தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காரைக்குடியில் இரண்டாம் ஆண்டாகப் புத்தகத் திருவிழாவைச் சிறப்புற நடத்தியது. அதில் சிக்ரியோடு ( செண்டரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ) இணைந்து சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களுக்கு விஞ்ஞானி ரகுபதி விருது அளிக்கப்பட்டது. எனக்கும் விருது வழங்கிக் கௌரவப்படுத்தினார்கள். இது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். மொத்தப் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 16 பிப்ரவரி, 2021
புதன், 25 நவம்பர், 2020
ஜெகஜ்ஜாலப் புரட்டனும் இரிசி மட்டையும்.
161. 1731. கமறுதல், காந்துதல், காய்வான்/ள்.. - தாளிக்கும் கார வாசனை பட்டுத்தொண்டையைச் செறுமுதல் கமறுதல் எனப்படும். தீயைக் கொறைச்சு வையி. கமறுது என்பார்கள். மிளகாய்த்துவையல் போன்றவற்றை அம்மியில் அரைத்தால் கை சுடுவதுபோல் காந்தல் = எரிச்சல் எடுக்கும். காய்ச்சல் அடிச்சாலும் தொட்டுப் பார்த்தால் உடம்பு சுடுவதைக் காந்துது என்பார்கள். சட்டியில் அடிப்பிடித்ததையும் காந்தல் என்பார்கள். அடுத்தவர் வாழப் பொறுக்காதவரை அவன்/ள் அடுத்தவுகளைப் பார்த்துக் காய்வான்/ள்( கடுப்பாவான்/ள், எரிச்சலாவான்/ள் , கோபப்படுவான்/ள்) என்பார்கள்.
1732*நறுங்கிப் போய் - வயசுக்கேத்த வளர்ச்சி இல்லாமல் இருப்பவரை அது நறுங்கிப் போய்க் கிடக்கும் என்பார்கள்.
1733*பாய்ச்சுருட்டு - மெத்தைச் சுருட்டு பாய்ச்சுருட்டு . நான்கைந்து பாய்களை ஒன்றாக அடுக்கிச் சுருட்டிக்கட்டி வைப்பதுதான் பாய்ச்சுருட்டு.
1734*சிலாகை - மரச்சாமான் பெயர்ந்து வந்தால் சிலாகை வந்திருச்சு என்பார்கள். முள்போல் குத்திவிடும் என்பதாலும் சாப்பாட்டில் விழுந்து விடலாம் என்பதாலும் அது பயன்பாட்டுக்கு ஆகாது என்று அர்த்தம்.
1735*வரட்டுவரட்டுன்னு - வரளித்தனமாக இருப்பது. வரட்டு என்று வெறிச்சோடி இருப்பது. இருப்பதை எல்லாம் சுரண்டி வரட்டி எடுப்பது.
வியாழன், 22 அக்டோபர், 2020
பிள்ளை எடுக்கிக் கொடுக்கும் துண்டும் சிட்டிச்சாமான்களும்.
156. 1641. தடுக்கு. இவை சிகரெட் அட்டைப்பெட்டிகளினால் செய்யப்பட்டவை. கீழே இருப்பது ஓலைத் தடுக்கு. பட்டி தைப்பது இங்கே ஸ்பெஷல்.
1642. சாமி எழுந்தருளப் பண்ணுதல். கானாடு வள்ளிமயில் அவர்கள் வீட்டில் சஷ்டியப்த பூர்த்திக்காக சிவனையும் அம்பாளையும் எழுந்தருளப் பண்ணியிருந்தார்கள். ஓம் சிவோஹம்.
புதன், 17 ஜூன், 2020
வெள்ளி, 12 ஜூன், 2020
கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.
1571. சுவாமிக்குக் காசு முடிந்து வைத்தல் - திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகளின் போது ஊரில் இருக்கும் எல்லாச் சாமிக்கும் நிகழ்வு நல்லபடியாக நிறைவேற வேண்டுமென்று காசு முடிந்து வைப்பார்கள். இது அந்தக்காலத்தில் நாலணா, எட்டணா என்ற அளவில் இருந்தது. சோமண்ணன் என் அம்மாவிடம் இந்தப் பணத்தைப் பெற்று ( விட்டுப் போன சாமிகளையும் அவரே சொல்லுவார் – நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவில், கீழ ஊரணிப் பிள்ளையார் கோவில், முத்தாளம்மா, முத்துமாரி, அத்திமரத்துக்காளி என்று இன்னும் பல சாமிகள் உண்டு ) கோவில்களில் செலுத்தி விடுவார்.
