எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 ஜூலை, 2019

கூகுள் ஹிந்தியும் நான்கு மொழிப்பாடமும்.

2241. நமக்கும் ஹிந்திக்கும் எல்லைத்தகராறு எல்லாம் இல்லை. ப்ரவேஷிகாவில் நெய்வேலியில் முதலாவதாகவும் தக்ஷின் பாரத் ஹிந்தி ப்ரச்சார் சபாவில் மூன்றாவதாகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். டில்லியில் நான்கு வருடம் வாழ்ந்திருக்கிறேன். கட்பட் ஹிந்தி பஞ்சாபி ஸ்டைலில் கூட பேசுவேன் :)

#கூகுளில் தமிழில் ஒன்றைத் தேடும்போது கூட ஹிந்தி துருத்திக் கொண்டிருப்பதுதான் கடுப்பேத்துறாற் மைலார்ட்.

2242. நானெல்லாம் இந்தில ஒன்னு ரெண்டு கத்துக்கிட்டதே இந்தப் பாட்டிலேருந்துதான். :) சொல்லப்போனா சத்தீஸ் வரை கத்துக்கிட்டுருக்கேன்.

#EK DO THEEN CHAR PAANCH CHEY SAATH AAT NOU THAS KIYAARAH BAARAH THERAH.. :) :) :)2243. என் பெரிய மகன் டி டி ஈ ஏ வில் படித்தபோது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்க்ருதம் நான்கும் இருந்தது. சொல்லப்போனால் என் கணவரும் சின்ன மகனும் ஹிந்திதான் எடுத்துப் படிச்சிருக்காங்க. ஆனாலும் எல்லாத் தமிழ் நூல்களையும் வாசிக்கவும் தமிழில் எழுதவும் முடியும். பள்ளிகளில் தமிழ் ஆங்கிலத்துடன் ஹிந்தியையும் மற்ற மொழிகளையும் விருப்பப்பாடமாக எடுத்துப் படிக்கும் வசதி வேண்டும். கலை அறிவியல் கல்லூரிகளிலும் முன்பு போல் மொழிப்பாடங்கள் இடம்பெறவேண்டும். இல்லாவிட்டால் ஆங்கிலம் தவிர மற்ற தேசிய/பிராந்திய மொழிகள் நிச்சயம் மெல்ல அல்ல சீக்கிரமே சாகும்.

2244. மிட்நைட்டில் கணவர் ஊரிலிருந்து வந்து தன் லக்கேஜுகளைப் பிரித்துத் துவைக்கும் துணிகளை எல்லாம் வாஷிங் பேஸ்கட்டில் போட்டார். லுங்கி மாற்றினார்.  எட்டரை மணிக்கே தோசை சாப்பிட்டு முகநூல் கடமை எல்லாம் ஆற்றிவிட்டுத் தன்னையறியாமல் கண் அசந்திருந்தேன்.  இருமுறை காலிங் பெல் அடித்தும் எழாததால் போனில் அழைத்தார். அடித்துப் பிடித்து எழுந்து கதவைத் திறந்துவிட்டுத் திரும்ப வந்து,  விட்ட பொஸிஷனில் படுத்துக் கொண்டேன்.

“ என்ன வெளியே போய் சாப்பிட்டுட்டு வந்துரவா “ முகம் சிறிது சுணங்கி இருந்தது.

வாரம் ஒரு முறையாவது அந்த பியரை அருந்தாவிட்டால்தான் என்ன அந்தந்த ஊரில் இருக்கும் ஹோட்டல் மூடினால்தான் கிளம்புவது என்ற பழக்கம் ஏன் எனக் கோபத்தில் இருந்த நான் திடீரென கேட்டேன்.

“ஆமா இப்ப ஹோட்டல் இருக்குமா. “

கடுப்பான அவர் “ ஆமா பஸ்ஸ்டாண்டுக்கிட்ட இருக்கும் . ஏன் கேக்குறே. “

“சரி வாங்க போகலாம். ரெண்டு பேரும் போய் சாப்பிட்டுட்டு வரலாம். “

“நீ இன்னும் சாப்பிடலையா” ஜெர்க்கானார்.

”அதெல்லாம் ஆச்சு. எட்டரைக்கே . மூணு சட்னி செஞ்சேன். சாம்பாரும் இருக்கு. நீங்க வெளியே சாப்பிடும்போது கம்பெனி கொடுக்கலாமேன்னுதான்.
அதுவும் நான் மிட்நைட்ல பரோட்டாக் கடைல எல்லாம் சாப்பிட்டதேயில்லை “ என ஜொள்ள.

