள்ளல் அழகப்பர். அவரோட வள்ளல்தன்மைக்கு முன்னாடி கர்ணன் மட்டும்தான் நிக்கமுடியும். தன் கவசத்தைக் கொடுத்த கர்ணன் மாதிரி அரண்மனை போன்ற தனது இல்லத்தைப் பெண்கள் கல்லூரி துவங்கக் கொடுத்தவர்.

கல்விக்கூடம், ஆராய்ச்சிக்கூடம், கட்ட ஏக்கர்கணக்கில் தனது சொந்த நிலத்தை வழங்கியவர். 1943 இலேயே ஒரு லட்சம் ரூபாயை கல்விப்பணிக்காக நன்கொடை வழங்கியவர். இவர் செய்த பணிகளைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும். கிட்டத்தட்ட 47 ஏ ஆண்டுகள் வாழ்ந்த இவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்கா.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

ஒச்சமும் ஒசிதலும்

 178.

 

2041.செமிச்சுப் போச்சு - உண்ட உணவு ஜீரணமாவது. ஒருவரிடம் வாங்கிய பணத்தை, பொருளை ஒருவர் செலவு செய்து விடுவது. 


2042.தல ரோதனையாப் போச்சு -- தீர்க்க முடியாத பிரச்சனையைக் குறிப்பது. தலைவலி ஏற்படுத்துகிறது என. ரோதனை என்றால் வலி. 


2043.முகப்பு நெட்டுக்கு, வளவு நெட்டுக்கு - முகப்பு முழுவதும் நீளமாக, வளவு முழுவதும் நீளமாக. அரிசி நெல் போன்றவற்றை வளவு நெட்டுக்குக் காயவைப்பார்கள். அதைக் குறிப்பது. 


2044.மண்டைக்கிராது - மண்டைக்கனம் தலைக்கனம், ஹெட்வெயிட், செருக்கு, அகந்தை, அகம்பாவம். 

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

கோக்காலியும் முக்காலியும்

 177.

 

2031.இணுக்கு - சிறிய அளவு. சிறிய இணுக்குப் பூ ஒரு கணு, துளியூண்டு, இக்கினியூண்டு. 


2032.நொவரநாட்டியம் - அதிகமாக அலட்டிக் கொள்ளுதல். ஆடம்பரமாக நடந்து செல்லுதல், குறை சொல்லுதல், வம்பு செய்தல், தான் செய்வது சரி என்று கூறல்


2033.மொகரக்கட்டை - முகம், மோவாய், இதைத்தான் கோபத்தில் மொகரைக் கட்டை என்று திட்டுவது. மூஞ்சியையும் மொகரக் கட்டையையும் பாரு என்று வைவது. அன்பாயிருக்கும்போது அழகாய்த் தோன்றும் முகம் கோபமாய் இருக்கும்போது மொகரக் கட்டையாகத் தோன்றும்.  


2034.அட்டணக்கால் -- கால் மேல் கால் போட்டு அமர்தல். 

வியாழன், 21 மார்ச், 2024

கழனிவாசல் ஸ்ரீ இடைச்சியம்மன் திருக்கோவில்

 காரைக்குடி கழனிவாசலில் அமைந்துள்ளது இடைச்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் 1989 ஆம் வருடம் யாதவ சமூகத்தினரால் அமைக்கப்பட்டது. 

கோபுரத்தில் புல்லாங்குழலுடன் கிருஷ்ணரும் துவாரபாலகியரும் சிங்கங்களும் காவல் தேவதைகளும் காட்சி அளிக்கிறார்கள். 

கோயிலின் இடப்புறம் ஸ்ரீ நாகநாதருக்குக் குட்டியாகத் தனிச்சந்நிதி. 

செவ்வாய், 19 மார்ச், 2024

மேப்போனதும் சோமாத்தியும்

176.


2021.தோதுக்குத் தக்கன - தங்கள் நிலைமைக்குத் தக்கவாறு, தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு


2022.வடிச்சு உண்கிற வேலை - சோறு வடித்து உண்பதை இப்படிக் குறிப்பார்கள். வெறுமன வடிச்சு உங்கிற வேலை. அதைக் கூடச் செய்யத்தெரியாதா என. மற்ற வேலைக்கு ஆள் வைத்திருப்பார்கள். 


2023.ஊடமாட - நடுவில், ஒரு விஷயத்தின் அல்லது நிகழ்வின் நடுவில். கூடவே வந்து உதவி செய்தல். 