1572. படிஅளத்தல் :- உக்கிராணத்துக்குப் பொருட்களைக் கொடுக்கும் முன் தலைமைச் சமையல்காரரிடம் அரிசி அளந்து கொடுப்பார்கள். வீட்டின் பெரியவர் தலைப்பாகை கட்டிச் சாமி வீட்டில் எதிரில் தடுக்குப் போட்டு அமர்ந்து இருப்பார். அவர் முன் அரிசி நிறைந்த பாத்திரமும் மரக்கால் அல்லது படியும் இருக்கும். தலைமைச் சமையற்காரர் வீட்டுப் பெரியவரிடம் ஒரு பெரிய அண்டாவில் அரிசி அளந்து போடச் சொல்லி வாங்கிக் கொள்வார். சாமியைக் கும்பிட்டு விட்டு வீட்டுப் பெரியவரும் ஒரு கைப்பிடி முதலில் போட்டுவிட்டு அதன்பின் மரக்காலிலோ படியிலோ அரிசி அளந்து அண்டாவில் போடுவார்.
திங்கள், 1 ஜூன், 2020
தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.
1561. கோவில் மாலை வருதல் :- கோவிலில் பாக்கு வைத்து மணமக்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்தபின் திருமணத்தன்று முதல்நாள் கோவில் மாலை வரும். இதை சங்கு ஊதி வாங்கி வைத்துக் கொண்டு வந்த அர்ச்சகருக்கு ( குலதெய்வக் கோவிலில் இருந்து கொண்டு வரும் வேளாருக்கும் ) சில்வர் வாளியில் பழம் தேங்காய் பிஸ்கட் பணம் வைத்துக் கொடுப்பார்கள்.
1562. நிச்சயம் செய்தல் :- திருமணத்தன்று முதல்நாள் மாப்பிள்ளை வீட்டிலோ பெண் வீட்டிலோ கல்யாணத்தைப் பேசி முடித்து நிச்சயம் செய்து கொள்வார்கள். காலைப் பலகாரம் பேசி முடித்துக் கொள்ளும் வீட்டில் நடைபெறும். இதற்கு மாப்பிள்ளை வீட்டார் பதினொன்று பதினாறு என்ற வகையில் சீர்வரிசை எடுத்துச் செல்வார்கள். அண்டாவில் மஞ்சள் தடவிய தேங்காய் 31, வாழைப்பழச் சீப்பு ( மலைப்பழம் அல்லது செவ்வாழை ) 51 அல்லது 101, சாத்துக்குடி - 16, ஆரஞ்சு - 16, ஆப்பிள்- 16, திராட்சை - 2 கிலோ, மாதுளை - 16, எலுமிச்சை - 21, பேரீச்சம்பழம் - பெரிய பாக்கெட், கல்கண்டு - 1 கிலோ, வெளிநாட்டு பிஸ்கட் - 1 டின் , வேஃபர்ஸ் - 1 டின், வெளிநாட்டுச் சாக்லெட் - 1 டின், வெற்றிலை - 5 கவுளி, பாக்கு - 1 கிலோ, மல்லிகைப் பூ - 3 பந்து, இவை வைக்க சில்வர் அண்டா, பேஸின், வாளிகள் தூக்குச் சட்டிகள் எடுத்துச் சென்று பரப்புவார்கள். பெண் வீட்டில் இந்த முறையில் கொஞ்சம் திருப்பித் தருவார்கள்.
1563. முகூர்த்தம் வைத்தல்/ கழுத்துருவுக்குப் பொன் தட்டுதல்/ கொடுத்தல் :- கழுத்துருவைப் பெண் வீட்டில் முன்பே செய்து வைத்திருப்பார்கள். அதனால் மாப்பிள்ளை வீட்டில் பொற்கொல்லரை அழைத்துச் சென்று புதிதாகப் பவுனைக் கொடுத்துத் தட்டித்தரச் சொல்லி அதைக் கழுத்துரு செய்யும்போது சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள். அந்தக்காலத்தில் ஏழுநாள் திருமணம் என்பதால் பொன் கொடுத்துத் தட்டிச் சேர்த்துக் கொள்ளச் சொல்லும் பழக்கம் இருந்தது. இந்த நாளிலும் அது ஒரு நாள் திருமணமாகச் சுருங்கிய பின்னும் இந்த முறைகளைப் பின்பற்றுகிறோம்.