”ஹாஹாஹா” என சிரித்தார் அவர்.

சரி என எழுந்து ரோஸ்டைப் போட தீர்ந்தது கோபம்.

என்ன சொல்ல வர்றேன்னா..

#நண்பர்களுக்கிடையேயும்_புத்திசாலித்தனமான_தாக்குதலும்_எதிர்த்தாக்குதலும்கூட_ரசிக்கப்படவேண்டியவையே :)

2245. இது ஆனந்தம் விளையாடும் வீடு

2246. DHO DHIL MIL RAHEY HAIN MAGAR CHUP KE CHUP KE.

2247. ஜாண் ஏறினா முழம் சறுக்குதே :)
#all_in_the_game

2248. சிறைப்பட்டுக் கிடக்கும் குண்டலினி..

2249. DIVINE FAMILY

2250. சிரிக்கிறாங்களா அழுவுறாங்களா.

2251. சிரிப்பு வருது சிரிப்பு வருது. சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது

2252. நாகரீகக் கோமாளிகள்.

2253. மல்லிகைப்பூ, புடவை வேஷ்டியில் எவ்வளவு அழகா இருக்காங்க. அதுவும் லெக்ஷ்மி வாய் திறக்காமல் ஹம்மிங்கிலேயே கிறங்கடிக்கிறாங்க..

#வீணை அது பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு.

2254. மதுரை தானம் அறக்கட்டளையின் , நமது மண்வாசம் இதழின் ஐந்தாம் ஆண்டு ஆரம்ப விழாவில் எனது பத்தாவது நூலான மஞ்சளும் குங்குமமும் வெளியிடப்பட்டது :) பெண்கள் சுய உதவிக் குழுக்களின் தலைவி திருமதி சாந்தி மதுரேசன் அவர்கள் வெளியிட பிரபல வழக்கறிஞர் திருமதி செல்வ கோமதி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். <3 amp="" nbsp="" p="">
2255. நமக்கு யாரைப் பாத்தாலும் வீர சிவாஜிதான் :) யாரோ கன்னடத்து வீரர் போலிருக்கு


2256. உங்கள் அரிய சேவைக்கு வாழ்த்துக்கள் ராஜா

2257. இத எதுக்கு டேபிள் வைச்சு மறைச்சுருக்காங்க. பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்கலாம்தானே . சரியாப் படிக்கக் கூட முடியல.

2258. பெங்களூரு ஏர்ப்போர்ட். waste management. :D

2259. எண்ணமும் எழுத்தும் என்ற இலக்கியக் குழுமத்தில் இருந்தேன். இலக்கியக் குழுமங்களில் கிண்டல்/நையாண்டியைத் தாங்கும், திரும்ப மறுகேலியால் உந்தித் தள்ளும் உறுதியான உள்ளம் படைத்தோர் மட்டுமே இருக்க இயலும். வாழ்த்துக்கள் பாட்டா ( மணி சார் ) மது, துளசி , உஷா. <3 p="">
அதில் ஜெமோவும் இருந்தார். அக்குழுமம் இன்றும் செயல்படும் என நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் என்னால் அக்குழுவில் நீடிக்க இயலவில்லை. அக்குழுவுக்கும் என்னை நீட்டிக்கப் பிடிக்கவில்லை. !!! யார் சேர்த்தார்கள் என்பது தெரியாதது போல யார் நீக்கினார்கள் என்பதும் தெரியவில்லை.!!! நிற்க.

நுகர்வோர் தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்பது என்பது நியாயமே.

அக்குழுமத்திலேயே ஓரளவு எனக்குப் பிடித்த (இலக்கியவாதியாக என்று மட்டும் இல்லை, தனி மனித உரிமையின் பாற்பட்டும் ) ஜெமோ தாக்கப்பட்டது குறித்து எனது கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

2260. நண்பர்களுக்குள் வாதம் விவாதம் இருக்கலாம். வேண்டவே வேண்டாமென்று தூக்கிப் போடும் என் பழக்கம் என்னோடு ஒழியட்டும். :(


டிஸ்கி :-4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்113. கூகுள் ஹிந்தியும் நான்கு மொழிப்பாடமும். 

2 கருத்துகள்:

 1. இன்றைய வித்தியாச படங்கள் ரசிக்க வைத்தன ...

  midnight கடைக்கு ...ஆஹா செம்ம ட்விஸ்ட்

  பதிலளிநீக்கு
 2. நன்றி அனு

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...