2024.காலக்கொடுமை - கெட்ட காலம். இது நல்ல காலம் அல்ல, அல்லது ஒரு விஷயத்தின் வீர்யத்தை வெளிப்படுத்த இப்படிச் சொல்வதுண்டு. அவளுக்கு இப்படி நடக்கலாமா காலக் கொடுமை என்பார்கள். 

ஞாயிறு, 3 மார்ச், 2024

காரைக்குடி கொப்புடைய அம்மன் திருக்கோயில்

 காரைக்குடியின் காவல் தெய்வம் கொப்புடையம்மன். கல்லுக்கட்டியில் அமைந்துள்ள இக்கோயிலைச் சுற்றிக் கடைவீதி அமைந்துள்ளது. 

மூன்று நிலை இராஜ கோபுரத்துடன் எடுப்பான அழகிய கோவில் இது. உள்ளே நுழைந்ததுமே தாயின் கருவறைக்குள் இருப்பது போன்ற நிம்மதி ஏற்படும். 

எங்கள் பாட்டிகள் , பாட்டையாக்கள், ஐயாக்கள், ஆயாக்கள், அப்பத்தாக்கள் மற்ற உறவினர்கள் அனைவரின் காலடித்தடங்களும் இங்கே நான் மானசீகமாக உணர்வேன். அவர்களின் சுவாசம் கலந்த கோவில் எனக்கு மிக விசேஷமானது. 

வருடா வருடம்  பழனிக்கு நடைப்பயணமாகவும், காவடி கட்டியும் புறப்படும் நூற்றுக்கணக்கான புனித மக்களின் காலடித் தடங்களும் அவர்களின் வேண்டுதல்களும் கலந்த காற்று நம்மையும் ஆற்றுப்படுத்தும். 

ஒரு சில முறை ஆயாவுடன் இங்கே மார்கழி திருப்பள்ளி எழுச்சிக்கு வந்து வணங்கி சூடாக வெண்பொங்கல் வாங்கிச் சாப்பிட்டது நினைவில் ஆடுகின்றது. ஆறாவயல் பாட்டியுடன் வந்து பூச்சி பொட்டுக் கடிக்காமல் இருக்க அவற்றின் மண் உருவை வாங்கி வேண்டுதல் குதிரைகளின் அருகில் சேர்ப்பித்ததும் கூட.  எங்கள் ஐயா ஆயாவின் சஷ்டியப்த பூர்த்திக்கும் இங்கே வணங்கிவிட்டுத்தான் வீட்டிற்கு வந்தோம்.ஆயா வீட்டில் நடைபெறும் அனைத்துத் திருமணங்களுக்கும் மாப்பிள்ளை அழைப்பு இங்கே இருந்துதான் நடைபெறும்.

முன்பு இக்கோயிலின் நுழைவுப் பகுதியில் வாயிலை ஒட்டி மேற்பக்கத்தில் கல் வளையங்கள் தொங்குவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். கோயில் முழுவதும் தூண்களில் தாமரை பூத்த கொடுங்கைகள் வெகு அழகு. 

கல் திருப்பணியால் ஆன கோயில் இது. உள்ளே உள்ள தூண்கள் ஒன்றில் பைரவர் காட்சி அளிக்கிறார். 

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

வட்டாரப் பழமொழிகள் - 10

 175.


2011.தொட்டிலிலே அட்டணக்கால் தூங்குறது யாரு மகன் - தொட்டிலில் தூங்கும் குழந்தை சமயத்தில் அட்டணக் காலிட்டுத் தூங்கும். அதை சிலாகிக்கக் கூறியது. மகன் பேரன் என்றால் இன்னும் ஓவியம்.


2012.கேப்பையில நெய் வழிஞ்சா கேப்பாருக்குப் புத்தி எங்க போச்சு - ஒரு விஷயம் உண்மையா இல்லையா எனத் தெரியாமல் நடந்து கொள்பவரைப் பற்றிக் கூறுவது. கேப்பையில் நெய் வழியாது. ஆனால் அதன் ருசி நெய் விட்டது போலிருக்கும். எனவே போலியானவற்றை நம்பக் கூடாது என்பது அறிவுரை..


2013.ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே - ஊரார் வீட்டில் கொடுத்த பொருள் இயல்பாகவே சிறப்பாக இருந்தாலும் அது தன் மனைவியின் கைப்பட்டதால் அவள் பரிமாறியதால்தான் சுவையாக இருக்கிறது என்று கூறிக்கொள்ளும் மனிதர்களைச் சாடியது. 