வியாழன், 28 மே, 2020
கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.
1552. திருமணம் பேசி முடித்துக் கொள்ளுதல்/கெட்டி பண்ணிக் கொள்ளுதல் - பெண்பார்த்து பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்தபின்பு இருவீட்டுப் பங்களாளிகளையும் கூட்டித் திருமணம் பேசி முடித்துக் கொள்வார்கள். இதை கெட்டி பண்ணிக் கொள்ளுதல் என்றும் சொல்வதுண்டு. ஜோசியரிடம் கேட்டு நாளை முடிவு செய்து அறிவிப்பதும் உண்டு.
வெள்ளி, 29 நவம்பர், 2019
ஞாயிறு, 29 செப்டம்பர், 2019
காரைக்குடிச் சொல்வழக்கு. பொன்னுளியும் விராகனும்.
வியாழன், 15 ஆகஸ்ட், 2019
காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.
1302. பீம சாந்தி - 55 ஆவது பிறந்ததினம்.
1303. சாந்திக் கல்யாணம்/உக்ர ரத சாந்தி/சஷ்டியப்த பூர்த்தி - 60 ஆம் கல்யாணம். ( 60 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் சாந்திக்கல்யாணம் என்று கொண்டாடப்படுகிறது ). கணபதி பூஜை, ஹோமம், ஆயுஷ் ஹோமம், நவக்ரஹ சாந்தி ஆகியன செய்து உற்றம் சுற்றம் அனைவரையும் அழைத்து ஹோமத்தில் வைக்கப்பட்ட கும்ப நீர் சொரிந்து அபிஷேகம் செய்து கொள்வார்கள். ( 59 ஆம் பிறந்த நாளிலும் திருக்கடையூரில் ஆயுஷ் ஹோமம் செய்து கொள்வார்கள் )
1304. பீமரத சாந்தி - 70 ஆவது பிறந்த தினம்.
1305. விஜய ரத சாந்தி - 75 ஆவது பிறந்த தினம்.
1306. சதாபிஷேகம் - 80 ஆவது பிறந்த நாள் . ஒருவர் தன் வாழ்நாளில் ஆயிரம்பிறை கண்ட நாளைக் கொண்டாட சதாபிஷேகம் செய்து கொள்வார்கள்.
வியாழன், 11 ஜூலை, 2019
காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்
ஞாயிறு, 7 ஜூலை, 2019
காரைக்குடிச் சொல்வழக்கு. சிலேட்டு விளக்கும் சாரட்டும்.
சேந்தனியார் வீட்டு ராமசாமி அண்ணன் அவர்களின் மகன்தான் ( பெரிய கருப்பன் அவர்கள் ) காரைக்குடியில் தமிழ்க் கல்லூரியை நிறுவியவர். இன்றும் அது மாத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.
வள்ளல் அழகப்பரின் அண்ணன் மகள் வள்ளியாச்சியின் வீட்டில் நான்காம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு நடைபெற்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மேங்கோப்பும் ஷாண்ட்லியர்களும் மிக அழகு.
வியாழன், 4 ஜூலை, 2019
காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.
1257.குரிச்சி - சாய்வு நாற்காலி.இது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஓய்வெடுக்கப் பயன்படுத்துவது. ஈஸி சேர் போன்ற அமைப்பில் இருக்கும். மரத்தால் ஆனது. கால் வைக்க இருபுறமும் இருக்கும் கட்டைகளைப் பிரித்துவிட்டுக் காலை நீட்டித் தூங்கலாம். இதன் உடல் பகுதி பிரம்பு அல்லது பட்டை ப்ளாஸ்டிக்கால் பின்னப்பட்டிருக்கும். இதன் மேற்பகுதி/முழுப்பகுதியும் யானையின் முகபடாம் மாதிரி வெல்வெட் துணியால் போர்த்தப்பட்டிருக்கும்.
