எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ரூஃபினா ராஜ்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரூஃபினா ராஜ்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 டிசம்பர், 2018

ரூஃபியின் ஆணை.

நம்மை விளித்துத் தோழி ஆணையிட்டால் அதை சிரமேற்கொண்டு முடிக்காவிட்டால் எப்படி. அதான் :)

Rufina Rajkumar இந்த விளையாட்டில் என்னைச் சேர்த்திருக்கிறார். நன்றி ரூஃபி.

1. தூக்குத் தூக்கி.

”தூக்குத் தூக்கி” இந்தப் படத்தின் பாடல்கள் எனக்குப் பிடித்தன. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், சுந்தரி சௌந்தரி நிரந்தரியே,படம் முழுசா ஞாபகம் இல்லை ஆனால் இதில் முக்கியமா சிவாஜி சொன்னதையே திருப்பிச் சொல்லுவார். சின்னப் பிள்ளையில் அப்படி அம்மாவிடமும் தோழிகளிடமும் பேசிவாங்கிக் கட்டி இருக்கிறோம்ல. அதான் ரொம்பப் பிடிச்சிது :) ( கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கேட்பாள் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் நண்பன் இந்த ஐந்தையும் படத்தில் மெய்ப்பிக்க சிவாஜி முயற்சிப்பார். அதை சொல்லி என்னை யாரும் அடிக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொல்’கிறேன் :)

விளையாட்டின் விதிகள் எளிதானவை. தொடர்ந்து 10 நாட்களுக்கு, உங்களை மிகவும் பாதித்த, உங்கள் ரசனை/ சிந்தனையின் மீது ஓரளவேனும் ஆதிக்கம் செலுத்திய ஒரு திரைப்படத்தின் பிம்பம் ஒன்றை இங்கே பதிவிடவேண்டும். ஏதும் விளக்கவுரைகள் எழுதத் தேவையில்லை; படம் மட்டுமே போதுமானது; விருப்பமிருந்தால் படத்தின் பெயரைச் சொல்லலாம், மேலும் பலர் அதைப் பார்த்து ரசிக்க வாய்ப்பாக அமைய). தினம் உங்கள் நண்பர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும், விளையாட்டைத் தொடர்ந்து மேற்செலுத்திச் செல்ல.

நான் அழைப்பு விடுப்பது Revathi Narasimhan வல்லிம்மா அவர்களுக்கு

2.சபாபதி.

”சபாபதி” இந்தப் படம் என்னை பெரிசா பாதிச்சிச்சுன்னு, ஆதிக்கம் செலுத்துச்சுன்னுல்லாம் சொல்ல முடியாது. ஆனா சோவோட கண்ணு மாதிரி தெறிச்சு விழுறாப்புல முட்டைக் கண்ணோட டி ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது சிரிப்பு வரும். எங்க ஆயா வீட்டு ஐயா அடிக்கடி டெக்கில ( வி சி ஆர் ) போட்டுப் பார்ப்பாங்க. அப்போ பார்த்தது. ஏவிஎம் தயாரிப்பு. பர்ஃபெக்ட்.

நான் அழைப்பு விடுப்பது Kalyani Shankar நானானிம்மா அவர்களுக்கு.

வெள்ளி, 4 மார்ச், 2011

பூவாய் நீ...

பூவாய் நீ..

நினைவின் தோட்டம்.. காதல் கோட்டம்.. 

எப்போதாவது என்னை நினைப்பாயா..  உன் நறுமண உலகில்தான் நான் இறகாய் சுழல்கிறேன். நிற்காத சுழற்சி. 

சின்னஞ்சிறு பூக்களாய் விரிந்து கிடக்கிறது நினைவு.. உன்னையும் ஒரு பூவாய்த்தான் பார்த்தேன்.. முள்ளோடு கூடிய பூ.. அதற்குத்தானே கிராக்கி அதிகம்.. நீ புன்னகைத்ததை விட குத்தி காயமாக்கியதே அதிகமாய் இருக்கும்..

அடர் வனமொன்றில் கேட்பாரற்று அலையும் யானையைப் போலிருந்தேன்.. எனக்கு மதம் கொண்டதென்று எதிர் வரவில்லை யாரும்.. நீ வந்தாய் ஒரு தேனீயாகவோ குளவியாகவோ கவனம் சிதைத்தாய்.. உன்னைத் தும்பிக்கையில் வசமாக்கிவிட வீசித் துரத்த வைத்து.. கண்மண் தெரியாமல் காடுகரை மேடு எல்லாம் ஓட வைத்து., களைத்து நான் அமரும் போது காதுக்கருகே வந்து “நொய்ங்ங்” என்கிறாய்..

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

நான் சிவகாமி....!!!

நான் சிவகாமி.. ஆம் .. மாமல்லனின் காதலி.. விரிந்த தோள்களும் பரந்த மார்புமாய் மல்லர்களை ஜெயித்த நரசிம்ம வர்ம பல்லவன்தான்.. காத்திருக்கிறேன் அவனுக்காய்.. ஆம்பலும் குவளையும் கொட்டிக் கிடக்கும் வாவியில் அவன் காலடித்தடங்களை வருடியபடி..

எனக்காய் எத்தனை வீரத்தழும்புகள் அவன் மார்பில்..தேடி வந்தானே என்னைத்தேடி..சாளுக்கியரை அழித்து., நாகமான நாகநந்தியை நசுக்கி..

என் தந்தை ஆயனச்சிற்பியுடன்..மகேந்திரரின் அநுக்கிரகத்தில்... எங்கள் கலை சார்ந்த வாழ்வு .. நான் நடனமாட..என் தந்தை என் எல்லா அபிநயங்களையும் சிலைகளாக செதுக்கி.. எத்தனை பாவங்கள்.. எத்தனை சிலைகள்..
Related Posts Plugin for WordPress, Blogger...