எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

வாராக் கடன்களும் பாலைக் காதலும்.

2041. பார்க்கப் போனா நான் மட்டும்தான் தமிழ்ல ப்லாக் எழுதிட்டு இருக்கேன்போல. அதுவும் இண்டிப்லாகர்ல தினம் சப்மிட் பண்ணிட்டும் இருக்கேன். வோட்டுப் போட்டு ஹோம்பேஜில் போட்டு நெதம் கௌரவிக்கிறாங்களே

2042. என் அன்பு வேண்டுகோளை ஏற்று என் ப்லாகுக்காக எழுதித்தந்த லல்லி செல்லத்துக்கு தாங்க்ஸ். நல்ல விஷயங்களைச் சொல்ல & நெகிழ்வுகளைப் பகிர்ந்துக்க, நிறைய எழுத விருப்பமிருப்பவர்கள் என் இன்பாக்ஸுக்கு அனுப்பலாம்.

2043. 98 இல் டெல்லியில் இருந்தோம். பசங்க, அப்பா அம்மாவுடன் சிட்டி டூர்.
இந்திரா காந்தி அம்மையார் சுடப்பட்ட இடத்தை அப்பாவும் அம்மாவும் மிரட்சியா பார்த்து ( கண்ணாடிக்குள் கீழ் ரோஜா பதிக்கப்பட்டுள்ளது ) தொட்டுக் கும்பிட்டாங்க.அப்பாவுக்கு மனசு ஆறவேயில்லை. இப்பிடிப் பண்ணிட்டாங்களே என்று கலங்கினார். அப்பாவுக்கு இந்திராம்மா மேலே பயங்கர அபிமானம்.நம்ம வீட்டு இந்திராகாந்திஎன்று என்னைச் செல்லமாக அழைத்துக் கொள்வார் :)

மகாத்மா சமாதிக்கு ( ராஜ்காட் ) சென்றபோது கண்கள் கலங்கி இருவரும் சாஷ்டாங்கமாக விழுந்தே கும்பிட்டார்கள். கொஞ்சம் திகைத்துப் பின்வாங்கி மீண்டேன். நமக்குத்தான் கூட்டத்தினர் பார்க்கின்றார்களே என்ற அநாவசியக் கூச்சம் . அவர்களுக்கு அவர் தெய்வம். அப்பா அம்மா பிறந்ததே 1945, 1946 தான் எனும் போதிலும்.

2044. மதிப்புமிகு வலைப்பதிவ நண்பர் தி. தமிழ் இளங்கோ அவர்கள் திருச்சியில் இன்று காலை 9.15 க்கு மூச்சுத்திணறல் காரணமாக இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

2045. ESCAPE PLAN - 1 பார்த்தேன். ரொம்ப பிடிச்சிது. 2 & 3 யாரும் பார்த்தீங்களா நல்லா இருக்கா. 3 ல எல்லாம் புதுமுகமா இருக்கு. ஸ்டாலன் இல்லாட்டி பார்க்க வேணாம்.

2046. Dahlias , daisys with Zinnia . a triangle flower bed.


2047. பளிச் பளிச்சென்று


2048. To be precise.. Herge said ,Tintin was aimed at "all young people aged from seven to seventy-seven " and I think we can extend that from Nine to Ninety !

From Belgium to Bengaluru our beloved Tintin arrives at the age of 90. Billians of blue blistering barnacles !!. Happy Birthday Tintin


2049. Only Five more years.. we have to withstand dengue bite .. If we are alive

2050. Hahaha. Police studio

2051. ஏகாந்தம்.

2052. பாங்க் ஆஃப் மதுராவில் இருந்து ஐசிஐசிஐ வங்கியாக மெர்ஜ் ஆனதில் இருந்து தொடங்கியது பாங்க் ஆஃப் மதுரா முன்னாள் ஊழியர்களின் வாழ்வின் சீரழிவு.அது 2000 ஆம் ஆண்டு. ஐயா எல்லார் வாழ்விலும் ஏற்றி வைத்த விளக்கை பேரன் அழித்து ஒழித்தார்.

செக்யூரிட்டி ( derivatives ) ட்ரேடிங் செய்து பாங்கை கோடிக்கணக்கில் நஷ்டப்படுத்திய புதிய எம் பி ஏக்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்தும். இன்சூரன்ஸ் பிடித்து மக்களைக் கொள்ளையடித்தும், பாண்டு விக்கவும் கோல்ட் விற்கவும் கமிஷன் ( ரேட்டிங்கில் கைவைப்பது ) ஏஜெண்டுகள் போல் மேனேஜர்களை நடத்திய ஐசிஐசிஐ பாங்க் ஆஃப் மதுராவின் முன்னாள் ஊழியர்களை வன்முறையாக வெளியேற்றியது. ரத்தம் சொட்டாததுதான் பாக்கி. ஒவ்வொரு குடும்பமும் படிக்கும் குழந்தைகளையும் திருமணவயதில் மகள்களையும் வைத்துக் கொண்டு அல்லாடியது மகா கோர சரித்திரம்.