2014.உண்ண சோத்துக்கு வெஞ்சனம் தேடுறது - ஒரு விஷயம் முடிந்தவுடன் அவற்றுக்கான தீர்வைச் சொல்வது. உண்ட பிறகு அதற்கான காய்கறித் தேர்வைச் சொல்வது. 

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

விளையாட்டுப் பெட்டி வேவும் பெயரிட்டு அழைத்தலும்

174. 


2001. மருந்துரைத்துக் கொடுத்தல்/மருந்துரசிக் கொடுத்தல்  - பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு நாளும் சங்கு, பெயர்சொல்லாதது, ஜாதிக்காய், மாசிக்காய், கோமயம் ,என உரசிக் கொடுப்பார்கள் 


2002. பெயரிடுதல் - குழந்தைக்குப் பெயர் இடுதலை வைபவமாகக் கொண்டாடுவார்கள். 


2003. பெயர் அழைத்தல் - குலதெய்வம் கும்பிட்டு கோவிலில் பெயரைச் சொல்லி சாமி சந்நிதியில் மூன்று முறை அழைத்தல். வேளார் சாமி சந்நிதியில் குழந்தையின் பெயரைச் சொல்லி மூன்று முறை உரத்துக் கூப்பிடுவார்.

வியாழன், 30 நவம்பர், 2023

காரைக்குடி முத்தாளம்மன் கோயில்

அம்மனின் முன் ஒரு சூலம் பார்த்திருப்பீர்கள். ஐந்து சூலங்கள் சந்நிதி முன் எலுமிச்சையோடு அலங்கரிக்க ஐந்து அம்மன்களை ஒரே சந்நிதியில் ஒரே கருவறை பீடத்தில் பார்த்திருக்கிறீர்கள். இல்லை என்றால் காரைக்குடிக்கு வாருங்கள். கண் குளிரப் பார்த்து மகிழலாம். காரைக்குடியில் அருளாட்சி செய்துவரும் அம்மன் கோவில்களில் ஒன்று முத்தாளம்மன் கோவில். 

இக்கோவில் காரைக்குடியின் மத்தியில் நகரச் சிவன் கோவிலுக்கு அருகில் முத்து ஊரணியின் கரையில் அமைந்துள்ளது .மிகச் சக்தி வாய்ந்த கோவில் இது. 

செவ்வாய்ப் பொங்கல் எனப்படும் வைகாசிப் பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அன்று புற்றுமண் மாற்றும் நிகழ்வில் அம்மனுக்குச் சிறப்பு  அலங்காரம் நடைபெறும்.

நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்தபோது இந்தத் திருவிழாவின் போதுதான் அம்மன் உருவத்தைப் பார்ப்போம். மற்றைய சமயங்களில் அக்கோயிலின் எல்லாச் சந்நிதிகளிலும்  இப்போது இருப்பது போல் மேற்கூரை இல்லாமல்தான் இருக்கும்.  இப்போது கருவறை மட்டும் நடுவில் திறந்த வெளியாய் இருக்கிறது.  சுற்றிலும் வேல் கொண்ட கம்பித் தடுப்புகள். 

முத்தாரம்மன் என்றும் சொல்கிறார்கள். நாங்கள் முத்தாளம்மன் என்றே கூறிப் பழக்கப்பட்டு விட்டோம். முத்து ஆரம் போல் ஐந்து அம்மன்கள் நெருக்கமாய் அமர்ந்த திருவுருவம் முத்தாளம்மா.

இக்கோயில் பத்மசாலியர், சேணியர் என்னும் சமூகத்தினரால் ( வேளாளர்கள் என்றும் சொல்வார்கள் ) நிர்வகிக்கப்படுகிறது.  


செவ்வாய், 23 மே, 2023

வீடென்று எதனைச் சொல்வீர்.

 வீடென்று எதனைச் சொல்வீர்.


வீடென்று எதனைச் சொல்வீர் என்ற மாலனின் கவிதையை நான் கல்லூரிப் பருவத்தில் படித்திருக்கிறேன். இதுவரை மெய்யாலுமே பணி நிமித்தம் மாற்றலால் 25 வீடுகளை வரை குடி இருந்திருப்போம். காரைக்குடியில் வீட்டிற்கெல்லாம் பெயருண்டு. நான் எங்கள் ஆயா வீடான வேகுப்பட்டியார் வீட்டில்தான் பிறந்தேன். எங்கள் அப்பத்தா வீட்டின் பெயர் ஆவுடையான் செட்டியார் வீடு. கானாடுகாத்தானில் எனக்குத் திருமணமான வீட்டின் பெயர் மல்லுப்பட்டியார் வீடு மேலும் கடியாபட்டி இராமன் செட்டியார் வீடு. வித்யாசமாய் இருக்கிறதல்லவா.

