2521. காரைக்குடி கம்பன் மண்டபத்தில் நடக்கும் புக்ஃபேரில் ஸ்டால் வாடகை பதினோரு நாளுக்கு 4,500 ரூபாய். (ஷெல்ஃபுகள் உட்பட). இதுபோக புத்தகங்கள் கொண்டு வரும் எடுத்துச் செல்லும் பயணச் செலவுகள், இரு ஊழியருக்கான பயணப்படி, உணவு, தங்கும் செலவுகள் தனி. பத்து பர்சண்ட் புக் வாங்குபவர்களுக்குத் தள்ளுபடி.
பத்து நாளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றால் இருபதாயிரம் லாபம். இதில்தான் மேற்கூறிய செலவுகள் அடங்கும். பத்து நாள் உழைப்பிற்கு ஐயாயிரம் கிடைத்தால் எதேஷ்டம். ( கடை போட்டவருக்கு).
ராயல்டி பற்றிய பதிவுகள் அடிக்கடி கண்ணில் படும். சொல்லப் போனா பதிப்பாளர், எழுத்தாளர், விற்பனையாளர்களில் வெகு சிலரைத் தவிர மற்றையோருக்கு வேறு தொழிலோ உத்யோகமோதான் வாழ்வை நன்முறையில் கொண்டு செல்ல உதவும்.
2522. அதீத மனப்பிறழ்வில் இருப்பவர்களும், வரட்டுத்தனமாக வறுமையில் தங்களை ஆழ்த்திக்கொண்டவர்களும் எழுதுவதுதான் சிறந்த எழுத்து என கொண்டாடப்படுகிறது. என்ன அளவுகோலோ..
பித்துப் பிடிச்சு உளறணும் அல்லது பிரக்ஞை தவறித் திட்டணும். தட்ஸால்
அதே போல் முறை தவறிய உறவுகளைப் பத்தி எழுதணும். இல்லாட்டா இரட்டை அர்த்தத்துல எழுதணும்.