மதுரை வங்கியின் முன்னாள் ஊழியர்களுக்குப் பென்ஷன் வழங்கும் ஆப்ஷனைக் கூடக் கொடுக்கவில்லை. அதே சமயம் பென்ஷன் ஆப்ஷன் கொடுக்காதவர்களுக்குக் கூட மற்ற வங்கிகள் கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. பென்ஷன் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்காதவர்கள் பல்வேறு கம்பெனிகள், வங்கிகள், நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தார்கள். ஆனாலும் பலர் நொந்து வெந்து வாழ்வை இகழ்ந்து போனார்கள்.

இதற்கும் இன்றைய சந்தா கோச்சார் முறைகேடாக கடன் வழங்கிய ஊழலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை ஆனால் உயிரைக் கொடுத்து உழைத்தவர்களை உதாசீனம் செய்த ஒரு நிறுவனத்துக்கு இதெல்லாம் வேண்டியதுதான்.

இன்னும் மற்ற வங்கிகளிலும் இதெல்லாம் நடைபெற்று வருகிறது. இதே போல் லோன் பார்ட்டிகளிடமெல்லாம் பணம் பெற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

வாராக் கடன்கள் வேறு. கோடீஸ்வரனிலிருந்து கல்விக் கடன் வரை திரும்புவது நிச்சயமில்லை. எந்த நேரம் எந்த வங்கி எதனோடு மெர்ஜ் ஆகும் என்று தெரியவில்லை. ஏதோ தெய்வபலத்தில்தான் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற நினைப்பு வேண்டும்.

மேலும் என்றைக்கிருந்தாலும் தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மை.

பாங்க் ஆஃப் செட்டிநாடு என்று ஒன்று இருந்தது , அது மதுரை வங்கியுடன் மெர்ஜ் ஆனது 1960- 70 களில். இது தனியார் வங்கிதான் பழனிசாமி சார். நான் சொல்ல வந்தது வங்கிகளைத் திவாலாக்கும் நம்பிக்கை நட்சத்திரங்களைப் பற்றி. மேலும் முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் உருப்படியாக உழைத்த மக்களைப் பற்றி ( அவர்கள் எல்லா ஜாதி மதம் இனத்திலிருந்தும் வந்தவர்கள். பாதிப்பேர் செட்டிநாட்டுப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம். ) அவர்களின் பாதரவு பற்றி.

2053. விடுவித்தல் எளிதாயிருக்கிறது. முரண்களோடு சேர்ந்து இருப்பதுதான் கடினமாயிருக்கிறது. :)

2054. பாலைக் காதல் பாடல்கள்

#காற்றே என்வாசல் வந்தாய்...

#சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா.

2055. புறாக்கள் வசித்த இடம்..

2056. காரைக்குடியைத் தேடி வருதே. ஜெய்னிகா நெய்ரோஸ்ட் <3 p="">#ஃபுட்_லவ்.


2057. கற்பனைதான் எவ்வளவு சுகமானது. Queen of Queen K. R. Vijaya  மனதை மயக்கும் இசையும் வரிகளும்..

#தொடுவதென்ன தென்றலோ மலர்களோ.

2058. ஆமா. நா ரொம்பக் கோவக்காரிதான். என்னோட யாரும் இருக்க முடியாது. நானும் இருக்கமாட்டேன்

2059. வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது. சொல்லியபின் சிதைத்தல் அவற்றைக் கொல்வது போல். வார்த்தைகள் உண்மையானால் வாழ்க்கையும் உன்னதமாகும்..

2060. 70’S KIDS ATROCITIES. :)

சுதா எஸ் நாராயணன் பேஜுக்குபதில் கொடுத்தது .

SUDHA :- கோவை இலையில சிலேட்டு அழிச்ச 70 ஸ் கிட்ஸ் நாங்க

ME :-அப்பிடியே நாம குச்சி தின்னு அடி வாங்குனதையும் சொல்லணும் ஹாஹா

SUDHA :- அப்பா தினம் தந்த பாக்கெட் மணி 5 பைசால ஸ்கூல் வாசல் ஆயா கடைல காலைல 3 பைசாக்கும் மதியம் 2 பைசாக்கும் மிட்டாய் வாங்கி தின்ன 70ஸ் கிட்ஸ் நாங்க

ME :- காசே தரமாட்டாங்கப்பா. வேணும்னா வீட்டுல வாங்கி வைக்கிறோம் தின்னும்பாங்க .

SUDHA :- வானத்ல பறக்ற நாரைய பாத்து பூபோடுனு பாட்டு பாடி அது விரல் நகத்ல பூபோட்டதா நம்புன 70ஸ் கிட்ஸ்

ME :- அது கருடன் இல்லையா.கருடா கருடா பூப்போடு , கருடாதம்பி மாப்போடுன்னு சொல்வோமே :)

டிஸ்கி :-4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


2 கருத்துகள்:

 1. அனைத்தும் ரசித்தோம்...குறிப்பா 2 பைசா, 5 பைசாவுக்கு குச்சி மிட்டாய் வாங்கித் தின்னது....துளசிதரன்

  எங்க வீட்டுல பைசாவே தரமாட்டாங்க - கீதா

  படங்கள் சூப்பர் ஏகாந்த படமும் நெய் ரோஸ்டும் ஆஹா

  பதிலளிநீக்கு
 2. அஹா நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...