இந்த மூன்று வீடுகளுமே எனக்குப் பிடிக்கும். ஏனெனில் முகப்பு (முன் கோப்பு) முகப்புப் பத்தி, பட்டாலை, வளவு, வளவு அறைகள், ஆல்வீடு, இரண்டாங்கட்டு, மூன்றாங்கட்டு என்ற பலகட்டுக்கள் கொண்டது. மேலும் கட்டுத்துறையும் சில வீடுகளில் சாரட் அல்லது கார் நிறுத்தும் ஷெட்டுக்களும் உண்டு. வீட்டின் வடகிழக்கில் ஒரு கிணறும், தென்மேற்கில் ஒரு கிணறும் உண்டு. மேலும் மழைபொழியும் போதெல்லாம் தண்ணீர்க் கிடாரத்தில் வேடு கட்டிப் பிடித்து வைப்பதால் எந்த நாளும் தண்ணீர்த் தட்டுப்பாடே கிடையாது.

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

போரிடுதலும் புண்யாசனமும்

173.

1991.முழுகாமலிருத்தல்/மாசமாக இருத்தல் – பெண்ணுக்குக் குழந்தை உண்டாகி இருப்பதை இப்படிக் கூறுவார்கள். ( மாத விலக்குப் படும்போது முழுகிக்கினுதான் இருக்கா என்பார்கள். மாசமாக இருக்கும்போது, பிள்ளையாண்டிருக்கும்போது முழுக்கு வராது என்பதால் தலைக்கு முழுக ( நீர் ஊற்றிக் குளிப்பது )  வேண்டாம். அதனால் முழுகாமல் இருக்காள் என்பார்கள்.) 

1992. தீர்த்தமாடுதல் – மாசமான ஐந்தாம் மாதம் புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று தீர்த்தம் ஆடுவார்கள். பொதுவாக இராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடுவது சிறப்பு.

1993. மருந்து குடித்தல் – பிள்ளைப் பேறு சுகமாய் அமைய ஏழாம் மாதம் சில இயற்கை மருத்துப் பொருட்களை இடித்துச் சாறு பிழிந்து கொடுப்பார்கள்.

வியாழன், 8 செப்டம்பர், 2022

த மு எ ச மேதின மாநாடும் ”நற்றமிழ் நங்கை” விருதும்

மேதினத்தில் த மு எ சவின் காரைக்குடி கிளை மாவட்ட மாநாடு நடந்தது. அதில் என்னுடன் காரைக்குடியைச் சேர்ந்த 15 படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கினார்கள். நன்றி த மு எ சங்கம். 






 மே ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினத்தில் காரைக்குடி த மு எ க சங்கத்தின் கிளை மாநாட்டில் தோழர்கள். 

தோழர் திரு. தமிழ்க்கனல் அவர்களின் எழுச்சிமிகு பாடலோடு ஆரம்பித்தது நிகழ்வு. 

தோழர் திரு. நாகநாதன் & தோழர் திரு. சிவானந்தத்தின் வரவேற்பு உரை. 

தோழர் திரு. மோகன் அவர்கள் தலைமையில் விழா மிகச் சிறப்பாக நடந்தது. "நற்றமிழ் நங்கை" என்ற விருது பெற்றேன். நன்றி தோழர்களே

புதன், 7 செப்டம்பர், 2022

குடி அழைப்பும் கல்யாணப் படைப்பும்

172.


1981.பெண் சொல்லிக் கொள்வது – பெண் தன் தாய் வீட்டினர், தாயாதி பங்காளிகளிடம் சொல்லிக் கொள்ள வேண்டும். விரித்திருக்கும் பாயில் பெண் கிழக்கு முகமாக வெற்றிலை பாக்குத் தாம்பாளத்துடன் நின்று ஒவ்வொரு உறவினரிடமும் அதைக் கொடுத்துக் கும்பிட்டு விழுந்து வாங்கிச் சொல்லிக் கொள்ள வேண்டும்.