1258.கவுளி சொல்லுதல் - பல்லி தட்டும் சத்தம். இது தட்டும் திசைக்கேற்பப் பலன் கொள்வார்கள்.
சனி, 29 ஜூன், 2019
காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.
வகைப்பழம் வாங்குவார்கள். அண்டா, வாளி, பேஸின்,தூக்குச்சட்டி, தட்டுகள், தாம்பாளங்களில் 9, 11, 16 என்று சீர் தட்டு கொண்டு வருவார்கள். வாழைப்பழம் ரஸ்தாளி அல்லது செவ்வாழையாக இருக்கும். இது 101 அல்லது 51 என்ற கணக்கில் இருக்கும். மஞ்சள் பூசிய தேங்காய் 11, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், மாதுளை, சாத்துக்குடி ஆகியன 21 இருக்கும். எலுமிச்சை 16 இருக்கும். வெற்றிலை பாக்கு ஒரு தட்டிலும், பூப்பந்து ஒரு தட்டிலும், பேரீச்சம்பழம் ஒரு தட்டிலும், ரொட்டி/வேஃபர்ஸ் ஒரு வாளியிலும் , மிட்டாய் ( சாக்லேட்/ஃபாரின் சாக்லேட் ) ஒரு தூக்குச் சட்டியில் இருக்கும். கல்கண்டு ஒரு தூக்குச் சட்டியில் இருக்கும். இதில் சில முறைகளை அவர்கள் நமக்குத் திருப்பித் தருவார்கள்.
செவ்வாய், 25 ஜூன், 2019
கண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.
புதன், 29 மே, 2019
காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.
1221. நட ஒட - நடை உடை என்பதைப் பேச்சுவழக்கில் இப்படிச் சொல்லுவார்கள்.
1222. பொறகாடி - பின்னாடி, பின்னால், அதன் பிறகு, ஒருவருக்குப் பின்னால் பேசுதல், பின்னால் நடப்பதைக் குறித்தல்.
1223. சிஞ்சமிருதம் - ஒருவருக்கு /அவர் சொல்வதற்கு ஆமாம் சாமி போடுதல், ஜால்ரா அடித்தல். காக்கா பிடித்தல், ஐஸ் வைத்தல். சோப்புப் போடுதல்.
1224. தோது - சரிக்குச் சரி. தோது என்றால் பொதுவாக சீர் செனத்தியில் வரும். பெண்ணுக்கு என்ன தோது கொடுப்பார்கள் என்றால் மூணும் ஒண்ணும், ஐஞ்சும் ரெண்டும், பத்தும் மூணும் எனக் குறிப்பார்கள். சிலர் கோடிக்கணக்கில் கூட கொடுப்பார்கள். இதில் முதலில் சொல்வது தொகை, பின்னே சொல்வது நகை. மூன்று லட்சம் ஒரு வைர நகை, ஐந்து லட்சம், இரண்டு வைர நகை, பத்து லட்சம், மூன்று வைர நகை. ( வரதட்சணைதான். - இப்ப இதெல்லாம் கிடையாது. பெண் வீட்டில் கொடுப்பதை பெண் அல்லது பையன் & பெண் பெயரிலேயே போட்டு விடுகிறார்கள், போட்டு விடுகிறோம் . நகை பெண்ணுக்குக் கொடுப்பது, அவள் போட்டுக்கொள்வது என்பதால் அதிலும் இப்போது டிமாண்ட் கிடையாது. போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி என இருக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். )
ஞாயிறு, 19 மே, 2019
காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.
திங்கள், 22 ஏப்ரல், 2019
காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.
1182. ஒறங்க - தூங்க.
1183. குத்தாலந்துண்டு - பெண்கள் குளிக்கும்போது ( முடிந்துகொண்டு ) உடுத்தும் துண்டு. இருபுறமும் கரைகொண்டு சிறிது கெட்டியான பருத்தித் துணியில் அடர் வெளிர் நிறங்களில் இருக்கும்.
1184. மோந்தூத்தி - நீரை முகர்ந்து ஊத்தி.
1185. ரொட்டிமுட்டாய் -பிஸ்கட் , சாக்லெட் , பிஸ்கட்டை ரொட்டி என்றும் சாக்லேட்டை மிட்டாய் என்றும் கூறுவார்கள்.
வியாழன், 28 மார்ச், 2019
காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.
