எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 7 ஜூலை, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. சிலேட்டு விளக்கும் சாரட்டும்.

இவர்கள் எங்கள் பெரியப்பா வெ. தெ. மாணிக்கனார் அவர்கள். இவர்கள் 1276*ஆவுடையான் செட்டியார் வீட்டைச் சேர்ந்தவர்கள். மாபெரும் தமிழறிஞர். பச்சையப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவரது மாமனார் 1277* சேந்தனியார் வீட்டு ராமசாமி செட்டியார் அவர்கள். 1278* செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களுடன் இருவரும் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம்.

சேந்தனியார் வீட்டு ராமசாமி அண்ணன் அவர்களின் மகன்தான் ( பெரிய கருப்பன் அவர்கள் ) காரைக்குடியில் தமிழ்க் கல்லூரியை நிறுவியவர். இன்றும் அது மாத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. 


வள்ளல் அழகப்பரின் அண்ணன் மகள் வள்ளியாச்சியின் வீட்டில் நான்காம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு நடைபெற்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மேங்கோப்பும் ஷாண்ட்லியர்களும் மிக அழகு.



கானாடுகாத்தான் கவுன்சிலர் வள்ளி ஆச்சியின் வீடு. தூண்களுக்கும் (அழுக்காகாமல் இருக்க) உடைகள். !



அவர்கள் வீட்டுத் தூண்களும் நிலையும்.


இதுதான் 1279* சிலேட்டு விளக்கு. ஏன் அப்படிப் பேர் வந்தது என்று தெரியாது. ஆனால் லாண்டர்ன் போல் இது அந்தக் காலத்தில் மாப்பிள்ளை அழைக்கும்போதும் ( விடிகாலையில் ) பெண் அழைக்கும்போதும் ( முன்னிரவில் ) பயன்பட்டிருக்கு. மேலும் விளையாட்டிப் பொட்டி வேவு, மாம வேவு , திருப்பூட்டிய வேவு, பெண்ணழைத்த வேவு ஆகியவற்றிலும் வேவு இறக்கும்போது வளவு நடையில் நடுவீட்டுக் கோலமிட்ட இடத்தில் இவ்விளக்கை ஏற்றி வைப்பார்கள். இங்கேயிருந்துதான் வேவு இறக்கி சாமி வீட்டில் கொண்டுபோய் வைத்துக் கும்பிடுவார்கள்.

இவ்விளக்கின் உள்ளே ஸ்பிரிங்கும் மெழுகுவர்த்தியும் இருக்கும். வேவு இறக்குபவர்கள் ஆண்மக்களாயிருந்தால் தலைப்பா கட்டிக் கொள்வார்கள்.

இது வெள்ளி சிலேட்டு விளக்கு. குத்து விளக்கு ஸ்டைலிலும் (மேலே முட்டைக்கிளாஸ் போட்டதுபோல் கிளாஸ் மாட்டிய ) சிலேட்டு விளக்குகளும் உண்டு.

சேஃப் எனப்படும் பெட்டகக் கதவுகள் போல் உள்ளே ரகசிய லாக் வைத்த அலமாரி. லாக்கைத் தடவிப் பிடித்து விடுவிக்க வேண்டும். இதைவிட இன்னும் சிற்ப வேலைப்பாடுகளும் ரகசிய லாக்கர்களும் உள்ள அலமாரிகளும் அந்தக் காலத்தில் செய்யப்பட்டுள்ளன.


1280* கல்யாணக் கொட்டகை. பொதுவாக காரைக்குடியில் பந்தல் என்று கூறுவது இல்லை.

கடியாபட்டியில் உள்ள உறவினர் வீட்டின் முற்றம்.


காரைக்குடியில் அம்மா வீட்டின் அருகே உள்ள குறட்டியார் வீடு.


மாத்தூரில் கொங்கணச் சித்தரின் வாழ்க்கை வரலாறு , ஐநூற்றீசுவரர் கோவிலின் முன் மண்டப விதானத்தில்.

ஈசன் வந்து நீர் கேட்க முனிவர் எடுக்கச் செல்லும்போது ஈசன் முனிவர் உருவாக்கிய தங்கம் தயாரிக்க உதவும் கரைசலைக் கொட்டிவிடுகிறார்.


நிலையான மெய்ப்பொருள் நாடி பொன் தயாரித்தலை முனிவர் கைவிடுகிறார். இதை முன் இடுகைகளில் விலாவாரியாக எழுதி உள்ளேன்.


உறவினர் திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பில் மாப்பிள்ளை வந்த சாரட். !

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.
56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள்ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும்இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.

59. இலை விருந்துஇதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்குஅந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்

61. காரைக்குடிச் சொல்வழக்குசுவீகாரம்திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்

65. காரைக்குடிச் சொல்வழக்குகைப்பொட்டியும் பொட்டியடியும்

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்குகூடைகொட்டான் முடையலாம் வாங்க

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும்அந்தக்காலஎழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...