எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 டிசம்பர், 2018

தமிழ்க்கடல் இராயசொவின் பார்வையில் மகாகவி பாரதி.


தமிழ்க்கடல் இராயசொவின் பார்வையில் மகாகவி பாரதி

தமிழ்க்கடல் திரு இராய சொ அவர்கள் எழுதிய நாம் ஆர்க்கும் குடியல்லோம் நூலானது மகாகவி பாரதியைப் பற்றியும் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்கள் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

பாரதி பாசறை அறக்கட்டளை வெளியிட்டு இருக்கும் இந்நூலில் 14 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வறக்கட்டளை மாணாக்கருக்கு பாரதி நினைவுநாளில் பல்வேறு போட்டிகள் நடத்தி பாரதி பிறந்தநாளில் பரிசுகள் வழங்கி வருகிறது. பாரதி பற்றிய நூல் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதிலும் பெரும்பங்காற்றி வருகிறது.


1948 இல் முதலில் வெளிவந்தநூல் இப்போதுதான் மறுபதிப்பு காண்கிறது. பரலி சு நெல்லையப்பருக்குப் பாரதி எழுதிய கடிதம் போனஸாக இணைக்கப்பட்டிருக்கிறது.

காரைக்குடியில் பாரதியார் தமிழ்க்கடல் இராய சொவுடன் தங்கியிருந்த நாட்களைச் சித்தரிக்கிறது. மேலும் 1917 இல் பல்வேறு பிரமுகர்களுடன் இணைந்து இராயசொ நிறுவிய இந்து மதாபிமான சங்கத்தில் சிலநாட்கள் தங்கி இருந்ததோடு மட்டுமல்ல. அது பற்றிப் பாடல் ஒன்றும் இயற்றி இருக்கிறார். பாரதி சங்கம் பற்றிப் பாடிய பாடல் இது ஒன்றுதான்.

திருநாவரசரின் ( வாகீசர்நாம் ஆர்க்கும் குடியல்லோம் என்பதுடன் பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை என்பதையும், மாணிக்கவாசகரின் ( வாதவூரார் ) மன்னரோடு உறவும் அஞ்சேன் என்பதோடு உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்ற பாரதியின் வரிகளையும் திரு இராயசொ ஒப்புமைப்படுத்தி உள்ள விதம் அருமை.

மனுநீதிச்சோழனின் அருமந்த(ன்ன) அரசாட்சி, தருமன் சூதால் நாடிழந்ததைச் சீச்சீ சிறிய செய்கை செய்தானெனச் சாடியும்நள தமயந்தி கதையும், யானோ அரசன் என்று வீழ்ந்த பாண்டிய மன்னன் பற்றியும் , மதுரை மீனாட்சிப் பெண்ணரசி பற்றியும், நாடு எது என்ற ஆராய்ச்சியும், கும்பகர்ணன் லெக்ஷ்மணனுக்கிடையேயான சண்டையில் இருக்கும் இலக்கிய வார்த்தையாடல்களும் நனி சிறந்தன.

வீட்டுமனின் பிரம்மச்சரியம் அதிரவைத்ததுஆண்டாள் அனுப்பும் மேகவிடு தூது, அலங்கார மாயவரே ஆடீர் ஊசல் என ஊஞ்சலாட்டுவதும், விதுரன் வீட்டுக்குக் கண்ணன் வந்ததும் ஆளுடை நாயகன் என அகமகிழ்வதும் வெகு அழகு.

இந்நூலில் தமிழ்க்கடல் இராயசொ பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும், மகாகவி பாரதியார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும், பரலி சு நெல்லையப்பர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் அவர் நடத்தி வந்த லோகோபகாரி என்ற பத்ரிக்கை பற்றியும்  அவருக்கு பாரதி எழுதிய கடிதமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது வெகு சிறப்பு.

நூல் :- நாம் ஆர்க்கும்  குடியல்லோம்
ஆசிரியர் :- தமிழ்க்கடல் இராயசொ (1948 இல் எழுதிய கட்டுரைகள் )
பதிப்பகம் :- பாரதி பாசறை அறக்கட்டளை

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...