1162. முட்டைச்சுவர் - சுவர் அமைக்கும்போது காரையுடன் முட்டையின் வெள்ளைக்கருவையும் கருப்பட்டியையும் சேர்த்து அரைத்துப் பூசுவார்கள். அதனால் அவை பாலீஷ் போட்டதுபோல் இருக்கும் . வெள்ளை ( சுண்ணாம்பு ) அடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
1163. அப்பைக்கி அப்ப - அப்போதைக்கு அப்போதே.
1164. சேயகொள்ள - திருமணம் செய்யக் கொள்ள, ஒருவேலையைச் செய்வது குறித்து மற்றும் உறவுகளுக்குள் பந்தம் கொள்வது.
1165. பொய்த்தாரேன், போயாறேன், வந்தாரோம் - பொய்த்தாரேன் - போய் வருகிறேன் , போயாறேன் - இதுவும் போய் வருகிறேன் என்று சொல்வதுதான். வந்தாரோம் - வந்துவிடுகிறோம் என உறுதி அளிப்பது.
1166. ஒருதடியா - ஒரு வழியாக, ஒரே தரமாக,
1167.சத்த - கொஞ்ச நேரம்.
1168. கடுசு - கடுமை கொண்டவரைக் குறிப்பிடுவது. பொல்லாதவர்.
புதன், 19 டிசம்பர், 2018
காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.
1142. பசுமடம் – கோசாலை, தினப்படி பூஜைக்கு கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பால் வழங்கும் பசுக்களைப் போஷித்துப் பராமரிக்கும் இடம். நகரத்தார் பரிபாலனம் செய்யும் ஒவ்வொரு கோவிலுக்கும் அநேகமாக பசுமடம் இருக்கும். இப்பசுமடத்தில் முதிர்ந்த மாடுகளையும் பராமரிப்பார்கள்.
1143. சம்போ (பூஜை) – காசியில் சிவனுக்கு செய்யப்படும் பூஜை சம்போ பூஜை. காசி விஸ்வநாதர் கோயிலில் ஆறுகாலமும் நடக்கும் பூஜை நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திலிருந்து கூடைகூடையாய்ப் பூக்கள், அபிஷேகதிரவியங்கள் ஆகியன கொண்டு செல்லப்பட்டு நடத்தப்படும். சத்திரத்திலிருந்து ஆறு காலமும் மேள தாளத்துடன் தலைமேல் பித்தளைப் பூக்குடலைகளையும் அபிஷேகப் பொருட்களையும் சுமந்து பணியாளர்கள் முன்னே செல்ல அவர்களுடன் சத்திரத்தில் தங்கி இருக்கும் நகரத்தார் மக்கள் கோவிலுக்குச் சென்று அபிஷேகத்தையும் அலங்காரத்தையும் தீபாராதனையையும் கருவறையின் படியில் அமர்ந்து தரிசிக்கலாம். இந்தப் பூஜை ஊர்வலத்த்தும் பூஜைக்கும் சம்போ பூஜை என்று பெயர்.
1144. மகேஸ்வர பூஜை – சிவனுக்கு செய்யும் பூஜை. திருமண சமயங்களில் வேண்டிக்கொண்டவர்கள் இப்பூஜையைச் செய்வார்கள். ஏழு பானைகளில் பொங்கலிட்டுப் படைப்பார்கள். மிக விமரிசையான பூஜை இது.
1145. கார்த்திகை வேல் பூஜை:- கார்த்திகை மாதத்துக்காரர்கள் ( விரதமிருப்பவர்கள் ) கார்த்திகை மாதம் ஒவ்வொரு சோமவாரமும் முருகனின் தெண்டாயுதம் வேலுக்கு அபிஷேகம் செய்து மாவிளக்கு வைத்து அர்ச்சனை செய்து ஏழுவகைக்காய்கறிகளுடன் சர்க்கரைப் பொங்கல் அன்னம் படைத்து பூஜித்து ஊரோடு உணவிட்டு உண்பார்கள். சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம், அறுபடைக் கவசம், ஸ்கந்த குரு கவசம், காவடிப் பாடல்கள், வேல் மாறல், வேல் வகுப்பு, பாமாலைப் பாடல்கள் படிப்பார்கள். இதற்கு கார்த்திகை வேல் பூஜை என்று பெயர்.