1982.குடிஅழைப்பு – பெண் சொல்லிக் கொண்டதும் மணமகளை மாப்பிள்ளையின் வலது பக்கம் நடுவீட்டுப் பத்தியில் நிற்கவைத்து விளக்கேற்றி அப்பத்தாள் அழகு ஆலாத்தி எடுத்து விபூதி பூசி அனுப்பி வைக்க வேண்டும். இது சமயம் பெண்ணின் தாயார் பால் பானை கையில் கொண்டு வர வேண்டும்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

சீராட்டுக் கொடுத்தலும் நாணாளைச் சடங்கும்

171.

1971.திருப்பூட்டியவுடன் ஆசீர்வாதம் வாங்குதல் - திருப்பூட்டியவுடன் மணமக்கள் மாமக்காரர்களுடன் வளவிலிருந்து இரண்டாங்கட்டு வரை சென்று அனைவரையும் வணங்கி ஆசீர்வாதம் பெறுதல். பெரியவர்களிடம் முக்கியமாக ஆசீர்வாதம் வாங்க வேண்டும். இரு கரங்களையும் கூப்பி வணங்கியபடி ஜோடியாகச் சென்று வர வேண்டும்.


1972.திருப்பூட்டும் முறை – மேலவட்டகையில் மாப்பிள்ளை மணவறையில் நின்று கீழே நிற்கும் பெண்ணுக்குத் திருப்பூட்டுவார்.  கீழ வட்டகையில் மணப்பெண் மணை மீது நிற்க மணமகன் கீழே நின்று திருப்பூட்டுவார். தெற்கு வட்டகையில் மாப்பிள்ளையும் பெண்ணும் எதிர் எதிராக சரிசமமாக நிற்கத் திருப்பூட்டப்படுகிறது. 

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

சுவாமிக்குப் பணம் முடிதலும் பகவத்யானமும்.

170

1961.சுவாமிக்குப் பணம் முடிதல் – திருமணம் போன்ற சுப நிகழ்வுகளின் போது அவரவர் குலதெய்வங்களுக்கும் பழக்கப்படிப் பணம் முடியும் சாமிகளுக்கும் பணம் எடுத்துப் பேரெழுதி முடிந்து வைக்க வேண்டும். 

 

1962.கோயில் மேளத்துக்கு எழுதி வைத்தல் – திருமணத்துக்கு நாள் குறித்தவுடனேயே அவரவர் சார்ந்த கோயில்களிலோ அல்லது நகரச் சிவன் கோயிலிலோ கோயில் மேளத்துக்கு எழுதி வைக்க வேண்டும்.

 

1963.கோவில் மாலை வாங்குதல் – இரு வீட்டாரின் கோயில்களில் இருந்தும் வைராவி கோயில் மாலை கொண்டு வந்து கொடுக்கும்போது விளக்கேற்றி சங்கு ஊதி மாலையை வாங்கி நடுவீட்டிற்குள் ரப்பர் வாளியில் வைக்க வேண்டும். வயிராவி அல்லது அர்ச்சகருக்கு உரிய பாக்குப் பணம், பணம், வெத்திலை பாக்கு போன்றவற்றை சில்வர் வாளியில் வைத்துக் கொடுக்க வேண்டும்.

செவ்வாய், 19 ஜூலை, 2022

100 நூல்கள்.

 தமுஎச மாநில மாநாட்டில் வழங்கிய நூல்கள் ( மே ஒன்றாம் தேதி ) 

எனது நூல்கள் 21.மற்றவை நண்பர்களின் நூல்கள் மற்றும் சென்னை டிஸ்கவரி & புக் ஃபேர்களில் வாங்கியவை. 


நூல் – ஆசிரியர் – பதிப்பகம் - பக்கம் – ஆண்டு - விலை

1.நீயின்றிப் பிறிதொன்றில்லை – ராஜி வாஞ்சி, வாஞ்சி கோவிந்த், ரத்னா வெங்கட், மதுரா, விஜயலெட்சுமி வெங்கட் – கலையரசி பதிப்பகம் – பக்கம் 128 – ஆண்டு 2019 – விலை ரூ. 150/-

2.தானாய் நிரம்பும் கிணற்றடி - அய்யப்ப மாதவன் -  தமிழ்வனம் பதிப்பகம் – பக்கம் 110 – ஆண்டு 2009 – விலை ரூ. 50/-

3.தலைப்பு இழந்தவை – ஈழவாணி – தகிதா பதிப்பகம் – பக்கம் 60 – ஆண்டு 2010 – விலை ரூ. 40/-

4.இதழில் எழுதிய கவிதைகள் – சங்கவி – அகவொளி பதிப்பகம் – பக்கம் 96 –
2012 – விலை ரூ. 70/-